பூமியெங்கும் புத்தக வாசம் - முருகேஷ்
எந்த ஒரு மனிதனும் தன் துறை சார்ந்த பணியைத் தவிர மற்றொரு துறையில் ஈடுபாடு கொண்டு அதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறானோ அவன் புகழப்படுகிறான். அப்படி தனது பத்திரிகைத் துறை சார்ந்து மட்டுமல்லாமல் தன்னை இலக்கியத்திலும் குறிப்பாக கவிதைகளில் ஈடுபாடு கொண்டு புதியவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுப்பதுடன் கவிஞர்களால் பாராட்டப்படுபவர் மு.முருகேஷ் அவர்கள்.
'தி இந்து' தமிழ் நாளிதழில் பல்வேறு ஆளுமைகளின் புத்தகம் சார்ந்த கருத்துக்களை, எண்ணங்களை கொண்டு வந்தவர். அந்த நேர்காணல்கள் மற்றும் கட்டுரைகள் இப்போது "பூமியெங்கும் புத்தக வாசம்" என்ற புத்தகமாக வந்துள்ளது. புத்தகம் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது. அவை,
1. சிந்தனையால் எழுத்தால் நிறைந்திருப்பவர்கள்...
2. புத்தகங்களால் சிறகு விரித்தவர்கள்...
முதல் பகுதி 51 கட்டுரைகளையும் இரண்டாம் பகுதி 30 கட்டுரைகளையும் கொண்டுள்ளது.
இந்த புத்தகத்தின் முதல் பகுதியில் சில நேர்காணல்களும் உள்ளன. இரண்டாம் பகுதி முழுவதும் ஒவ்வொரு எழுத்தாளரும் தனக்கு பிடித்த, தன்னம்பிக்கை அளித்த, தனது சிந்தனையை மறு உருவாக்கம் செய்த, தங்களைச் செதுக்கிய புத்தகங்களைப் பற்றியும் தற்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களையும் கூறியுள்ளார்கள். இதில் திரைப்படக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல் கட்சியினர் என பலரும் அடங்குவர்.
பெரும்பாலான கட்டுரைகள் 3 பக்கங்களில் அமைந்துள்ளது மிக சிறப்பானதாக இருக்கிறது. அதே நேரத்தில் கட்டுரைகள் இன்னும் நீண்டிருக்கலாமே என்ற எண்ணத்தையும் கொண்டிருக்கிறது. எப்படி ஆனாலும் புதிதாக படிப்பவர்களுக்கு நாமும் புத்தகம் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும், ஏற்கனவே படித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு ஆளுமைகள் சொல்லும் சில புத்தகங்களை நாமும் வாங்கி படிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் கொடுக்கிறது.
உண்மையைச் சொல்ல வேண்டும் எனில் எனது கற்க தமிழா (https://www.karkathamizha.com/) இணையதளம் நடத்துவதற்கு ஒரு வகையில் காரணம் தி இந்து தமிழ் பத்திரிகை என்று கூட சொல்லலாம்.
எந்த மொழியிலும் இல்லாத அளவிற்குத் தமிழில் இலக்கிய வளமும் செழுமையும் கொண்ட நிறைய நூல்கள் உள்ளன. ஆனாலும் கூட தற்போதைய காலகட்டத்தில் புத்தகங்களை வாசிப்பது, வாங்குவது, எழுத்தாளர்களை போற்றுவது மற்றும் கௌரவிப்பது என்பது குறைவாகவே இருக்கிறது. அந்த எண்ணத்தை உறுதிப்படுத்துவது போல உதயசங்கர் அவர்கள் தனது நேர்காணலில், "எப்போதுமே படைப்பாளியை இழந்த பிறகு, அவரது பெருமையைப் பேசும் தமிழ்ச் சூழலில், வாழும்போதே எழுத்தாளர்களைக் கௌரவிப்பதும், அவர்களது படைப்புகள் தமிழ் வாசகத் தளத்தில் எழுப்பிய என்ன அலைகளைப் பதிவு செய்வதும் நல்ல சமூகத்தின் கடமையாகும்" என்று கூறியிருப்பது இன்னும் நமது தமிழ் சூழல் மேம்படவில்லை என்றே தெரிகிறது.
மேற்கண்ட உதயசங்கர் அவர்களின் ஆதங்கத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாக, "தமிழ்ச் சிற்றிதழ்ப் போராளி - சுகன்" என்ற கட்டுரையை குறிப்பிடலாம். தனது 21வது வயதில் சுகன் என்ற கையெழுத்து சிற்றிதழைத் தொடங்கி 28 ஆண்டுகள் ஒரு மாதம் கூட தொய்வின்றி நகலச்சு, அச்சு இதழெனக் கொண்டு வந்த சுதன் தனது 49 வது வயதில் இம்மண்ணிலிருந்து விடைப்பெற்ற செயலைக் குறிப்பிடலாம்.
