குறும்பா - ழகரம்
குறும்பாக்களை குட்டிக் குட்டி கற்களாக்கி நம் மனமெனும் குளத்திலிடுகிறார். அதில் தோன்றும் எண்ண அலைகள் கரையினைத் தொட்டு அதன் மையத்திற்கே முடிவது போல இவர் ஏற்படுத்திய அலைகளும் இவர் கவிதைகளிலேயே மீண்டும் வந்து முடிகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த குறும்பா கவிதையினைக் குயவனைப் போல் சொற்களைக் குலைத்துக் குலைத்து புலவனாய் புல்லரிக்க வைத்திருக்கிறார் கவிஞர் ழகரம் அவர்கள்...
மூன்றடியில் உலகம் அளந்த வாமனனின் நவீன உருவமாய் குறும்பா என்னும் கவிதை வடிவத்தினை நம்புகிறவன் நான். அவ்வகையில் இவர் படைப்புகளும் சமுதாயத்தினையும் தனிமனித உணர்வுகளையும் அறக் கருத்துகளையும் எளிய வார்த்தைகளாகக் கொண்டு நம்மை வானம் நோக்கிய ஏணியில் ஏற்றி அழகுப்பார்க்கிறார்...
மதுரை மண்ணுக்கே உரித்தான கம்பீர வார்த்தைகளை உள்ளே ஆங்காங்கே அழகியலாக்கி இருக்கிறார்...
இக்குறும்பா தொகுப்பினை மெல்ல மெல்ல விழிகளால் நகர்த்தி விரல்களால் தடவி சிந்தனையில் உணர்கிற பொழுது செவியோரத்தில் தென்றல் வந்து அடடே என்று சொல்லி தடவிச் செல்கிறது...
இவரின் பெயரைப் போலவே சிறப்பான சில கவிதைகளை உங்களின் எண்ணக் குளத்திலிட எடுத்துத் தருகிறேன். நீர் வளையம் போல் உங்களின் எண்ண வளையமும் அதன் மையத்திற்கே வந்து முடியும் விந்தையினை உணர ஒரு தேர்ந்த வாசகன் என்ற முறையில் என் அன்பும் வாழ்த்துகளும்...
இவ்வரிகள் ஆகச் சிறந்த பொருளே ஆயினும், அதைப் பயன்படுத்தாத வரை எவருக்கும் பயனில்லை. அப்படி பயன்படுத்தப்படுகின்ற பொருளும் பயன்படுத்துகின்றவரின் கை பக்குவத்திலும் தான் பொருளின் சிறப்பு கூடுகிறது. இன்றைய சூழ்நிலையில் புத்தகங்களின் நிலைமையும் இப்படி ஒரு நிலையினை எதிர்கொள்ளத்தான் செய்கின்றன. அப்படி,புத்தகங்களை எடுத்து வாசிக்க வாசிக்கத்தான் புத்தகங்களுக்குள்ளும் அணுகுண்டுகளை விட அதிக தாக்கத்திற்கு உள்ளாக்கும். எழுத்துக்களின் கூட்டமைப்பையும் அதன் வீரியத்தையும் ஒவ்வொரு எழுத்தாளனும் பதிய வைத்திருக்கிறான் என்பதை அறிய முடிகிறது...
இவ்வரிகள், போட்டியில் கலந்து கொள்ளும் பொழுது மனதில் இருக்கிற நிதானத்தை விட பொறாமை கொள்ளும் பொழுது வேகமாய் நகர்வதாய் நம்மை நம்ப வைத்து ஒரே இடத்தில் சுழன்று சுழன்று திரியும் பம்பரத்தின் நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது இக்கவிதை. இங்கே எதிர்மறையாய் உற்று நோக்கக்கூடிய ஆகச் சிறந்த கவிதைகளில் இதுவும் ஒன்று...
ஆம் இவர்கள் ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கைகளுக்குள்ளும் சமுதாய கட்டமைப்பிலும் பிறர்க்கான செயல்களைச் செய்து செய்தே நம்மை நாமே உணராமல் போகக் கூடிய கொடிய தருணத்தை மனதின் ஓரத்தில் தூண்டிச் செல்கிறது...
எத்தனை பெரிய பதவி உயரத்தில் இருந்தாலும் எத்தனை விலை மதிக்க முடியாத ஆடைகளை உடுத்தி இருந்தாலும் உலகத்தையே ஒரு கை பார்க்கக்கூடிய பலம் இருந்தாலும் பசி என்ற ஒன்று வருமாயின் அதனை எவராலும் தாங்கிக் கொள்ளவோ தடுத்து நிறுத்தவோ மேலாடை போர்த்தியோ மறைத்துக்கொள்ள முடியாது. எனினும், சில நேரங்களில் சில மனிதர்கள் தான் கொண்ட வைராக்கியத்தின் காரணமாக பசியினை உதட்டு ஓரத்தில் புன்னகை என்னும் ஆடையினால் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்பதனை நினைவு கூற இவ்வரிகள் முந்தி வந்து முகம் முழுக்க வலியோடு சின்ன சின்ன புன்னகைகளை தருகிறது...
