சிக்கந்தாபுரம் - ரபீக் ராஜா
முதலில் இந்த நாவல் எழுதிய ரபீக் ராஜா அவர்களுக்கு என் கண்டனங்கள். காரணம் இந்த நாவலின் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றிற்கு என் பெயரை சூட்டி என் குணநலன்களை ஒத்தவராக காண்பித்ததற்கு (கண்டுபிடிப்பு:என் மனைவி).
எழுத்தாளர் ரபீக் ராஜா அவர்களின் இந்த சிக்கந்தாபுரம் என்ற இந்த முதல் நாவல் இஸ்லாமிய மக்களின் குண நலன்களையும் அவர்களின் வாழ்க்கை முறையையும் சுட்டிக்காட்டுகிறது. இந்த நாவல் இஸ்லாமியர்களின் ஒட்டுமொத்த மக்களை கொண்டு வராமல் பள்ளிவாசலின் மேல் மட்டத்தில் இருக்கும் சிலரைப் பற்றியும் அவர்களுக்குள் நடக்கும் ஈகோ பிரச்சினையையும் அவர்களைச் சார்ந்து இருப்போர்களுக்கு ஏற்படும் தொந்தரவுகளையும் நகைச்சுவையாக சுட்டி காட்டியுள்ளார்.
எப்போதுமே தமிழ் சமூகத்தில் இஸ்லாமியர்கள் மற்ற மதத்தினரை சார்ந்து வாழ்ந்த போதும் புதிதாக வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்று திரும்புபவர்கள் தங்களை ஒரு தனித்துவமான பிரதிநிதியாக நினைத்துக் கொண்டு உழல்வார்கள். அப்படி இருப்பவர்கள் தங்கள் முன் எதிர்படுபவர்கள் எல்லோரிடமும் மற்ற மதத்தினரை "காபீர்" என்று கூறுவது; தொழுகைக்கு வரலாமே என்று அழைப்பது; இசையை, பாடலை ஹராம் என்று வலியுறுத்துவது என்று தங்களுடைய போதனையை ஆரம்பிப்பார்கள். ஒரு சிலரின் அதிகபட்ச இசைஞானம் என்பது நாகூர் அனிபாவின் பாடல்களை கேசட்டுகளாக வாங்கி வருவது மட்டுமே.
இப்படி இருக்கின்ற இந்த இஸ்லாமிய சமூகத்தில் சிக்கந்தாபுரம் என்ற கிராமத்தில் சாகுல் ஹமீது என்பவர் தியேட்டர் ஒன்றை நடத்தி வருகிறார். இதில் முக்கியமானது அந்த திரைப்பட கொட்டகை பள்ளிவாசலுக்கு எதிரே இருப்பதுதான். சாகுல் ஹமீதின் குணநலன்களைப் பற்றி சொல்லும் பொழுது ஓர் இடத்தில் சாகுல் ஹமீதும் அவருடைய தாயாரும் பேசிக்கொள்வதை, "இரு மனநோயாளிகள் பேசிக் கொள்வதைப் போலத்தான் வீட்டு வேலைக்காரர்கள் பார்ப்பார்கள்" என்று குறிப்பிட்டிருப்பார். மேலும் சாகுல் ஹமீதின் ஒரே கவனம் தியேட்டர் மட்டுமே;கிட்டத்தட்ட மனைவியாக பாவித்தார் என்றும் கூறியிருப்பார். இப்படிப்பட்டவரை சீண்டினால் அவர் எப்படி நடந்து கொள்வார் என்பதை வாசகர்களின் யூகங்களுக்கே விட்டுவிடுகிறேன்.
