இருளில் ஒளிரும் நிலா - செல்வகுமார்
கவிதையும் கவிஞனும் நிகழ்காலத்தில் இருந்து இறந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையே இணைக்கும் உணர்வுப் பாலமாக அன்றிலிருந்து இன்று வரை சமூகத்தின் மாற்றத்திற்கு பெரிதும் துணை நின்று வருகின்றான்.
கவிதை என்பது உணர்வுகளின் வெளிப்பாடு எனினும் அவை அனுபவத்தின் ரேகைகளில் நிழலோடி கிடப்பது சாலச் சிறந்தது.
அவ்வகையில் இருளில் ஒளிரும் நிலா என்கிற கவிதைத் தொகுப்பு மூலம் நமக்கு அறிமுகமாகி இருக்கக்கூடிய நண்பரும் கவிஞருமான செல்வகுமார் அவர்களின் கவிதை வரிகள் என்றென்றும் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகின்றன.
கந்தக துகளின் அளவு சிறிது எனினும் அதன் ஏற்படுத்தக் கூடிய விளைவுகள் கணக்கிட முடியாதவையாகும். அவ்வாறே இருளில் ஒளிரும் நிலா என்கிற இந்த கவிதை தொகுப்பு முழுவதிலும் கவிதைகள் ஹைக்கூ வடிவத்திலும் இரண்டு மூன்று வரிகளில் முடிய கூடியதாக இருப்பினும் கூட அவைகள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்பது நடுக் கடலில் கப்பலை நங்கூரமிட்டு நிறுத்துவது போல நம் அலைபாயும் மனதை சில கவிதைகள் அப்படியே தனக்குள் இழுத்து நிலை நிறுத்திக் கொள்கின்றன.
சமுதாயத்திற்கு தேவையான சில அரசியல் கருத்துக்களை போகிற போக்கில் மலர்களுக்கு நீர் தெளிப்பது போல இங்கு கவிதையாக விதைத்துப் போய் இருக்கிறார்...
அவ்வகையில் ஒரு கவிதை என்னை மிகவும் தாக்கத்துக்கு உள்ளாக்கியது.
அடுத்தபடியாக,
வாழ்வில் பொறுமை எவ்வளவு முக்கியம் என்பதை ஒரு கவிதை நமக்கு உள்ளார்ந்த உணர்வை ஊசல் குண்டினைப் போல முன்னுக்கும் பின்னுக்குமாய் அதன் தாக்கத்தின் விளைவுகளை கணக்கிட்டுச் சொல்கிறது. இந்த கவிதைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஒரு கோடி நிகழ்வுகளும் அங்கு விளையும் விளைவுகளையும் வலிகளையும் ஒரு சேர ஓங்கி ஒலிக்கிறது இந்த கவிதை...
இக்கால பெற்றோர்களுக்கு இக்கவிதை ஒரு முன்னுதாரணமாக இருக்கக்கூடும் என நம்புகிறேன். குழந்தைகளை மாணவர்களை ஒரு முறையேனும் சுற்றுலா தலத்திற்கு செல்வதை போல இங்கும் அழைத்துச் செல்லுங்கள். அங்கே ஒவ்வொரு உயிரின் வலிகளையும் வேதனைகளையும் அங்கு நிகழ்ந்த ஆபத்துக்கான பின் விளைவுகளையும் எடுத்துச் சொல்லி கண்களில் வடிகின்ற கண்ணீருக்கான காரணத்தையும் சொல்லிச் சொல்லி நிகழ்கால வாழ்க்கையில் பொறுமை என்பது எப்பேர்ப்பட்ட நன்மையை நமக்கு விளைவிக்கும் என்பதை உணர்த்துங்கள். அது மட்டும் இல்லாமல் இக்கவிதை வாசித்த பிறகு முன் பின் தெரியாத துக்கம் நிகழ்ந்த ஒரு மரணம் நிகழ்ந்த வீட்டிற்கோ அல்லது மயானத்திற்கு நம் இளைய சமுதாய பிள்ளைகளை அழைத்துச் சென்று பெற்றோர்களே அங்கு நடக்கும் விடயங்களை உணர்வுகளின் பிணைப்புகளை அவர்கள் செய்த நன்மை தீமைகளை உறவினர்கள் நண்பர்கள் என யாவரும் சொல்லி சொல்லி எலும்பை உருக்கக்கூடிய அந்த அன்பு நிறைந்த அழுகை சத்தத்தில் இந்த குழந்தைகளை ஒரு நிமிடம் குளிப்பாட்டி வாருங்கள். பின்வரும் காலங்களில் பொறுமை மட்டுமல்ல உறவுகளின் உன்னதத்தையும் தாம் செய்ய வேண்டிய கடமைகளையும் சொல்லாமலே விளங்கிக் கொள்ளக்கூடிய ஒரு அற்புத நிகழ்வாக இருக்கும் என நம்புகிறேன். இத்தகைய சிந்தனையை தூண்டிய இந்த கவிதைக்கும் கவிஞருக்கும் என் தலை வணங்கிய வணக்கங்கள்...
