துப்பாக்கிகளுக்குப் பதிலாக - ஹாஜா கனி
இஸ்லாமிய இதழான ஒற்றுமை மாதமிருமுறை இதழின் கடைசிப் பக்கத்தில் ஹாஜாகனி அவர்களால் எழுதப்பட்ட கவிதைகள் "துப்பாக்கிகளுக்கு பதிலாக..." என்ற நூலாக வெளிவந்துள்ளது.
கவிதைகள் எப்போதுமே மனிதர்களை வசீகரிக்கிறது. மேலும் கவிதைகள் எப்போதும் பெண்ணின் அழகை, நிலவை, இயற்கையை பாடும் பொழுது மனதுக்கு இனிமையாக தான் இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் புறச் சூழ்நிலையில் தாக்குண்டு மிகுந்த மனச்சோர்வோடு நிற்கும் பொழுது அந்தக் கவிதைகள் அவர்களுக்கு சற்று ஒரு இளைப்பாறுதலைத் தருகிறது. அதுதான் கவிதை என்றால் அது மட்டுமல்ல; நம் மண்ணை, மனிதர்களை கவிதையில் பாட வேண்டும். நான் எப்போதுமே கவிதைகள் அந்தந்த காலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளை அடுத்த காலகட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைப்பவன். ஹாஜா கனி அவர்களும் மலைகளைப் பாடாமல், பெண்ணின் புற உடலைத் தொடாமல், நிலவைப் பாடாமல் சமூகத்தில் தனக்கு முன்னாள் அரங்கேறி இருக்கும் பொய்களை, புனைவுகளை தனது கவிதைகளின் மூலம் சுட்டிக்காட்டுகிறார். அவருடைய பாடும் பொருள் எல்லாமே சுற்றுச்சூழல், பாசிசம், எளிய மக்கள், பூமி, ஏகாதிபத்தியம், கடல் கடந்து எங்கோ பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை என ஒரு மானிடன் செய்ய வேண்டியதை, பாட வேண்டியதைப் பாடுகிறார்.
இந்த கவிதைகள் எப்போது எழுதப்பட்டன என்று ஒவ்வொரு கவிதைக்கும் கீழும் எதற்காக எழுதப்பட்டன என்பதையும் சுட்டிக்காட்டி இருப்பது மிகவும் சிறப்பு. மொத்தம் 30 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
முதல் கவிதையே இப்படித்தான் தொடங்குகின்றது.
கழுத்தைக் கவ்விய
ஓநாய்கள்
ஆடு
யாருக்குச் சொந்தமென்று
ஐம்பதாண்டு காலமாய்
அடித்துக் கொள்கின்றன...
இங்கு ஆடு என்பது ஒரு குறியீடு. அதாவது காஷ்மீர். இப்போது நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளுங்கள். காஷ்மீர் இப்போது எப்படி சிலரின் கைகளில் சின்னபின்னமாய் கொண்டிருக்கிறது என்பதை.
அதே கவிதையில் இன்னொரு இடத்தில் இப்படி குறிப்பிடுகிறார்.
என்னே அதிசயம்...
குண்டடிப்பட்ட பொதுமக்கள்
செத்த பிறகு, அங்கே...
தீவிரவாதிகளாகிறார்கள்(?)
பொருளாதாரப் புற்று நோய் என்ற கவிதை வங்கிகள் செய்யும் அட்டூழியத்தை சுட்டிக் காட்டுகிறது. சிறிய வங்கிகள் அடித்தட்டு மக்களையும் பெரிய வங்கிகள் நாட்டையும் துவம்சம் பண்ணுகின்றன.
உள்ளூர் வங்கிக்கும்
உலக வங்கிக்கும்
ஒரே லட்சியம்!
ஏழைகளை ஒழிப்பதே...
ஏழ்மையை அல்ல...
இதை சொல்லிவிட்டு மனிதர்களுக்கு ஒரு எச்சரிக்கை கொடுக்கிறார்.
நினைவிருக்கிறதா?
26.01.2001 குஜராத்...
மனிதர்கள் திருந்தினால் சரி.
பெட்டிக்குள் மனிதர்கள்... என்ற கவிதை எப்படி சிறுவர்களை, பெண்களை மொத்தத்தில் மனிதர்களையும் அடைத்து வைத்துள்ளது என்று சுட்டிக் காட்டுகிறார்.
பொருத்தமான பெயர் தான்
தொலைக்காட்சி...
