அரூப நர்த்தனம் - வசந்தகுமரன்
கோ.வசந்தகுமாரன் அவர்கள் எழுதிய அரூப நர்த்தனம் என்கிற குறுங்கவிதைத் தொகுப்பினை ஒரு நண்பகல் வேளையில் வாசிக்க விளைந்தேன்...
புத்தகத்தின் வாசற்படியினை கடந்து உள்ளே செல்லச் செல்ல மந்திரச் சொற்களால் வடிவமைத்த கண்ணாடியை போல் இங்கே குறுங்கவிதைகள் பல நம் முகத்தை நமக்கே கண் சிமிட்டி காட்டுகின்றன...
தரையில் விழுந்த மீனைப் போல் துடிக்க வேண்டும் குறுங்கவிதைகளில் சொற்கள் என்கிற இவரின் பொன்னான வரிகளை இத்தொகுப்பினை வாசிக்க வாசிக்க என் கற்பனைகளின் உலகத்தில் புதியதோர் உயிர் காற்று நுழைந்து தேகத்தை துள்ளியெழ வைத்து மனச்சிறகை விரித்து பறக்கத் தூண்டுகிறது...
ஏறக்குறைய ஒரு வார காலமாக என் நினைவில் நீந்தி செல்லும் வித்தைச் சொற்களை விதைத்த இவருக்கு என் மூளையின் நரம்புச் செல்கள் "குறுங்கவிதைகளின் ஞானி"என்கிற புதியப் பெயர் ஒன்றை சூட்டி ஆனந்தக் கூத்தாடி மகிழ்கிறது...
வாசகனின் நினைவு ரேகைகளில் நிழலோடி கிடக்கும் படியான சொற்களை கோர்க்கும் வித்தையில் கைத்தேர்ந்தவராக இலக்கிய வட்டத்தினுள் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் என்பதை இந்த அரூப நர்த்தனத் தொகுப்பின் மூலம் வாசகர்களின் மனதில் நிலையான இடத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்கிறார்...
என் மனதில் பதிந்த இவரின் சில முத்திரை வரிகளை எடுத்துக்காட்டி தங்களுடன் பெருமகிழ்ச்சிக் கொள்கிறேன்...
-இவ்வரிகள் எதை விதைத்தோமோ அதையே பெருகிறோம் என்பதனை வாழ்வியலோடு ஒப்பிட்டு பார்த்து வியக்க வைக்கிறது.
- இவ்வரிகள் மனிதனின் இரு குணங்களை தராசு போல் நிறுத்திக் காட்டி நீதியும் சொல்கிறது.
தாழ்ந்தவன் ஒரு காலத்தில் வாழ்ந்தவனாகவும் இருக்கலாமென்று அவனை உங்களின் கருணை பார்வையால் ஒரு பொழுதும் மிதித்து விடாதீர்களென்று கனிந்துச் செல்கிறது...
- இவ்வரிகள் உலகத்தின் தத்துவ கவிதைகளை எல்லாம் ஒருபுறமாக ஓரங்கட்டி வைக்கிறது,இக்கவிதையின் ஆழ்ந்த ஞானம் வாசித்து தெளியும் வாசகனுக்கு வாசகன் என்ற முறையில் என் வாழ்த்துகள்.
-இவ்வரிகள் நம் மனதில் வெற்றிக்கான முயற்சியின் மேல் ஆசையினை நிலைநிறுத்திக் கொள்ளும் பொழுது வெற்றியும் அதற்கான பயனும் வந்து சேரும் என்பதை ஆறே சொற்களில் நம்மை ஆற்றுப்படுத்தும் கவிஞரின் எளிய கைவண்ணக் கவிதை இது.
- இவ்வரிகளில் இங்கே குளித்து முடித்த பின் நங்கையின் நளினத்தையும் நதியின் பாசையையும் பாடும் கவிஞர்களுக்கு மத்தியில் மங்கையின் மீன்விழிகளை புதிதாக வந்து சேர்ந்த கெளுத்தி மீன்கள் என்று கொண்டாடிக் கொண்டிருந்த நதி அவள் எழுந்து போனபின் களவு போன மீன்களைத் தேடி கவலை கொள்கிறது என ஒரு பிம்பத்தினை வடித்து காட்டுகிறார் கவிஞர்.
- இவ்வரிகள் ஆறுதலாய் சேரும் உயர்திணைகளுக்கு மத்தியில் தான் பெற்ற துன்பத்தின் விழுப்புண்களை நேசிக்க வைக்கிறது...
