பூபாளத்திற்கொரு புல்லாங்குழல் - இறையன்பு
சுரங்கள் "ச ரி க ம ப த நி" ஏழும் தன் அளவுகளுக்குகேற்ப நீட்டியும் குறைத்தும் மனித உணர்வுகளில் ஏற்படுத்தும் மாற்றத்தினைப் போல வெ. இறையன்பு அவர்கள் எழுதிய பூபாளத்திற்கொரு புல்லாங்குழல் என்கிற இக்கவிதைத் தொகுப்பு முழுவதிலும் உள்ள கவிதைகள் இயல்பு வாழ்க்கை வாழும் சராசரி மனிதர்களின் மனநிலைகளை தன் வரியின் வாயிலாக சித்திரம் போட்டுக் காட்டுகிறது...
ஆங்காங்கே சில காதல் கவிதைகள் அடடே என்று புன்னகையோடும், சில கவிதைகள் அச்சோ...! என்கிற வியப்பின் விளிம்போடும் மற்றும் தர்க்க ரீதியாக சில கவிதைகள் உள்ளூற சிந்தனைகளின் உச்சியில் சிம்மாசனமிட்டு அமர்ந்துக் கொண்டும் என்னைப் போன்ற ஒவ்வொரு வாசகனையும் இப்புல்லாங்குழல் இசையாக இசைத்துப்பார்க்கிறது...
அவ்வகையில், தங்கப் பிரம்புகள் என்கிற கவியில்,
இந்தக் கவிதை ஒரு தாயின் கோபத்தையும் அதே சமயம் தன் குஞ்சு ஏமாந்துவிட்டதே என்ற ஆதங்கத்தையும் அழகாக வெளிப்படுத்துகிறது.
மற்றொரு கவிதையான, "தொற்றுநோய்"
என்கிற இக்கவிதையிலும் அண்டை வீட்டு சொந்தங்களின் அருமை பெருமைகளை நேர்மையானக் கருத்தில் எதிர்மறை செயல்களை இலகுவாகக் கடத்துகிறார்.
"பனித்துளிப் பார்வைகள்"
என்கிற இக்கவிதையானது காதலின் ஆரம்ப நிலை ஈர்ப்பில் ஒவ்வொரு ஆணுக்குள்ளும் நிகழும் மெல்லிய ஒரு தலை அடுக்குகளை கவியில் சொல்லி வாசகனையும் தலைவியினையும் ரசிக்க வைத்து தன்னை அறியாமலே உதடுகளின் ஓரத்தில் புன்னகையினை உதிர்க்கச் செய்கிறது...
என்கிற இக்கவியானதும் அகத்தையும் புறத்தையும் அறவழியில் செலுத்தாமல் பிறரையும் அவர்கள் செயல்களையும் குறைகூறும் குறைமதி மடையர்களை,தங்களை தாங்களே ஒரு முறை தற்தகுதிச் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளுங்கள் என்று எளிய வார்த்தைகளால் ஒரு எல்லைக்கோட்டினை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறார்.
"விமோசனம்" என்ற இக்கவியின் பின்புலத்தில் நிகழும் நிகழ்வுகளை மெல்ல காணாமல் போகும் மானுடத்தின் பரிதாப கோணத்தை எளிய சொற்களால் எள்ளி நகையாடுகிறார் கவிஞர்.இப்படியாக...
இக்கவிதையின் கடைசி இரண்டு பத்திகளையும் என்னவென்று விளக்குவது முதுகெலும்பை தொலைத்த இளையோருக்கு...
"சாதாரண இந்தியன்" என்ற இக்கவியில் திருக்குறள் 291, "வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்"
என்ற வள்ளுவனின் குறளுக்கு உலக கவிஞர்களின் பார்வையில் இப்படியும் ஒரு விளக்கம் தரலாமென எண்ண வைத்து, ஒவ்வொரு நாட்டிலும் சாதாரண குடிமகனால் சின்னச் சின்ன பொய்களைச் சொல்லாமல் தன் இயல்பு வாழ்க்கையினை குடும்ப வறுமை மற்றும் அலுவலகம் சார்ந்த சூழலில் நகர்த்த முடியுமாயென...? பல்வேறு சிந்தனைகளைத் தூண்டி,வாழ்க்கை என்பது இப்படியும் இருக்குமென...! எளிய சொற்களால் கவிதையெனும் வாழ்வியல் சித்திரத்தை வரைந்துக் காட்டுகிறது கவிஞரின் இவ்வரிகள்...
"சாதாரண இந்தியன்"
"பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்"(ஐ) வாசித்து முடித்த பின் குளத்திலிட்ட கல் போல் இத்தொகுப்பில் உள்ள கவிதைகளின் பிம்ப அலைகள் மீண்டும் மீண்டும் உங்களையே வந்துசேரும் தன்மைகள் கொண்டவை...
