ஔரங்கசீப் - இந்திரா பார்த்தசாரதி
காலம் காலமாக ஒரு குறிப்பிட்ட சமூகம் மற்றொரு ஒரு சமூகத்தின் மீது அவதூறுகளையும் அபாண்டங்களையும் எழுதியும் பேசியும் வந்திருப்பதை நாம் எல்லோரும் அறிந்து இருக்கிறோமா? அது மட்டும் இல்லாமல் உண்மைக்கு புறம்பாக அவ்வாறாக எழுதியும் பேசியும் அந்த அபாண்டங்களில் இருந்து அரசன் கூட தப்பவில்லை என்பது நாம் தெரிந்திருக்கிறோமா? அப்படி இறந்தும் அவதூறுகளை எதிர்கொண்டிருப்பவர் மொகலாய சாம்ராஜ்யத்தின் மாமன்னர் ஔரங்கசீப்.
பொதுவெளியிலும் பாடப் புத்தகங்களிலும் கொடுங்கோலன் என்றும் தனது சகோதரர்களை கொன்ற கொலைகாரன் என்றும் அவதூறாக பேசப்பட்ட இந்த ஔரங்கசீப் எப்படிப்பட்டவன் என்பதை எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் தனது "இடக்கை" நாவலில் ஓர் இடத்தில் தனது பணிப்பெண்ணான அஜ்யா என்பவரிடம் ஔரங்கசீப் கூறுவதாக ஒரு வசனத்தைக் கீழே குறிப்பிடுகிறார்.
"அஜ்யா, கடிதம் என்ன, என் உயிலில் உன்னைப் பற்றி எழுதிவிடுகிறேன். நீயில்லாமல் என் இறுதிக் காரியம் நடக்காது. என் கைப்பட குரான் எழுதிக் கிடைத்த வருவாயை உன்னிடம் ஒப்படைக்கிறேன். அதில்தான் எனது சவத்துணி வாங்கப்பட வேண்டும்."
தனது இறுதி காரியத்திற்காக தான் சம்பாதித்த வருமானத்தைக் கொண்டே சவத்துணி வாங்கப்பட வேண்டும் என்று கூறியவன் காலம் முழுவதும் சில மனிதர்களால் அவதூறுகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டவனைப் பற்றி இந்திரா பார்த்தசாரதி அவர்கள் "ஔரங்கசீப்" என்ற பெயரில் நாடகம் ஒன்றை தந்துள்ளார்.
144 பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகம் இரண்டு நாடகங்களைக் கொண்டது. ஒன்று ஔரங்கசீப்(89 பக்கங்கள்) மற்றொன்று நந்தன் கதை(51 பக்கங்கள்).
இந்த ஔரங்கசீப் நாடகத்தில் ஷாஜகான், ஔரங்கசீப், தாரா, ஜகனாரா, ரோஷனாரா மற்றும் சிலர் பாத்திரங்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். இது மொத்தம் மற்றும் 4 காட்சிகளுடன் அமைந்துள்ளது.
ஒவ்வொரு மனிதர்களுக்கு இடையேயும் கனவுகள் உண்டு. இங்கு தந்தைக்கும் தனயன்களுக்கும் வேறு வேறான கனவுகள். இதை இந்த நாடகத்தில் நாம் பார்க்கலாம். ஒவ்வொருவரும் தனது கனவு மிகப் பெரியது என்று நம்புவதால் தனது கனவுகளை யாரும் விட்டுக் கொடுப்பதாக இல்லை. இதுவே அவர்களுக்கு இடையேயான பூதகரமான செயலாக உள்ளது.