இருளில் ஒளிரும் நிலா என்கிற இந்த கவிதைத் தொகுப்பில் உள்ள மொத்த கவிதைகளையும் எடுத்துச் சொல்ல விளைந்தால் இந்த கவிதை தொகுப்புக்கு இன்னொரு விளக்கத் தொகுப்பாக மாறிவிட கூடும் என்பதை நினைவு கூர்ந்து வாசகர்களுக்கு சில கவிதைகளை கவிஞரின் சார்பாக உங்களின் எண்ணத்தில் தவழ ஆசை கொள்கிறேன் முடிந்தால் ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு ஐந்து நிமிட இடைவெளியை விட்டு வாசிக்க வேண்டும்படி வேண்டுகிறேன். அத்தகைய நுணுக்கமான சொற்கள் உள்ளே நிறைந்து கிடக்கின்றன...
வாசகர்களே ஒரு முறை நீங்களும் இந்த இருளில் ஒளிரும் நிலா கவிதைத் தொகுப்பினை வாசித்து நிலவு ஒளியில் ஓரிரு கவிதைகள் உங்கள் நினைவில் நிழலாட கூடும் என நம்புகிறேன்.
அத்தகைய நிகழ்வு நிகழ்கிற பொழுது கவிதையும் கவிஞனும் வென்று விடுகிறான். இத்தருணத்தில் என்னை பொருத்தவரையில் இக்கவிதையும் இக்கவிஞனும் இங்கே காலத்தால் வென்று வென்று விட்டான் என்று கூறி என் அன்பு நிறைந்த வாழ்த்துக்களும் வணக்கங்களும் மென்மேலும் படைப்புகள் பூத்துக் குலுங்கி தமிழோடு நின்று தரணியெங்கும் புகழ் பெற்று வானுயர வளர்ந்தோங்க வாழ்த்துகிறேன்...

சமாதியில் என்ன தெரிகிறது?
நாம் கட்டிய வரிப்பணம்
வண்ணங்களாக தெரிகிறது...
நாம் கட்டிய வரிப்பணம்
வண்ணங்களாக தெரிகிறது...
அடுத்தபடியாக,
கிளியும்,
குறி சொன்னவனும்,
கேட்டவனும்,
இயல்பு நிலைக்கு சென்று விட்டனர்
எவ்வித மாற்றமும்
இல்லை என்பதால்.
குறி சொன்னவனும்,
கேட்டவனும்,
இயல்பு நிலைக்கு சென்று விட்டனர்
எவ்வித மாற்றமும்
இல்லை என்பதால்.
வாழ்வில் பொறுமை எவ்வளவு முக்கியம் என்பதை ஒரு கவிதை நமக்கு உள்ளார்ந்த உணர்வை ஊசல் குண்டினைப் போல முன்னுக்கும் பின்னுக்குமாய் அதன் தாக்கத்தின் விளைவுகளை கணக்கிட்டுச் சொல்கிறது. இந்த கவிதைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஒரு கோடி நிகழ்வுகளும் அங்கு விளையும் விளைவுகளையும் வலிகளையும் ஒரு சேர ஓங்கி ஒலிக்கிறது இந்த கவிதை...
ஒரு முறையேனும்
அவசர சிகிச்சை பிரிவைப்
பார்த்து வாருங்கள்...
உங்கள் வாழ்வில்
அவசரம் என்பது
அவசியமில்லாமலே போய்விடும்.