புரோட்டாவும் ஆம்லெட்டும் - மனோந்திரா
சமூக அக்கைறயுள்ளதும்.... நுட்பமான விசயங்களைப் போகிறபோக்கில் பதிவுசெய்வதுமான படைப்புகள் தனது இருப்பை தடம் பதிக்க என்றுமே தவறுவதில்லை. அத்தகைய படைப்புலகில் எழுத்திலும்...வாசிப்பதிலும் என்று சிறுகைதகளுக்கான முக்கியத்துவமும் வரேவற்பும் அலாதியானது. கற்பனைகளின் போக்கிலான கதைகளை விட...அனுபவங்களின் போக்கிலான கதைகளின் உண்மைகளும்...சுவாரஸ்யங்களும் சம காலத்தின் பதிவுகளாவது கண்கூடு.
சில பயணங்கள் சில அனுபவத்தைத் தருகின்றன. சந்திக்க வாய்க்கும் சில முகங்கள் சில அனுபவத்தைத் தருகின்றன. அப்படியான அனுபவங்களின் கோர்வை என்பது... பகிர்தலின் அடிப்படையில் எழுத்துக்களாகும் போது ...வாசிப்பவர்கள் அனுபவமும் கைகோர்த்துக் கொள்வது தவிர்க்க இயலாது. மனோந்திராவின் இச்சிறுகதை நூலும் அத்தகையதே.
எழுத்தாளர் மனோந்திராவின் கவிதைகள் கவிதை உலகில் பிரசித்தமானவை. தற்போது தன்னை சிறுகதை எழுத்தாளராகவும் இந்த நூல் மூலம் அடையாளப்படுத்தியிருக்கிறார். கீற்று..கல்கி..வணக்கம் லண்டன் உள்ளிட்ட இணைய இதழ்களின் பிரசுரங்கள் அடங்கிய தொகுப்பு இது.
இந்த நூலின் கதை மாந்தர்கள் எல்லோரும் எளிய மனிதர்களாகவும் இயல்பானவர்களாகவும் இருப்பது சிறப்பு. குறிப்பாக முனீஸ்வரன் கதையில் எல்லைக்கல் தெய்வமாக கிராமத்தாரால் வழிபடப்படுவது பதிவாகியுள்ளது. இது வரலாற்று தொடர்புைடயதாகும்.
சோழர்கள் காலத்தில் சிவாலயங்களின் நிலதான எல்லைகளுக்கு திரிசூலக்கல் நட்டு அடையாளப்படுத்தி அரசாண்ட வரலாறு உண்டு. காலப்போக்கில் அந்த நிலதான எல்லைக்கற்கள் வழிபாட்டுக்குரியதாக மாற்றம் பெற்றன என்பது கண்கூடு. இதை உள்ளடக்கிய முனீஸ்வரன் கதை தொன்மங்கள் பற்றிய நினைவுகளைக் கிளறுகிறது.
முனீஸ்வரன் கதை எவ்வாறு வரலாற்று தொன்மங்களுடன் மூடநம்பிக்கையை போகிறபோக்கில் பதிவு செய்கிறேதா...அது போல புரோட்டாவும் ஆம்லெட்டும் கதை புரையோடி செல்லரிக்கும் சாதியவன்மங்களுக்கு எதிராக சாட்டையைச் சுழற்றுகிறது. ஆதிக்க சாதியினரின் வெறியால் பாதிக்கப்பட்ட மல்லையா என்பவர் என்னவாகிறார் என்று வாசிக்கும் போது இதை ஏதோ ஒரு சிறுகதை என்று நம்மால் கடந்து செல்ல இயலவில்லை. சாதிய வேறுபாட்டின் முகத்திரையை இச்சிறுகதை கிழித்தெறிய முனைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
காலம் எல்லாவற்றையும் சரி செய்யும் என்று கடந்து போகிறவர்களுக்கு மத்தியில் களத்தில் நின்று சரி செய்யப்பட வேண்டும் என்கிற உணர்வை அந்தக் கதை ஏற்படுத்துகிறது. இன்னும் கூட புலப்பட்டும்...புலப்படாமலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகள்.... மூடநம்பிக்கைகள்...லஞ்சம்....ஊழல்...என்று எண்ணற்ற விசயங்களை இந்தக் கதைகள் பதிவு செய்கின்றன.
நிறைய சிந்தனைகளை இந்தத் தொகுப்பு விதைத்திருக்கிறது. அது நிச்சயமாய் விருட்சமாய் வீரியத்துடன் பரந்து விரிந்து கிளைபரப்பும் என்பதில் ஐயமில்லை. எளியமனிதர்களின் வாழ்க்கையை வேடிக்கை பார்ப்பதற்கும்...அவர்கேளாடு இரண்டறக்கலந்து இருப்பவர்களுக்குமான வித்தியாசங்கள் இந்த தொகுப்பில் வரிசைப்படுகிறது. சமூக நல்லிணக்க அக்கைறயுள்ள படைப்புகள்....சமூக அக்கைறயுள்ள படைப்புகள் அவ்வப்போது படைப்புலகில் வலம் வரத் தவறுவதில்லை.
அந்த வகையில் தனது நாற்பது வருட அனுபவங்களை கடை விரித்து... எழுத்துக்களால் காட்சிப்படுத்தி இருக்கிறார் இந்நூலாசிரியர்.
எழுத்தாளர் மனோந்திராவிற்கு வாழ்த்துகள்.