"ராஜேந்திர சோழன் வென்ற கடாரம் மலேசியாவில் உள்ள பூஜாங் பள்ளத்தாக்கு பகுதியே!" என்ற கட்டுரை, ராஜேந்திர சோழன் வென்றதாகச் சொல்லப்படும் கடாரம் சுமத்திராவிலும், ஜாவாவிலும் இல்லை என்றும் அது மலேசியாவின் பூஜாங் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ளது என்றும் மலேசியா வழக்கறிஞர் டத்தோ வீ.நடராஜன் பல்வேறு ஆய்வுக்குப் பின் 'சோழன் வென்ற கடாரம் - பூஜாங் பள்ளத்தாக்கு' என்று ஒரு வரலாற்று நூலாக ஆவணப்படுத்தி உள்ளதை குறிப்பிடுகிறது.
ஏன் ஹைக்கூ கவிதைகள் எழுதுவதில்லை? ஏன் ஹைக்கூ கவிதைகள் எழுதுகிறீர்கள்? என்ற கட்டுரை இளம் கவிஞர்கள் படித்து தெரிந்து கொள்ள வேண்டியவை.
'ஆழி சூழ் உலகு', 'கொற்கை', 'அஸ்தினாபுரம்' ஆகிய நூல்களின் ஆசிரியர் ஜோ டி குரூஸ்' தனது நேர்காணலில், "என் சமூகத்தோட வாழ்க்கை, கஷ்டம், துயரம் பல நூற்றாண்டுகளாக பேசப்படாமல் கிடக்கு அது எனக்குள்ளேயும் கிடக்கு அது இந்த பொது சமூகத்தில் கொண்டு சேர்க்க புத்தகம் ஒரு வழி" என்றும் "ஒரு படைப்பிற்கு நல்ல எடிட்டர் தேவை" என்றும் "நாடு போய்க்கிட்டுருக்குற சகிப்பின்மைப் பாதையைப் பார்க்குறப்ப மோடிக்கு ஓட்டு கேட்டதற்காக ரொம்ப வருத்தப்படுறேன். நானும் ஏமாந்துட்டேன்" என்றும் தனது நேர்காணலில் கூறியுள்ளார்.
புத்தகங்களால் சிறகு விரித்தவர்கள்... பகுதியில், "இன்றைக்குள்ள கடவுளும் மதமும் அந்நிய முதலீடுகள் என்பதை அறிய முடிகிறது" என்று கூறும் சீமான் தற்போது முருகனை கையில் எடுத்திருப்பது காலத்தின் நகைமுரண்.
"தூங்காத வாசிப்பின் இரவுகள்..." என்ற கட்டுரையில், அறிவியல் எழுத்தாளர் மற்றும் மத்திய அரசின் விக்யான் பிரச்சார் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் தனது வாழ்வில் புகழ்பெற்ற தொழிற்சங்க தலைவர் பி.டி.ரணதிவே அவர்களுடன் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி சுவாரசியமாக கூறியுள்ளார். அதில், கடுமையான வேலை எங்கே படிக்க நேரம்? என்று பி.டி.ரணதிவே இடம் கூறியதாகவும் அதற்கு பி.டி.ரணதிவே முகம் சுருங்கி கொஞ்ச நேரம் கழித்து "ஒரு காரியம் செய்யுங்க. வீட்டுக்குப் போனதும், ஒரு பேப்பரை எடுத்து இயக்கத்துலேர்ந்து விலகிக்கிறதா எழுதி அனுப்பிடுங்க" என்று கடுமையான குரலில் கூறியதை சுட்டிக்காட்டி உள்ளார்.
"வாழ்வைப் புரட்டிய வாசிப்பு நம்புகோல்" என்ற கட்டுரையில் 'தமிழ் நூல் காப்பகம்' பல்லடம் மாணிக்கம் அவர்கள், "கல்வி மறுக்கப்பட்ட ஒரு இனம் மெல்ல மேலெழுந்து வரும்போது, "கடவுள் எனும் பெயரால் அவர்கள் எப்படியெல்லாம் மீண்டும் புதைகுழிக்குள் தள்ளப்படுகிறார்கள் என்பதை படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஆதங்கம் எழும்" என்று பேராசிரியர் அருணன் எழுதிய கடவுளின் கதை புத்தகத்தை சுட்டிக் காட்டியுள்ளார்.
இதிலிருந்து நாம் ஒன்றைத் தெளிவாக தெரிந்து கொள்ளலாம் "ஒரு இனத்திற்கு அல்லது ஒரு மனிதனுக்கு புத்தகம் எவ்வளவு முக்கியம் என்பதையும் அது கொடுக்கும் அறிவையும்."