முதல் காட்சிலேயே ஔரங்கசீப் மற்றும் அவனது அண்ணன் தாரா இவர்களுக்கு இடையேயான முரண்பாட்டையும் ஜகனாரா மற்றும் ரோஷனாரா இவர்களுக்கு இடையேயான முரண்பாட்டையும் தாரா- ஜகனாரா பாசத்தையும் ஔரங்கசீப்-ரோஷனாரா பாசத்தையும் சுட்டி காட்டுகிறார். சகோதர சகோதரிகளுக்கிடையே உள்ள முரண்பாடுகளை அந்தந்த கதாபாத்திரங்கள் மூலமே கூறுகிறார். ஷாஜகான், தாரா, ஜகனாரா இவர்கள் ஓரணியாகவும் ஔரங்கசீப் மற்றும் ரோஷனாரா ஒரு அணியாகவும் இருப்பதை இந்நாடகம் சுட்டிக்காட்டுகிறது. தாரா தனது கனவை நிறைவேற்றுவான் என்றும் ஔரங்கசீப் தனது கனவை அழித்து விடுவான் என்றும் ஷாஜகான் பதைபதைக்கிறான்.
அதே நேரத்தில் இறந்த காலத்தில் வாழும் ஷாஜகான் தனது மனைவி மும்தாஜின் மீதுள்ள காதல் பைத்தியத்தில் மீண்டும் மீண்டும் மும்தாஜ்க்கு ஒரு தாஜ்மஹால் போல தனக்கு ஒரு கருஞ்சலவைக் கல் மஹல் ஒன்றை தனது மகன் தாரா மூலம் கட்ட வேண்டும் என்று தனது வாழ்வின் எல்லைக்கோட்டில் இருந்து கொண்டு தன்னை மறந்து கனவு கண்டு கொண்டிருக்கிறான்.
தாரா சமயச் சார்பற்ற ஆட்சி ஹிந்துஸ்தானில் உருவாக வேண்டும் என்று நினைக்கிறான். அவன் ஹிந்து மதத்தையும் இஸ்லாம் மதத்தையும் ஒன்றாக வைத்து பார்க்கிறான். உபநிஷங்களை மொழிபெயர்த்தவன். ஆனால் அவன் இஸ்லாமிய மதத்தை ஹிந்துஸ்தானிலிருந்து ஒழித்து கட்ட வேண்டும் என்று நினைப்பதாக எல்லோரும் நினைக்கின்றனர். எனவே ஔரங்கசீப் மற்றும் ரோஷனாரா ஆகியோர் அவனை கடுமையாக எதிர்க்கின்றனர். அதே நேரத்தில் ஔரங்கசீப் 'ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு மதம்' என்று ஹிந்துஸ்தானைப் பற்றி கனவுகள் காண்பதாக ரோஷனாரா ஜகனாராவிடம் கூறுகிறாள். மேலும் அந்த ஹிந்துஸ்தானில் மதுக் கடைகளையும் மங்கையர் விடுதிகளை மூடவும் கலை என்று சொல்லி ஒழுக்கத்தை விலை கூறும் விபச்சாரம் நம் நாட்டில் நடக்கக் கூடாது; இசைக்கும் நடனத்துக்கும் இடமில்லை என்றும் கூறுகிறான்.
தாரா மற்றும் ஔரங்கசீப் இடையே மதத்தை முன்னிலைப்படுத்துவதால் உண்டாகும் பிரச்சனையும் ஷாஜகான் ஜகனாரா மீது அளவு கடந்த அன்பை கொண்டதால் ஜகனாரா, ரோஷனாராக்கிடையேயான பிரச்சினையும் பேசப்படுகிறது.
தாரா, ஜகனாரா இவர்களுக்கிடையே நடக்கும் வெற்றி-தோல்வி, லட்சியம், கனவு உரையாடலை சிறப்பாக அமைத்திருக்கிறார்.
தன் எட்டு வயதில் ஔரங்கசீப் தனக்கு ஏற்பட்ட அனுபவத்திற்காக அவன் தன் அண்ணன் தாராவையும் தந்தை ஷாஜகானையும் வெறுக்கிறான். இருப்பினும் ஓரிடத்தில் தனது உரையாடலில், ஷா-இன்-ஷா ஒரு பேரரசராக ஆண்டவர். வெறும் மனிதனாக மூலையில் உட்கார்ந்திருப்பதைப் பார்க்கும்போது, நான் உடைந்து அவருடைய மகனாக அவர்முன் ஆகிவிடுவேனோ என்ற அச்சம் என்றுப்படுகிறது" என்று தனது பாசத்தை வெளிப்படுத்துகிறான்.
