அரூப நர்த்தனம் - வசந்தகுமரன்
சிறியதே அழகு. பொருளாதாரத்தில் மட்டுமல்ல; இன்றைய காலகட்டத்தில் அவ்வப்போது புத்தகங்களைப் படிப்பவர்களுக்கு பெரிய நாவலை விட சிறுகதைகளும், பெருங்கவிதைகளை விட குறுங்கவிதைகளும் பிடிக்கிறது. அப்படி குறுங்கவிதைகளை படிக்க விரும்பும் வாசகர்களுக்கு கோ.வசந்தகுமரன் அவர்கள் எழுதிய "அரூப நர்த்தனம்" என்ற இந்த குறுங்கவிதை நூல் நிச்சயம் பிடிக்கும்.
கோ.வசந்தகுமரன் அவர்கள் தனது முன்னுரையில் குறுங்கவிதை என்பது, "காதலியின் உதட்டுக்குமேல் நிறமற்ற மீசையாய் அரும்பும் வியர்வையை முத்தத்தால் துடைத்துப் பெரும் நுனிநாக்கு ருசி" என்று குறிப்பிடுகிறார். இந்தக் குறுங்கவிதைகளைப் படிப்பவர்கள் நிச்சயமாக அதை உணர்வார்கள். ஏனெனில் ஒரு கவிதை முடிந்தவுடன் அடுத்த கவிதைக்கு மனம் சொல்லாமல் சில நேரங்கள் அந்த கவிதையை நினைத்து மனம் கற்பனை செய்த பின் தான் அடுத்த கவிதைக்கு தாவுகிறது. இவருடைய இந்த கவிதைகள் 4 அல்லது 5 வரிகளில் முடிந்து விடுகிறது. ஒரு சில கவிதைகள் மட்டுமே 12 வரிகள். இந்த ஒவ்வொரு குறுங்கவிதைகளிலாம் அவரின் சொல்லாடல் தெரிகிறது.
எனக்குப் பிடித்த சில கவிதைகளை நான் பட்டியலிட்டபோது அதுவே மிகப்பெரியதாக இருந்தது. அவ்வளவும் நான் சொல்வதை விட வாசகர்கள் அதை வாங்கி படித்து உங்களுக்கு பிடித்த கவிதைகளை பட்டியலிடலாம். நான் அந்த பெரிய பட்டியலில் இருந்து ஒரு சில கவிதைகளை மட்டும் தருகிறேன்.
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது- இது ஔவையார். ஆனால் வசந்தகுமார் அவர்களின் கவிதை அதற்கு நேர் எதிராக இருக்கிறது. மேலும் நான் ஏன் மனிதனாகி விட்டேன் என்பதையும் அதற்கு முன்பாக நான் என்னவாக இருந்தேன் என்பதையும் கீழ்க்கண்ட கவிதை மூலம் உணர்த்துகிறார்.
பிறக்கும்போது மனிதன் ஒன்றும் தெரியாதவனாய், அறியாதவனாய், குழந்தையாய் ஞானி போல் இருக்கிறான். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவன் மனிதனாகவே மாறி விடுகிறான். கடவுள் நிலையில் இருந்தவன் படிப்படியாக வேறொரு நிலைக்கு தள்ளப்படுகிறான்.
மனிதர்களாக பிறந்த எல்லோருக்கும் ஆசைகள் உண்டு. ஏன் புத்துனுக்கே ஒரு ஆசை உண்டு. ஆனால் கவிஞர் நான் புத்தனை வணங்கப் போவதில்லை என்று முடிவெடுக்கிறார். ஏனென்று கேட்டால் அதற்கு கீழ்கண்ட கவிதையைச் சொல்கிறார்.
ஆனால் இங்கு புத்தன் கடவுள் அல்லவே. ஆனாலும் கவிதை என்பது அனுபவிக்கவும் ரசிக்கவும் மட்டுமே.
மனிதன் எவ்வளவுதான் மேலே சென்றாலும் அவன் சற்று பின்னால் திரும்பி பார்ப்பது நல்லது என்பதை ஒரு மரம் நமக்கு கனிவாய் சொல்கிறது.
கவிஞரின் கவிதை ரசனைக்கு ஒரு எடுத்துக்காட்டு கீழ்க்கண்ட கவிதை. நாம் எல்லோரும் ஒன்றாய் நினைக்க கவிஞர் அவரது பாதையில் அவரது சிந்தனையில் புதிதாக ஒன்றை நமக்குத் தருகிறார். இங்கு தான் அவர் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறார்.
வாழ்க்கையில் நாம் முன்னேற்றம் காண வேண்டுமென்றால் நம்மை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்; அறிந்து கொள்ள வேண்டும். அதனை இச்சிறு கவிதை மூலம் தெரியப்படுத்தி விடுகிறார் கவிஞர்.
