சிலப்பதிகாரத்தில் அறக்கோட்பாடு - பகவதாஸ் ஸ்ரீஸ்கந்ததாஸ்
மனித வாழ்க்கையில் எது நிலையானது? எது நிலையற்றது? நிலைத்த புகழுக்கு என்ன தேவை? புகழ் குன்றுவதற்கான தீயச் செயல்கள் என்னென்ன? என்பதை தமிழின் முதற்காப்பியமான சிலப்பதிகாரத்தில் மாபெரும் பத்தினி தெய்வமான ஒரு முலை குறைத்த கண்ணகியினைக் காப்பியத் தலைவியாகக் கொண்டு இளங்கோ செய்த தமிழ் மரபின் மாபெரும் அறக்கதையினை இன்றளவும் உலக மகாகாப்பியங்களுக்கு நிகராக போற்றப்படுகிறது. இதுவே தமிழர்கள் தங்கள் வாழ்வில் அறத்தையே முதன்மையாக போற்றி வாழ்ந்திருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது.
இதனை, மீண்டுமொரு மீள் பார்வை செய்து நூலாக தந்திருக்கிறார் நூலாசிரியர் பகவதாஸ் ஸ்ரீஸ்கந்ததாஸ் அவர்கள்.
சிலப்பதிகார கதாபாத்திரங்களுக்கிடையே நிகழும் நிகழ்வுகள் யாவும் அறம் சார்ந்தவையாகவே நிகழ்ந்தன என்பதை இந்நூலின் முடிவில் அறிய முடிகிறது.
இந்நூலின் ஆசிரியர் தொல்காப்பியத்தில் தொடங்கி திருக்குறள், நான்மணிக்கடிகை, வெண்பா, திருமந்திரம், சிலப்பதிகாரத்தின் அறக்கோட்பாட்டு வரிகள் என அத்தனையும் கொண்டு பல தரவுகளைத் தந்திருக்கிறார்.
இன்றைய தமிழ்த் துறையைச் சார்ந்த இளைய மாணவர்களுக்கும் மேடையில் சிலப்பதிகாரம் குறித்து உரையாட முனையும் இளைய பேச்சாளர்களுக்கும் இந்த நூல் பல அறம் சார்ந்த சிந்தனைகளை தூண்டுவதற்கு ஒரு தூண்டுகோலாக அமையும்.
1. கோவலன் கொலையூண்டதற்கான காரணம்?
2. கண்ணகி மதுரையை எரித்ததற்கான காரணம்?
3. கனக விசயர்கள் கல் சுமந்ததற்கான காரணம்?
4. கோவலன் மணிமேகலைக்கு பெயர்ச் சூட்டியதன் காரணம்?
5. மணிமேகலை புத்த சமயத்தை தழுவி துறவு பூண்டதற்கான காரணம்?
6. மாதவியை கோவலன் பிரிந்ததற்கான காரணம்?
7. மாதவி கௌசிகனிடம் கொடுத்து அனுப்பிய கடிதத்தை கோவலன் தன் பெற்றோருக்கும் அனுப்பியதன் காரணம்?
8. பொற்கொல்லன் கோவலன் மீது பொய் சுமத்தியதற்கான காரணம்?
9. பாண்டிய மன்னன் தன் உயிர் நீத்து செங்கோல் நிமிர்த்திய பிறகு புதியதாக மன்னர் பதவிக்கு வந்த வெற்றிவேல் செழியன் ஆயிரம் பொற்கொல்லர்களை பலியிட்டதற்கான காரணம்?
10. கோவலன் பெற்றோர் மற்றும் கண்ணகியின் பெற்றோர்களின் இறுதி முடிவு?
11. தேவந்தி,மாங்காட்டு மறையோன்,மாடல மறையோன், கௌசிகன் ஆகிய நான்கு அந்தணர்களும் கடைபிடித்த அறங்கள்?
12. மதுராபதி தெய்வம் கண்ணகியின் பின் சென்று கண்ணகியிடம் எடுத்துரைத்த ஊழ்வினை மற்றும் தீயினை அணைத்த காரணம்?
13. கண்ணகி மதுரையினை எரித்ததற்கான ஆதித்தீ யார் மூட்டியது?
14. கண்ணகியின் கணவன் கோவலன் கொலையூண்ட செய்தியினைக் கேட்டு அறநெறி தவறிய வழக்கை கண்ணகியின் மதிநுட்பத்தால் பகலவனின் அசரீரி தீர்ப்பினை கொண்டு சிலம்பால் முடித்து வைத்த திறத்தினையும்
15. களவு வாழ்க்கைக்கும் கற்பு வாழ்க்கைக்கும் இடையே உள்ள நுண்ணிய வேறுபாடுகளையும்
16. கோவலன் பிரிந்த மாதவியின் பிரிவுத் துயரத்தினை மாதிரி கொடி கொண்டு கௌசிகன் இயம்பியதையும்
17. கோவலனை மயக்க வசந்தமாலையின் உருவத்தில் பூதம் வந்ததற்கான காரணமும்
18. கோவலனை முருகனுக்கு இணையாகவும்,கண்ணகியினை காமன் மனைவி ரதிக்கு இணையாக இளங்கோவடிகள் உவமையாக காட்டப்பட்டதற்கான காரணத்தினையும்
19. கவுந்தியடிகளின் இறுதி முடிவு மற்றும்
20. காப்பிய நோக்கத்தையும்,கதைமாந்தர்களின் பண்புநலன்களையும் நூலாசிரியர் வாசிப்பதற்கு எளிமையாக்கித் தந்திருக்கிறார்.
இந்நூலினை வாசித்து முடித்த பிறகு "தெய்வம் தெளிமின், தெளிந்தோர்ப் பேணுமின்" என்கிற இளங்கோவின் அறநெறி அறிவுரையின் மகத்துவத்தின் படி விளங்குவதாக அமைகிறது.
இன்னும் இதைப் போன்ற பல புத்தகங்களை ஆசிரியர் வாசகர்களுக்கு வாசிப்பதற்கு எளிமையாக்கித் தர வேண்டும் என்கிற அன்போடு என் வாழ்த்துகளும் வணக்கங்களும்.