யாதும் ஊரே யாவரும் கேளிர்
யாதும் ஊரே யாவரும் கேளிர் - க்ளிக் மதுரை முரளி

யாதும் ஊரே யாவரும் கேளிர் - க்ளிக் மதுரை முரளி

மூன்று கவிதைத்தொகுப்புகள்....இருநிமிடக்கதைகள்....வானொலி நாடகங்கள்... சிறுகதைகள்...வானொலி சிறுகதைகள் என்ற இவரது படைப்பாக்கத்தில்...இது இவரது 12 வது நூலாகும்.

எழுத்தாளர் இந்துமதி அவர்களின் வாழ்த்துரையோடு இந்த நூல் வெளிவந்துள்ளது.

இவருடைய எழுத்துக்களின் வரிசைப்படி கதை...கவிதை...நாடகங்கள் என்பனவற்றின் வாயிலாய் பன்முகப்பட்ட எழுத்தாளராய் எழுத்துலகில் பதிவாகிறார்.

இவரது கதாபாத்திரங்கள் வளர்ப்புப் பெற்றோர்களை தத்து எடுத்துக் கொள்கின்றனர். இவரது சுற்றுலா சார்ந்த கதைப் போக்கில் பல கனவுகளின் நீட்சி...சில நினைவுகளுக்கு சுபமாய் இருப்பதாய் பதிவு செய்கிறது.

குழந்தை கதாபாத்திரத்திற்கு கூட மெய்யழகி என்று தமிழ் மணக்கப் பெயரிடுகிறார். தாத்தாவுக்கும் பேரனுக்கு மான கதை நகர்வில் வாழ்வியலின் தத்துவங்களை இவரது எழுத்துக்கள் பதிவு செய்கிறது.

இன்னொரு கதையில் வழக்காடுமன்றத்தில் தீர்ப்பு வழங்க வேண்டிய நடுவர் பார்வையாளர்களிடம் படிவங்கள் தந்து அதனடிப்படையிலான தீர்ப்புக்கு வித்திட்டு வித்தியாசப்படுகிறார்.

இப்படியாக இந்த நூல் முழுவதும் வரிசைப்படுகின்றன சிறுகதைகள். மணிமேகலை பிரசுரம் இவரது பத்து நூல்களை வெளியிட்டுள்ளது இவரது சிறப்பு.

எழுத்தாளர் முரளி இந்த நூலில் அவரது நூல்களின் வரிசை... அதன் வெளியீட்டு விழா புகைப்படங்கள் மற்றும்...இவரது நூல்களுக்கு பெருந்தகைகள் தந்த வாழ்த்துரை...இவரது நூல்களுக்கு இதழ்களில் வந்த நூல் அறிமுகங்கள் என எல்லாவற்றையும் பதிவு செய்திருக்கிறார்.

நூலின் விலையைக் கூட நன்கொடை என்று அச்சிட்டு வித்தியாசப்படுத்தியிருக்கிறார்.