அதேபோல வாழ்க்கையில் நாம் முன்னேற்றம் காண தடையாக இருப்பவர்களை நான் பொறுப்பெடுத்த வேண்டாம். ஏனெனில் கவிஞர் அதற்கு ஒரு விடை தருகிறார்.
கவிஞரின் கவிதை ரசனைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு இந்த குறுங்கவிதை.
இந்த கவிதையை சிலர் சற்று நேரம் யோசிக்க ஆரம்பிப்பார்கள்.
ஆமாமாம்... ஒருவேளை இருந்து தொலைத்து விட்டால்...
இன்னும் காதலை, தேனீரை, நதியை, நிலவை கவிஞர் தனது பார்வையில் மிக அழகாக படம் பிடித்துக்காட்டுகிறார்.
இதுவரை கவிதை படித்ததில்லை என்று சொல்பவர்களுக்கும், கவிதை பிடிக்காது என்று சொல்பவர்களுக்கும் இந்த நூலை பரிந்துரை செய்கிறேன்.

கடவுளாகப் பிறந்தேன்.
பாவம் செய்து
பாவம் செய்து
மனிதனாகி விட்டேன்.

புத்தனை நான்
வணங்குவதில்லை.
ஆசைகள் துறந்தவன்
வரங்களையா
வைத்திருக்கப்போகிறான்
வழங்க?
வணங்குவதில்லை.
ஆசைகள் துறந்தவன்
வரங்களையா
வைத்திருக்கப்போகிறான்
வழங்க?
ஆனால் இங்கு புத்தன் கடவுள் அல்லவே. ஆனாலும் கவிதை என்பது அனுபவிக்கவும் ரசிக்கவும் மட்டுமே.
மனிதன் எவ்வளவுதான் மேலே சென்றாலும் அவன் சற்று பின்னால் திரும்பி பார்ப்பது நல்லது என்பதை ஒரு மரம் நமக்கு கனிவாய் சொல்கிறது.
வேர்களுக்கு
நன்றி சொல்ல
பூமிக்குத் திரும்புகிறது
சருகு.
நன்றி சொல்ல
பூமிக்குத் திரும்புகிறது
சருகு.
கவிஞரின் கவிதை ரசனைக்கு ஒரு எடுத்துக்காட்டு கீழ்க்கண்ட கவிதை. நாம் எல்லோரும் ஒன்றாய் நினைக்க கவிஞர் அவரது பாதையில் அவரது சிந்தனையில் புதிதாக ஒன்றை நமக்குத் தருகிறார். இங்கு தான் அவர் மற்றவர்களிடமிருந்து வித்தியாசப்படுகிறார்.
வரிசையில் நின்று
தரிசனம் தந்தேன்
கடவுளுக்கு.
தரிசனம் தந்தேன்
கடவுளுக்கு.
வாழ்க்கையில் நாம் முன்னேற்றம் காண வேண்டுமென்றால் நம்மை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்; அறிந்து கொள்ள வேண்டும். அதனை இச்சிறு கவிதை மூலம் தெரியப்படுத்தி விடுகிறார் கவிஞர்.
அவனைத் தெரியும்
இவனைத் தெரியும்.
எல்லாம் சரிதான்.
உன்னைத் தெரியுமா
உனக்கு?
இவனைத் தெரியும்.
எல்லாம் சரிதான்.
உன்னைத் தெரியுமா
உனக்கு?
அதேபோல வாழ்க்கையில் நாம் முன்னேற்றம் காண தடையாக இருப்பவர்களை நான் பொறுப்பெடுத்த வேண்டாம். ஏனெனில் கவிஞர் அதற்கு ஒரு விடை தருகிறார்.
யாரையும் நான்
தூக்கியெறிவதில்லை.
அவர்களாகவே
உதிர்ந்துவிடுகிறார்கள்.
தூக்கியெறிவதில்லை.
அவர்களாகவே
உதிர்ந்துவிடுகிறார்கள்.
கவிஞரின் கவிதை ரசனைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு இந்த குறுங்கவிதை.
நானும் கலந்து கொள்வேன்
என் இறுதி ஊர்வலத்தில்.
அழத்தான் முடியாது
என்னால்.
என் இறுதி ஊர்வலத்தில்.
அழத்தான் முடியாது
என்னால்.
இந்த கவிதையை சிலர் சற்று நேரம் யோசிக்க ஆரம்பிப்பார்கள்.
இல்லையென்று
சொல்வதை
நிறுத்திக்கொண்டேன்
கடவுள் ஒருவேளை
இருந்து தொலைத்துவிட்டால்
என்ன செய்வது?