முன்பொரு முறை தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட மாலிக் ஜீவன் என்பவன் தாராவால் காப்பாற்றப்படுகிறான். போரில் தோல்வி அடைந்த தாரா அதே மாலிக் ஜீவனால் காட்டிக் கொடுக்கப்படுகிறான். மாலிக் ஜீவன் சொல்லும் காரணம், தாரா ஓர் இஸ்லாமிய துரோகி. நான் இஸ்லாமுக்கு செய்திருக்கும் மகத்தான தொண்டு என்று கூறுகிறான்.
இந்திரா பார்த்தசாரதி அவர்கள் தனது முன்னுரையில், "மக்களின் நலனைப் பேணும் சர்வாதிகாரியாக இருந்தாலும் சரி, அல்லது அவனே இரக்கமற்ற அரக்கனாக இருந்தாலும் சரி, அவன் 'தனிமையே' அவனுடைய சோகமாக அமைகின்றது" என்று குறிப்பிடுகிறார். ஆனால் எல்லோரும் இருந்தும் ஷாஜகான் தனக்குத்தானே மும்தாஜ் மேல் கொண்ட காதலின் காரணமாக கீழ்க்கண்டவாறு புலம்பி தவிக்கிறான். "மும்தாஜ், மீண்டும் மீண்டும் கருவுயிர்த்து அதனாலேயே கடைசியில் நீ இறந்து போனதற்கு நான்தான் காரணம். உன் கோபத்தில் என் கடைசிக் காலம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நீ சாபம் கொடுத்தாயா? நீ நிச்சயம் கொடுத்திருக்க மாட்டாய். உன் மீது பொறாமை கொண்ட அந்தப்புரத்திலிருந்த வேறு எந்தப் பெண்ணாவது கொடுத்திருக்கலாம். வேறு பெண்!(யோசிக்கிறான்) உன்னைத் தவிர வேறு யாரை எனக்குத் தெரியும்? மும்தாஜ், மும்தாஜ்... என்று புலம்புகிறான்.
நாடகத்தின் இறுதியில் ஔரங்கசீப், "நான் மத வெறியனா? இல்லாவிட்டால் பாசத்துக்காக ஏங்கிய அனாதையா? எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்னை இவ்வளவு கொலைகள் செய்யும்படி தூண்டியது எது? காரணத்தை ஆராய்வது என் பொறுப்பல்ல. சரித்திரந்தான் சொல்ல வேண்டும். நிகழ்ச்சிகள் என் கண்முன் வந்து நிற்கின்றன. ஆடி ஓய்ந்திருக்கும் கிழவன் நான். நானே சரித்திரமாக மாறிவிட்டேன்" என்று கூறு கிறான்.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக எண்ணங்கள்; தனித்தனியாக கனவுகள் உண்டு. ஆனால் ஒரு சாம்ராஜ்யத்தில் பிறந்தவர்களுக்கு தனித்தனியாக கனவுகளோ ஆசைகளோ இருக்கக் கூடாது. அப்படி இருப்பின் அந்த சாம்ராஜ்யத்தில் இருப்பவர்களுக்கும் அந்த சாம்ராஜ்யத்தை சார்ந்து இருக்கின்ற மக்களுக்கும் மிகப்பெரிய பாதிப்பையே உண்டு பண்ணும். முகலாய சாம்ராஜ்யத்தில் ஔரங்கசீப் காலத்தில் அது நடந்திருக்கிறது. சகோதர சகோதரிகள் நால்வருக்குமே தனித்தனி எண்ணங்கள். அவரவர் எண்ணங்களில் அவரவர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.
இந்த நாடகத்திற்கு ஔரங்கசீப் என்ற பெயரை விட ஜகனாரா என்ற பெயர் வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். ஏனெனில் இந்த நாடகத்தில் ஜகனாரா ஒருத்தி மட்டுமே நிகழ்காலம் என்ற ஒன்றைப் புரிந்து கொண்டு தெளிவாகப் பேசுகிறாள்.
இந்த "ஔரங்கசீப்" நாடகமாக அரங்கேற்றப்பட்டுள்ளது. அதைப் பற்றி சாரு நிவேதிதா தனது வலைப்பக்கத்தில் நினைவு கூர்ந்துள்ளார்.