"நாம் அறியாதவற்றை தேடித்தரும் எழுத்து" என்ற கட்டுரையில் தமிழ்த்தேச விடுதலை இயக்க உறுப்பினர் ப.தியாகு, "தமிழர்களுடைய மரபுவழி அறிவுத் தொகுதியினை உரையாடல் மரபிலும் அதன் உள்ளீடாக விளங்கும் பழமொழிகள், சொல் அடைகள், கதைகள், சடங்குகள் இவற்றின் வழியாகவுமே மீட்டெடுக்கும் முடியும்" என்றும் "பெரியார் மீதான எதிர்மறை விமர்சனங்கள் வருவதற்குக் காரணம் நம் கல்வியறிவின் வக்கிரங்கள். பெரியாரைக் கொண்டாடியது அறிவுலகத்துக்கு ஒரு அடையாளம் என்று கருதப்பட்டதுபோல் இந்தப் பத்தாண்டுகளில் பெரியாரைப் பழிப்பது என்பது அறிவுலத்துக்கு அடையாளம் ஆகிப் போய்விட்டது" என்றும் தொ.ப. கூறியதை குறிப்பிடுகிறார்.
"அறமில்லாத மனிதர்கள் மலிந்துபோன நிலையில், நம்மை இன்னும் அற உணர்வோடு வாழ வைப்பவை இலக்கியங்களே என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்" என்று 'வாசிப்பின் அனுபவ வெளிப்பாடு' என்ற பகுதியில் திரைப்பட இயக்குனர் வசந்தபாலன் குறிப்பிடுகிறார். இது முற்றிலும் உண்மையே.
இந்த புத்தகத்தில் என்னை நெகிழ வைத்த அல்லது மிகவும் கவலை கொள்ள வைத்த ஒரு நிகழ்ச்சி பழநிபாரதி அவர்கள் வலியோடு வாசித்த புத்தகம். ஏற்கனவே இதை நான் தெரிந்து இருந்தாலும் வாசகர்களுக்காகவே மீண்டும் இதைக் குறிப்பிடுகிறேன்.
"தனது 28 வது வயதில் உண்ணாவிரதத்தை தொடங்கி 45 வயதுக்கும் மேல் மிக நீண்ட நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வரும் இரோம் சர்மிளா மணிப்பூரைச் சேர்ந்தவர். மணிப்பூர் ஆயுதப்படை சட்டம் வழங்கியிருக்கும் சிறப்பு அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு, அப்பாவி மக்களைக் கொல்வதும் பெண்களைப் பாலியல் வன்முறைகளால் சிதைப்பதுமாக நடத்தும் அநாகரிகக் கொடுமைகளை எதிர்த்து காந்தியின் அறம் சார்ந்த உண்ணாவிர போராட்டத்தை நடத்தி வருகிறார். அவருடைய இந்த உண்ணாவிரத போராட்டத்தில் இரோம் சர்மிளா அவர்களுக்கு உடல் தளர்ந்து உள்ளுறுப்புகள் பழுதடைந்து மாத விலக்கு நின்று விட்டது; பற்கள் பஞ்சினால் சுத்தம் செய்யப்படுகின்றன. இரைப்பைக்குள் சொருகப்பட்ட குழாய்க்குள் திரவ வடிவத்தில் எதையாவது ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள்." இன்னும் உறுதி குலையாமல் இரோம் சர்மிளா சொல்கிறார்.
"எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சத்தியத்திற்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். தாமதமானாலும் கண்டிப்பாக சத்தியம் வெல்லும் என்று நம்புகிறேன்." என்று கூறுகிறார்.
ஆனால் இறுதியில் நடந்தது என்ன? எந்த நாட்டில் அறம் சார்ந்த போராட்டம் நடத்தப்பட்டு சுதந்திரம் வாங்கப்பட்டதோ அதே நாட்டில் ஒரு பெண் மீண்டும் அதே அறம் சார்ந்த உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் அந்த நாட்டில் அதற்கு பலம் இல்லாமல் போய் விட்டது என்பதே நிதர்சனமான உண்மை.
முதல் பகுதியில் உள்ள கட்டுரைகளில் 5,6,10,15,19 போன்ற சில கட்டுரைகள் புத்தகம் சாராத கட்டுரைகளாக இருப்பதால் இந்தத் தொகுப்பில் அதனைத் தவிர்த்திருக்கலாம்.
இரண்டாம் பகுதியில் உள்ள கட்டுரையில் பல ஆளுமைகள் திராவிட இயக்க நூல்களையும் இடதுசாரி நூல்களையும் படித்திருப்பது தெரிகிறது.
நாம் ஏன் புத்தகம் படிக்க வேண்டும். கவிஞர் பழநிபாரதி கூறியதையே நானும் கூறுகிறேன். "எனக்கு மதுகுடிக்கும் பழக்கம் இல்லை. ஆனால், குடிகாரனைப் போலவே எனக்கும் மகிழ்ச்சியைக் கொண்டாட ஒரு புத்தகம் தேவைப்படுகிறது. துக்கத்திலிருந்து மீளவும் ஒரு புத்தகம் தேவைப்படுகிறது."