-ஆம் இவ்வரிகளை வியந்து வியந்து பார்க்கிற பொழுது தெளிந்த ஒரு முடிவு எடுக்கும் சூழ்நிலையினை நமக்கு நாமே உருவாக்கி கொள்ள வேண்டும் என்கிற மனநிலைக்கு கடத்திப் போகிறது...
-ஆம் இவ்வரிகளுக்குத்தான் அவரக்கு புதிய பெயரை சூட்டி மனம் இன்பத்தில் திளைக்கிறது...
வாழ்க்கையின் மீதான கண்ணோடத்தை வேறு படுத்திக்காட்டும் முக்கிய கவிதைகளில் இதுவும் ஒன்று...
-இவ்வரிகளில் காதலின் நுணுக்கத்தை கவிதையாக சொல்லி காதலர்களுக்கு இடையே நடக்கும் கூடலும் ஊடலுமாய் சொல்லாத வார்த்தைகளில் உச்ச உணர்வை வாசகனின் மனத்திரையில் ஒலி ஓவியமாக தீட்டி சிலிர்க்க வைக்கிறது... அதுமட்டுமின்றி அவரவர் காதலியின் பிம்பத்தினை நினைக்க தூண்டுகிறது...
-இவ்வரிகளைப் படித்து முடித்த பின் அடடே என்று சொல்லி
வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.
இக்குறளை நினைவு படுத்தி இதயத்தின் தசைநார்களில் புதியதொரு உணர்வுப் பாய்வதை உணர்ந்து கொள்ள முடிகிறது... எத்தனை எளிமையான சொற்கள் எத்தனை வலிமையான எண்ணங்கள் எத்தனை எத்தனை கற்பனைகளின் ஓவியம் அத்தனையுமாய் ஐந்தே சொற்களில் நம்மை ஆகாயத்தில் ஏற்றி பறக்க வைக்கிறார்...
கவிஞன் பயன்படுத்துகின்ற சொற்களின் கூட்டமைப்பில், பயன்படுத்தாத சொற்களின் வலிமையினை கிரகித்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் பொருந்திய கலையினைக் கொண்டு கடவுளுக்கு நிகரான படைப்பாளான உருமாறும்
தருணத்தை இவரின் அரூப நர்த்தனத் தொகுப்பின் மூலம் உணர்ந்துக் கொள்ள முடிகிறது...
இத்தொகுப்பில் எடுத்துச் சொல்லக்கூடிய இன்னும் எத்தனையோ தீயை ஒத்த கவிதை வரிகள் இருக்கின்றன அதை எல்லாம் வாசகனை வாசிக்க விட்டு அவனது துள்ளல்களை காண நூலின் ஆசிரியரை போல் நானும் ஓர் வாசகனாய் காத்திருக்கிறேன்...
ஆசிரியருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்...

எதற்காக வாழ்கிறோம்
என்பது தெரிந்து விட்டால்
எதற்காக சாகிறோம்
என்பதும் தெரிந்து விடும்...
என்பது தெரிந்து விட்டால்
எதற்காக சாகிறோம்
என்பதும் தெரிந்து விடும்...
-இவ்வரிகள் எதை விதைத்தோமோ அதையே பெருகிறோம் என்பதனை வாழ்வியலோடு ஒப்பிட்டு பார்த்து வியக்க வைக்கிறது.
உதிர்ந்து கிடக்கும் இறகை
மிதித்து விடாதீர்கள்
ஒரு காலத்தில் அது
உயரத்தில் இருந்தது...
மிதித்து விடாதீர்கள்
ஒரு காலத்தில் அது
உயரத்தில் இருந்தது...
- இவ்வரிகள் மனிதனின் இரு குணங்களை தராசு போல் நிறுத்திக் காட்டி நீதியும் சொல்கிறது.
தாழ்ந்தவன் ஒரு காலத்தில் வாழ்ந்தவனாகவும் இருக்கலாமென்று அவனை உங்களின் கருணை பார்வையால் ஒரு பொழுதும் மிதித்து விடாதீர்களென்று கனிந்துச் செல்கிறது...
புத்தனை நான்
வணங்குவதில்லை
ஆசைகள் துறந்தவன்
வரங்களையா
வைத்திருக்கப்போகிறான்
வழங்க...
வணங்குவதில்லை
ஆசைகள் துறந்தவன்
வரங்களையா
வைத்திருக்கப்போகிறான்
வழங்க...
- இவ்வரிகள் உலகத்தின் தத்துவ கவிதைகளை எல்லாம் ஒருபுறமாக ஓரங்கட்டி வைக்கிறது,இக்கவிதையின் ஆழ்ந்த ஞானம் வாசித்து தெளியும் வாசகனுக்கு வாசகன் என்ற முறையில் என் வாழ்த்துகள்.
