கொத்தாளி - முஹம்மது யூசுப்
ஒரு கார்ப்பரேட் நிறுவனம் ஒரு நாட்டில் நுழைந்தால் அல்லது ஒரு மாநிலத்தில் நுழைந்தால் இல்லை ஒரு சிறிய கிராமத்தில் நுழைந்தால் அல்லது அந்த சிறிய கிராமத்தில் இருக்கும் ஒரு எளிய மனிதனின் வீட்டில் நுழைந்தால் என்னவாகும். எப்போதுமே மக்கள் பாதிக்கப்படாத வரை அந்த கார்ப்பரேட் நிறுவனத்தின் தரவுகளை மட்டுமே பேசுவோம். ஆனால் அந்த ஒரு கார்ப்பரேட் ஒரு எளிய மனிதனை நசுக்க ஆரம்பித்தால் அந்த குடும்பத்தின் பரிதாப நிலையை அதை நேரில் அனுபவித்தால் மட்டுமே நமக்கு புரிய ஆரம்பிக்கும்.
ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் அராஜகம், அந்த கார்ப்பரேட் நிறுவனத்திற்கு உதவி செய்யும் மிகப்பெரிய அரசியல்வாதி, அந்த அரசியல்வாதி மூலம் பாதிக்கப்படும் ஒரு சாதாரணமான மனிதன், அந்த எளிய மக்களை பாதுகாக்க போராடும் ஒரு சிறு கூட்டம், அரசியல்வாதிக்கு உதவி செய்வதற்காகவே வேறு மாநிலத்திலிருந்து வரும் ஒரு காவல்துறை அதிகாரி, இறுதியில் அந்த காவல் துறை அதிகாரியே இந்த எளிய கூட்டத்திற்கு உதவி செய்யக்கூடிய நிலை - இதுதான் கொத்தாளி என்ற ஒரு சமூக, துப்பறிவு நாவல் என்று சொல்லலாம். இந்த கொத்தாளி இதைத்தான் சொல்கிறதா என்றால் இல்லை ஒரே சாதி ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வந்து அடைகிற போது ஓரிடத்தில் அந்த சாதி பெரிய சாதியாகவும் அதே சாதி இன்னொரு இடத்தில் எப்படி கீழ் சாதியாகவும் இருக்கிறது என்பதையும் ஒரு சாதி ஆதிக்கம் எப்படி அந்த கீழ் ஜாதி மனிதர்களை எப்படி நசுக்குகிறது என்பதையும் விலாவாரியாக பேசுகிறது.
எப்போதுமே கார்ப்பரேட் நிறுவனம் எங்கேயும் நேரடியாக எதையும் முயற்சிக்காது. மாறாக வேறு ஒருவருடன் துணை கொண்டு அவர்களது மூலமே எல்லாவற்றையும் செய்ய வைக்கும். அதே நிலை தான் இந்த கொத்தாளி நாவலிலும் வருகிறது. கார்ப்பரேட் நிறுவனத்தின் அடியாளாக அரசியல்வாதி, காவல்துறை அதிகாரி. இவர்கள் மூலமே அந்த எளிய மனிதர்கள் நசுக்கப்படுகிறார்கள். அதே நேரத்தில் அந்த எளிய மனிதர்களுக்கு உதவி செய்யும் ரஹ்மான் பாய் போன்றவர்களும் கொல்லப்படுகிறார்கள்.
மேலும் ஒரு கிராமத்தில் நடக்கும் திருவிழாவில் தேசிய கட்சி என்று சொல்லக்கூடிய காவியுடையை அணிந்தவர்கள் கோடாங்கி இல்லாமல் ஐயரை வைத்து திருவிழாவை பூர்த்தி செய்யச் சொல்வது, தங்களது லாப நோக்கத்திற்காக ஆதி காலம் தொட்டு கோயிலில் உள்ள பழக்கவழக்கங்களை மாற்ற முயற்சி செய்வது, தமிழர்களின் கலாச்சார பண்பாடுகளை தமிழர்களைக் கொண்டே நசுக்கை முற்படுவது என கிராமத்தில் நடக்கின்ற அநியாயங்களையும் நாவலில் சுட்டிக் காட்டுகிறார்.