அது
பொழுதுகளைத்
தொலையவைக்கும்
பொல்லாத சாதனம்...
என்றும்
'பாஸ்போர்ட்' இல்லாமலே
பல நாட்டு சாத்தான்கள்
உள்ளத்தைக் கெடுக்க
இல்லத்தில் நுழையும்
என்றும் தொலைக்காட்சியின் தீமையை விளக்குகிறார்.
இன்றைய காலகட்டத்தில் அந்தப் பெட்டியின் அளவு தான்(மொபைல்) மாறுபடுகிறது.
உலகின் ஏகபோக நாடாக தன்னை அங்கீகரித்துக் கொண்ட அமெரிக்காவின் மற்றொரு பக்கத்தை அதன் குடூர குணத்தை தனது கவிதையின் மூலம் பல இடங்களில் கோடிட்டு காட்டுகிறார் கவிஞர். அந்த அமெரிக்கா தங்களது பூர்வ குடிகளுக்கும், கொரியாவிலும், வியட்நாமிலும் செய்த கொடுமைகளை, கியூபாவுக்கு செய்த கேடுகளை, பாலஸ்தீனம், ஈராக் என அது காட்டிய கொடூர முகங்கள் இரக்கமற்று நீள்வதை வெளிச்சம் போட்டு காட்டுகிறார்.
'சுதந்திரச் சிலை'யின்
கையிலிருக்கும் தீப்பந்தம்
எத்தனைத் தேசங்களின்
சுதந்திரத்தைப் பொசுக்கியிருக்கும்.
அவர்கள் கையில் தீப்பந்தத்தை வைத்துக்கொண்டு ஒவ்வொரு நாட்டையும் கொளுத்துவோம் என்று சுட்டிக் காட்டுகிறார்கள். ஆனால் நமக்குத் தான் அது புரியவில்லை.
இருண்ட கண்டத்தில் இருந்து வெளிச்சம் என்ற கவிதை ஏகாதிபத்திய நாடுகளில் நடக்கும் அழகிப் போட்டிகளை பற்றி இவ்வாறு சுட்டி காட்டுகிறது.
அழகிப் போட்டி
நவீன யுகத்தில்
நீடிக்கும்
தேவதாசி முறை
காட்டுமிராண்டிகளை
வென்ற
கோட்டுமிராண்டிகள்
போட்டி
நடத்துகிறார்கள்
என்று சீறுகிறார்.
பொதுக்கழிப்பிடங்கள்
ஐநாவை விட உயர்ந்தவை
ஏனெனில் அவற்றால்
மக்களுக்கு ஒரு பலனாவது
இருக்கிறது.
இதில் கவிஞரின் அறச்சீற்றம் தெரிகிறது. ஈராக்கில் அமெரிக்கா நடத்திய விளையாட்டின் போது ஐ.நா என்ன செய்தது என்று எல்லோருக்கும் தெரியும்.
இன்னும் குஜராத் கலவரம், மதமாற்றத் தடைச் சட்டம்.... என தனது காலத்தில் நடந்த கொடுமைகளை தன் கவிதையின் மூலம் வாசகர்களுக்கு கொண்டு செல்கிறார்.
முக்கியமான கவிதை (எழுக... எழுப்புக...) ஒன்றில் டிசம்பர் 6 1902 என்று வருடம் தவறாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதே கவிதையில்,
சோமநாதர் ஆலயம் கட்ட
பள்ளிவாசல் இடித்தபோது
வாய்பேசத் தவறிய
சிறுபான்மை மௌனம்...
இன்று வரை சிறுபான்மை இஸ்லாமிய இனம் தனது வாழ்க்கையை, தான் கடந்து வந்த பாதையை, தனக்கு நேர்ந்த கொடுமைகளை இன்னும் அடுத்த தலைமுறைக்கு கடத்தாமல் எழுதி வைக்காமல் இன்றுவரை மௌனமாக இருப்பது தான் கொடூரத்தின் உச்சம். அந்த வகையில் ஹாஜாகனி அவர்கள் இஸ்லாமிய சமூகத்துக்கு, மானுட சமூகத்திற்கு செய்ய வேண்டிய செயலை மறக்காமல் செய்து கொண்டிருக்கிறார்.
ஹாஜாகனி அவர்கள் இன்னும் இது போன்ற பல நெருப்புக் கவிதைகளை உருவாக்க வேண்டும் இந்த மானுட சமூகத்துக்கு.