இதற்கிடையில் அங்கிருக்கும் பள்ளிவாசலில் புதிதாக ஜமாத் தலைவர் பதவிக்கு போட்டி வருகிறது. இதில் காதர் கனி ராவுத்தர் என்பவரும் செல்லப்ப ராவுத்தர் என்பவரும் போட்டி போடுகிறார்கள். இருவருமே பெண் எடுத்து பெண் கொடுத்துக் கொண்டவர்கள். ஒரே மாதிரியான உடை அணிந்து வலம் வந்த இவர்களின் நட்பு ஒரு கட்டத்தில் முடிவுக்கு வருகிறது. இருவரும் எதிரும் புதிருமாக மாறி இப்போது ஜமாத் தலைவர் பதவிக்கு போட்டி போடுகிறார்கள். அந்த போட்டியில் இவர்களின் பக்கம் இருக்கும் ஆட்கள் துதி பாடுவதும் மற்றும் அந்த பள்ளிவாசலில் வேலை பார்க்கும் இமாம் மற்றும் முத்தலிப் இருவரும் இவர்கள் இடையில் மாட்டிக் கொண்டு அவஸ்தைப்படுவதையும் நகைச்சுவையாக கொண்டு சென்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் ஒரு காட்சி வரும். "உலகத்திலேயே ரொம்ப நல்லவங்க; சாந்தமானவங்க; நாம அடிச்சா திருப்பி அடிக்காதவங்க; மூணே பேர் தான். அதுல நம்பர் ஒண்ணு பிள்ளையார் கோவில் பூசாரி; இரண்டு பழைய துணிக்கு பக்கெட் விக்கிறவன்; மூணு ஸ்கூல் வாத்தியார்." அத்துடன் மேலும் இருவரை சேர்த்துக் கொள்ளலாம். அவர்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்தும் இமாம்; இரண்டாவதாக இமாமுக்கு அடுத்தபடியாக இருக்கும் மோதினார் ஆகிய இருவரும்.
எந்த மதத்தில் இருந்தாலும் பெண்களின் குணம் என்பது தங்கள் மகன் மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமே அவர்களுக்கு பிடித்த ஒன்று. ஒரு அத்தியாயத்தில் மோதினாரும் அவருடைய மனைவியும் நடத்தும் உரையாடல் நகைச்சுவையாக இருந்தாலும் இஸ்லாமிய பெண்களின் உளவியலை அப்பட்டமாக எடுத்துக் கூறுகிறது.
ஜமாத் தேர்தல் நெருங்க நெருங்க காதர் கனி ராவுத்தரும் செல்லப்ப ராவுத்தரும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் பக்கம் ஆட்களை இழுக்க முயற்சி செய்வதும் அதற்காக அவர்கள் செய்யும் வேலைகளையும் ஆங்காங்கே நகைச்சுவை தொனிக்க பரபரப்பாக நாவலை கொண்டு சென்றுள்ளார். இருவரும் உறவு முறை என்பதால் தங்களது கௌரவத்திற்காக மற்றவரின் காலை வாரி விட எந்த அளவுக்கு முடியுமோ அதை தனது கூட்டாளிகளின் மூலம் நடத்த முயற்சி செய்கிறார்கள். ஆனாலும் இருவரும் பொதுவாக உள்ள ஒற்றுமை, பள்ளிவாசலுக்கு எதிரில் இருக்கும் தியேட்டரை இழுத்து மூட முயற்சி செய்வது தான்.
தேர்தல் முடிவு வெளிய வந்த நேரத்தில் தியேட்டர் முதலாளி சாகுல் ஹமீது அம்மாவும் மரணம் அடைகிறார். இப்போது சாகுலை பழிவாங்க முயற்சி செய்கிறார்கள். அந்த முயற்சியில் வெற்றி பெற்றனரா? என்ன நடந்தது?என்பதை பரபரப்பாக கொண்டு சென்றுள்ளார்.
இந்த நாவலில் ஒரு சில பக்கங்களில் எழுத்துப் பிழை இருக்கிறது. அடுத்த பதிப்பில் களைவது நல்லது.
புத்தகத்தின் இறுதியில் சாகுல் ஹமீது தன்னைப் பற்றி கூறியிருப்பார். அந்த வரிகள் மிகவும் அருமை.
"என்னைப் பற்றிய இந்த சிக்கந்தாபுரம் இதுவரை என்ன நினைத்துக் கொண்டிருந்தார்கள் இனி என்ன நினைப்பார்கள் என்ற எவ்வித கவலையும் எனக்கு இல்லை. எனக்கும் என் இறைவனுக்குமான தொடர்பு எனது கல்புக்கும் என்னைப் படைத்த ரப்புக்குமானது. இதை நான் யாருக்கும் நிரூபிக்க நினைத்ததே இல்லை. "நிச்சயமாக அல்லாஹ் உங்கள் தோற்றங்களையோ உங்கள் பொருட்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்கள் உள்ளங்களையும் உங்கள் செயல்களையுமே பார்க்கிறான்."