என் வீடு கவிக்கூடு
என் வீடு கவிக்கூடு - பிரகாஷ்

என் வீடு கவிக்கூடு - பிரகாஷ்

ஈரைந்து மாதம்
என்னைச் சுமந்த
புத்தகம் நீயல்லவா..?
என்று தன் தாயை முன்னிறுத்தி, இப்புத்தகத்தில் தன் கவிதைப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார் ஆசிரியர் தே.செ.பிரகாஷ் அவர்கள். இதில் இடம்பெற்றிருக்கும் கவிதை ஒவ்வொன்றும் எதார்த்தமாகவும் ரசனையுடனும் அமைந்துள்ளது.

இப்பிரபஞ்சத்தில் ஒருவர் முழுமனதுடன் விரும்பிய அனைத்தும் வசப்படும் என்று நாம் கேட்டதுண்டு. அதேபோல் இந்த இளம் கவிஞர் கவிதையை விரும்பி இருக்கிறார்; ரசித்திருக்கிறார்; சிந்தித்திருக்கிறார் போலும். ஆகையால் "என் வீடு கவிக்கூடு" என்ற இக்கவிதைப் புத்தகம் உருவாகியுள்ளது என்று நினைக்கிறேன்.

இப்புத்தகத்திலிருந்து எல்லாம் மாறும் ஒரு நாள், காலம் மறந்த காயங்கள், புதுசா பிறந்தவள், இதயப் புத்தகத்திலிருந்து, என் வீடு கவிக்கூடு இவை எல்லாம் என் மனதில் கூடு கட்டிய கவிதைகள் ஆகும்.

எனக்கு பிடித்த சில கவிதைகள், 
எல்லாம் மாறும் ஒரு நாள்
என்று இருந்துவிடாமல்
மாற்றத்தை நோக்கியப் பயணமே
வெளிச்சத்தை நோக்கி செலுத்தும்.

காலம் மறந்த காயங்களைக்
கண்கள் சொல்லும்
விழியோரமாய்.
சொல்ல மறந்த கதைகள்
மனமே சொல்லுமே
சோகம் அல்லவோ!
விரிசில் விழுந்த கண்ணாடி
சொல்லுமே இன்னும் இரு பின்பும்
காதலில் விழுந்த இதயம் சொல்லுமே
இரு மனமும் ஒரு மனமே!

இன்று இளைஞர்கள் பலர் சமூக வலைதளங்களில் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கும் நடனமாடி லைக்குகள் குவித்துக் கொண்டும் இருக்கின்ற வேலையில் தன் சிந்தனைகளை இலக்கியப் பாதையில் செலுத்தி நன்முறையில் செயலாட்சி வரும் கவிஞர் தேசிய பிரகாஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள். மென்மேலும் கவிஞரின் இழைக்க பயணம் தொடர வாழ்த்துக்கள்.