நதி வரைந்தேன்
எங்கிருந்தோ வந்து
சேர்ந்தன மீன்கள்...
எங்கிருந்தோ வந்து
சேர்ந்தன மீன்கள்...
-இவ்வரிகள் நம் மனதில் வெற்றிக்கான முயற்சியின் மேல் ஆசையினை நிலைநிறுத்திக் கொள்ளும் பொழுது வெற்றியும் அதற்கான பயனும் வந்து சேரும் என்பதை ஆறே சொற்களில் நம்மை ஆற்றுப்படுத்தும் கவிஞரின் எளிய கைவண்ணக் கவிதை இது.
அவள் குளித்து
கரையேறிய போது
இரண்டு கெளுத்தி மீன்களை
இழந்து இருந்தது நதி...
கரையேறிய போது
இரண்டு கெளுத்தி மீன்களை
இழந்து இருந்தது நதி...
- இவ்வரிகளில் இங்கே குளித்து முடித்த பின் நங்கையின் நளினத்தையும் நதியின் பாசையையும் பாடும் கவிஞர்களுக்கு மத்தியில் மங்கையின் மீன்விழிகளை புதிதாக வந்து சேர்ந்த கெளுத்தி மீன்கள் என்று கொண்டாடிக் கொண்டிருந்த நதி அவள் எழுந்து போனபின் களவு போன மீன்களைத் தேடி கவலை கொள்கிறது என ஒரு பிம்பத்தினை வடித்து காட்டுகிறார் கவிஞர்.
களிம்பு தடவாதீர்
நான்
காயங்களால்
சுவாசிக்கிறவன்...
நான்
காயங்களால்
சுவாசிக்கிறவன்...
- இவ்வரிகள் ஆறுதலாய் சேரும் உயர்திணைகளுக்கு மத்தியில் தான் பெற்ற துன்பத்தின் விழுப்புண்களை நேசிக்க வைக்கிறது...
வெளிச்சம்
தேவைப்படுகிற போது
விளக்குகளை
அணைத்துவிடுவேன்...
தேவைப்படுகிற போது
விளக்குகளை
அணைத்துவிடுவேன்...
-ஆம் இவ்வரிகளை வியந்து வியந்து பார்க்கிற பொழுது தெளிந்த ஒரு முடிவு எடுக்கும் சூழ்நிலையினை நமக்கு நாமே உருவாக்கி கொள்ள வேண்டும் என்கிற மனநிலைக்கு கடத்திப் போகிறது...
மரணத்திற்காகக்
காத்திருக்கும் வேளையில்
பொழுதுபோக்குவதற்காக
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...
காத்திருக்கும் வேளையில்
பொழுதுபோக்குவதற்காக
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...
-ஆம் இவ்வரிகளுக்குத்தான் அவரக்கு புதிய பெயரை சூட்டி மனம் இன்பத்தில் திளைக்கிறது...
வாழ்க்கையின் மீதான கண்ணோடத்தை வேறு படுத்திக்காட்டும் முக்கிய கவிதைகளில் இதுவும் ஒன்று...
இப்பொழுதே வேண்டும்
என்கிறாள்,
இது பகலாயிற்றே என்கிறேன்
பூவிழிகள் மூடிக்கொண்டால்
இரவு கிடைத்துவிடுமே என்கிறாள்.
அக்கம் பக்கம்
கேட்குமே என்கிறேன்.
கவிதைதானே கேட்டுவிட்டுப்போகட்டுமே என்கிறாள்...
என்கிறாள்,
இது பகலாயிற்றே என்கிறேன்
பூவிழிகள் மூடிக்கொண்டால்
இரவு கிடைத்துவிடுமே என்கிறாள்.
அக்கம் பக்கம்
கேட்குமே என்கிறேன்.
கவிதைதானே கேட்டுவிட்டுப்போகட்டுமே என்கிறாள்...
-இவ்வரிகளில் காதலின் நுணுக்கத்தை கவிதையாக சொல்லி காதலர்களுக்கு இடையே நடக்கும் கூடலும் ஊடலுமாய் சொல்லாத வார்த்தைகளில் உச்ச உணர்வை வாசகனின் மனத்திரையில் ஒலி ஓவியமாக தீட்டி சிலிர்க்க வைக்கிறது... அதுமட்டுமின்றி அவரவர் காதலியின் பிம்பத்தினை நினைக்க தூண்டுகிறது...
பூக்களின்
உயரம் வரைதான்
வண்ணத்துப்பூச்சிகளின் ஆகாயம்...