வாழ்வில் ஒவ்வொரு முறையும் வாசித்து அசைப்போடக் கூடிய நூல்களில் இதுவும் ஒன்றென என் மனப்பட்டியலில் ஒன்றிக்கொண்டது இன்றிலிருந்து...

அயற்கோழியிடம் போய்
கொத்து வாங்கி
வந்திருக்கிறதே,
ஏமாளியாத் தன் குஞ்சு
என்ற
கோபத்தில்
தாய்க்கோழி
கடிந்து
கொத்தியது,
குஞ்சை...

என் வீட்டுக் காம்பவுண்டு
சுவர் முழுவதும்
அம்மைத் தழும்புகள்;
காரணம்
பக்கத்து வீட்டுக்காரர்
பசுமாடு வைத்திருக்கிறார்.
சுவர் முழுவதும்
அம்மைத் தழும்புகள்;
காரணம்
பக்கத்து வீட்டுக்காரர்
பசுமாடு வைத்திருக்கிறார்.
என்கிற இக்கவிதையிலும் அண்டை வீட்டு சொந்தங்களின் அருமை பெருமைகளை நேர்மையானக் கருத்தில் எதிர்மறை செயல்களை இலகுவாகக் கடத்துகிறார்.
"பனித்துளிப் பார்வைகள்"
உனது பெயரை
மீண்டும் மீண்டும்
உச்சரித்த பொழுதுதான்
இனிப்புக்கு இன்னொரு அர்த்தம்
இருப்பதையே
எனது நா உணர்ந்துகொண்டது.
அன்று நடந்த
கவிதைப் போட்டிக்கு
எல்லோரும் கவிதையோடு
வந்திருந்தார்கள்.
ஆனால்
நீ மட்டும்
உன் கண்களோடு வந்திருந்தாய்.
காதலுக்குக் கண்ணில்லை
என்பது பொய்.
உன் கண்களைப் பார்த்த
பிறகுதானே
உன்னை நேசிக்கத் துவங்கினேன்.
நான் இத்தனை முறை
உச்சரித்தும்
உன் உதடுகள் ஏன்
மௌனத்தையே உச்சரிக்கின்றன?
மீண்டும் மீண்டும்
உச்சரித்த பொழுதுதான்
இனிப்புக்கு இன்னொரு அர்த்தம்
இருப்பதையே
எனது நா உணர்ந்துகொண்டது.
அன்று நடந்த
கவிதைப் போட்டிக்கு
எல்லோரும் கவிதையோடு
வந்திருந்தார்கள்.
ஆனால்
நீ மட்டும்
உன் கண்களோடு வந்திருந்தாய்.
காதலுக்குக் கண்ணில்லை
என்பது பொய்.
உன் கண்களைப் பார்த்த
பிறகுதானே
உன்னை நேசிக்கத் துவங்கினேன்.
நான் இத்தனை முறை
உச்சரித்தும்
உன் உதடுகள் ஏன்
மௌனத்தையே உச்சரிக்கின்றன?
என்கிற இக்கவிதையானது காதலின் ஆரம்ப நிலை ஈர்ப்பில் ஒவ்வொரு ஆணுக்குள்ளும் நிகழும் மெல்லிய ஒரு தலை அடுக்குகளை கவியில் சொல்லி வாசகனையும் தலைவியினையும் ரசிக்க வைத்து தன்னை அறியாமலே உதடுகளின் ஓரத்தில் புன்னகையினை உதிர்க்கச் செய்கிறது...
"துலாக்கோல்களே!"
மற்றவர் எடையை
நிர்ணயிப்பதற்கு முன்
உங்கள் இரு பக்கங்களையும்
ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள்.
மற்றவர் எடையை
நிர்ணயிப்பதற்கு முன்
உங்கள் இரு பக்கங்களையும்
ஒழுங்குபடுத்திக் கொள்ளுங்கள்.
என்கிற இக்கவியானதும் அகத்தையும் புறத்தையும் அறவழியில் செலுத்தாமல் பிறரையும் அவர்கள் செயல்களையும் குறைகூறும் குறைமதி மடையர்களை,தங்களை தாங்களே ஒரு முறை தற்தகுதிச் பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளுங்கள் என்று எளிய வார்த்தைகளால் ஒரு எல்லைக்கோட்டினை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறார்.
"விமோசனம்" என்ற இக்கவியின் பின்புலத்தில் நிகழும் நிகழ்வுகளை மெல்ல காணாமல் போகும் மானுடத்தின் பரிதாப கோணத்தை எளிய சொற்களால் எள்ளி நகையாடுகிறார் கவிஞர்.இப்படியாக...