ஒரு கோவில் திருவிழாவில் நடக்கும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் படையல் இவற்றை முழுமையாக தனது நாவலில் கொண்டுவர இந்த நூலின் ஆசிரியர் முஹம்மது யூசுப் எடுத்துக்கொண்ட சிரத்தைகள் தெளிவாக தெரிகிறது.
அது மட்டுமல்லாமல் நேர்மையாக செயல்படும் ஒரு அரசு அதிகாரி, முகம் தெரியாத எளிய மனிதருக்கு உதவி செய்வதும் அதனால் அவர் பழிவாங்கப்படுவதும் இந்த அரசு அதிகாரி தான் தனக்கு உதவி செய்தார் என்று தெரியாமல் அவருடனே தங்கி இருக்கும் அந்த எளிய மனிதன் என கதை சூடு பிடிக்கிறது.
பறையர், பள்ளர், குடும்பன், சாம்பன், வள்ளுவன், வண்ணார், நாவிதர், சக்கிலியர், அருந்ததியர், பகடை, மாதாரி, தோட்டி, செம்மான், கோமுட்டி, ஹோலியர், புலையர், கிணையன், கூத்தன், கைக்கோளன், புதிரை (புரத) வண்ணார் என்ன பல்வேறு மக்கள் வாழும் ஊரான கொத்தாளியில் "இஸ்மாயில் கொத்தாளி", "கொத்தாளி குமாரு" போன்றவர்களும் வாழ்ந்திருக்கிறார்கள், வாழ்கிறார்கள். இந்த கொத்தாளி பெயர் கொண்ட ஊர்கள் மகாராஷ்டிராவில் 10-க்கும் மேல் உள்ளன என்று ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.
எளிய மனிதன் அதுவும் சாதியில் கடைசியில் உள்ளவன் தனக்கென்று சொந்தமாக எதுவும் வைத்திருக்கக் கூடாது; அப்படியே வைத்திருந்தாலும் யார் கேட்டாலும் அதை கொடுத்து விட வேண்டும். அப்படி கொடுக்க மறுத்த மருதன், வேம்பன் இவர்களின் குடும்பத்தை பற்றிய கதை தான் கொத்தாளி. ஒரு சிறிய இடத்துக்காக இந்த குடும்பத்தை மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம் வரை எப்படி நசுக்குகிறது என்பதை விலாவாரியாக விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
இந்த எளிய மனிதர்களுக்கு அந்த நிலம் எப்படி கிடைத்தது என்பதை ஒரு பிளாஷ்பேக் மூலம் தெளிவாக சுட்டிக்காட்டி உள்ளார் ஆசிரியர். அதே நேரத்தில் திடுக்கிடும் திருப்பமாக பாரதியாரால் பூணூல் போடப்பட்ட கனகலிங்கம் பாரதியார் மரணத்திற்கு பிறகு என்ன ஆனார்? என்பதை ஒரு கேள்வியுடன் கேட்கும் போது நமக்கும் என்ன நடந்தது என்று ஒரு வினா எழும்புகிறது. இந்த வினாவிற்கு ஏன் யாரும் விடை தேடி செல்லவில்லை என்பதும் புரியாத புதிராக உள்ளது.
கார்ப்பரேட், அரசியல், சாதி - இவற்றை ஒரே நேர்கோட்டில் கொத்தாளி என்ற நாவல் மூலம் கொண்டுவந்துள்ளார். சாதி எந்த அளவிற்கு வேரூன்றி உள்ளது என்று சுட்டிக் காட்டிய ஆசிரியருக்கு வாழ்த்துகள். எல்லோரும் படிக்க வேண்டிய நூல்.