உன் கோபுரத்திற்கு
அருகிலிருக்கும்
குடிசை குனிய மறுக்கிறதா?
கோபப்படாதே
கொளுத்திவிடலாம்
இரவோடு இரவாக.
உன் நிலத்தை விஸ்தரிக்க
ஒட்டியிருப்பவன் நிலத்து
முட்டுக்கல் ஒரு
முட்டுக்கட்டையாக இருக்கிறதா
கவலைப்படாதே
ஒழித்துவிடலாம்
ஒரேயடியாக.
தொலைவிலிருப்பவன்
தொல்லை தருகிறானா
துயருறாதே
தொலைத்துவிடலாம்
யாருக்கும் தெரியாமல்.
போரடிக்கிறதா
கவர்ச்சிக் கதாநாயகி
கடவுளாய் நடித்த
பக்திப் படத்தைப்
போய்ப் பார்.
அதிகமாய்ப்
பாவம்
செய்தது போல்
தோன்றுகிறதா
அலட்டிக்கொள்ளாதே
சமயப்புத்தகம்
படிக்கலாம் வா.
அருகிலிருக்கும்
குடிசை குனிய மறுக்கிறதா?
கோபப்படாதே
கொளுத்திவிடலாம்
இரவோடு இரவாக.
உன் நிலத்தை விஸ்தரிக்க
ஒட்டியிருப்பவன் நிலத்து
முட்டுக்கல் ஒரு
முட்டுக்கட்டையாக இருக்கிறதா
கவலைப்படாதே
ஒழித்துவிடலாம்
ஒரேயடியாக.
தொலைவிலிருப்பவன்
தொல்லை தருகிறானா
துயருறாதே
தொலைத்துவிடலாம்
யாருக்கும் தெரியாமல்.
போரடிக்கிறதா
கவர்ச்சிக் கதாநாயகி
கடவுளாய் நடித்த
பக்திப் படத்தைப்
போய்ப் பார்.
அதிகமாய்ப்
பாவம்
செய்தது போல்
தோன்றுகிறதா
அலட்டிக்கொள்ளாதே
சமயப்புத்தகம்
படிக்கலாம் வா.
இக்கவிதையின் கடைசி இரண்டு பத்திகளையும் என்னவென்று விளக்குவது முதுகெலும்பை தொலைத்த இளையோருக்கு...
"சாதாரண இந்தியன்" என்ற இக்கவியில் திருக்குறள் 291, "வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்"
என்ற வள்ளுவனின் குறளுக்கு உலக கவிஞர்களின் பார்வையில் இப்படியும் ஒரு விளக்கம் தரலாமென எண்ண வைத்து, ஒவ்வொரு நாட்டிலும் சாதாரண குடிமகனால் சின்னச் சின்ன பொய்களைச் சொல்லாமல் தன் இயல்பு வாழ்க்கையினை குடும்ப வறுமை மற்றும் அலுவலகம் சார்ந்த சூழலில் நகர்த்த முடியுமாயென...? பல்வேறு சிந்தனைகளைத் தூண்டி,வாழ்க்கை என்பது இப்படியும் இருக்குமென...! எளிய சொற்களால் கவிதையெனும் வாழ்வியல் சித்திரத்தை வரைந்துக் காட்டுகிறது கவிஞரின் இவ்வரிகள்...
"சாதாரண இந்தியன்"
பாவாடை
பழுதாகிவிட்டதே
என வருத்தப்படும் மகளிடம்
புதிதாகத் தானிருக்கிறது எனப்
போலிச் சமாதானம் சொல்லி.
அலுவலகத்துக்குத்
தாமதமாக வந்ததற்குக்
கடிந்துகொள்ளும்
மேலாளரிடம்
பேருந்து
பிரேக்-டவுன் எனும்
பழைய பல்லவியைப்
பாடி.
காபி சாப்பிட்ட உடன்
வேலை செய்பவர்கள்
அழைத்தபோது
சட்டைப் பையில்
காசில்லாத காரணத்தால்
‘இப்போதுதான்
சாப்பிட்டேன்’
எனச் சமாளித்து.
மாலையில்
வீடு திரும்பும்போது
குழந்தை
சத்தம் போட்டுப் படிப்பது
காதில் விழுந்தது
“பொய் சொல்லக்
கூடாது பாப்பா”
பாப்பாக்கள் வேண்டுமானால்
பொய் சொல்லாமல்
இருக்கலாம்.
ஆனால்
வறுமையில் வாடும்
ஒரு சாதாரண இந்தியன்
இன்று
என்ன செய்ய முடியும்?