மேலே சொன்ன வரிகளைப் போல சிலரின் நினைவுகள் முற்பொழுதும் நம்மை தின்று கொண்டே இருப்பதனால் பசி என்னும் தீயையும் தின்று செரிக்கிறது...
நினைவுகள் பசியை விட பெரும் கொடிய நோய். இதை மறப்பதற்காக மனிதன் படுகின்ற பாட்டை கவிதைகளாக எழுதித் தீர்க்க இன்றுவரை முயன்று முயன்று தோல்வினையே தழுவுகிறான் என்பதை இவரின் இவ்வரிகள் ஆழ்ந்த வாசகனுக்கு மீண்டும் மீண்டும் உணர வைக்கிறது.
இருட்டு என்பது வெளிச்சக் குறைபாட்டின் ஓர் நிலை. இருள் இல்லாத இடம் எங்கு இருக்கிறது...? மனித மனமும் தனக்கென ஒரு இருட்டை ரகசியமாக பாதுகாத்து வைத்திருக்கிறது. அந்த ரகசியத்தில் எத்தனை எத்தனையோ விதமான மனதிற்கு பிடித்த பிடிக்காத செயல்களோடு சேர்ந்து நம்மை நாமே பிணைத்து வைத்திருக்கக் கூடிய ஒரு மயக்க நிலையினை தினம் தினம் தந்து போகிறது. அதனை கலை வடிவமாக பார்க்கக்கூடிய ஆற்றல் நிறைந்த மனிதர்கள் அந்த இருட்டை தங்களுக்கான ஒரு சொர்க்கமாகக் கருதி
தெளிந்த நல் போதையில் இத்தகைய படைப்புகளை இயற்கையோடு இயற்கையாக ரசிக்க தந்து போகிறார்கள். அவ்வகையில் இவரின் படைப்பும் ரசனைக்கு ஏற்றதாக எளிய மொழியில் படைத்திருக்கிறார் கவிஞர் ழகரன் அவர்கள்...
கவிஞருக்கு மென்மேலும் வெற்றிகள் பல தேடிவந்து அவரின் புகழுக்கு தோரணம் கட்ட என் அன்பும் வாழ்த்துகளும்....

மூங்கிலாய் தான்
கிடக்கிறது
எடுத்து இசைக்கும்
வரை புல்லாங்குழல்...

பொறாமையில்
ஆமை கூட
வேகமாய் நகரும்...
ஆமை கூட
வேகமாய் நகரும்...
இவ்வரிகள், போட்டியில் கலந்து கொள்ளும் பொழுது மனதில் இருக்கிற நிதானத்தை விட பொறாமை கொள்ளும் பொழுது வேகமாய் நகர்வதாய் நம்மை நம்ப வைத்து ஒரே இடத்தில் சுழன்று சுழன்று திரியும் பம்பரத்தின் நிலையை படம் பிடித்துக் காட்டுகிறது இக்கவிதை. இங்கே எதிர்மறையாய் உற்று நோக்கக்கூடிய ஆகச் சிறந்த கவிதைகளில் இதுவும் ஒன்று...
எல்லோரையும்
சிந்திக்க வைக்க
வேண்டுமென்று
சிரிக்க மறந்துவிட்டேன்...
சிந்திக்க வைக்க
வேண்டுமென்று
சிரிக்க மறந்துவிட்டேன்...
ஆம் இவர்கள் ஒவ்வொரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கைகளுக்குள்ளும் சமுதாய கட்டமைப்பிலும் பிறர்க்கான செயல்களைச் செய்து செய்தே நம்மை நாமே உணராமல் போகக் கூடிய கொடிய தருணத்தை மனதின் ஓரத்தில் தூண்டிச் செல்கிறது...
ஆடைகளுக்குள்
மறைக்கப்பட்டப்
பசி...
மறைக்கப்பட்டப்
பசி...
எத்தனை பெரிய பதவி உயரத்தில் இருந்தாலும் எத்தனை விலை மதிக்க முடியாத ஆடைகளை உடுத்தி இருந்தாலும் உலகத்தையே ஒரு கை பார்க்கக்கூடிய பலம் இருந்தாலும் பசி என்ற ஒன்று வருமாயின் அதனை எவராலும் தாங்கிக் கொள்ளவோ தடுத்து நிறுத்தவோ மேலாடை போர்த்தியோ மறைத்துக்கொள்ள முடியாது. எனினும், சில நேரங்களில் சில மனிதர்கள் தான் கொண்ட வைராக்கியத்தின் காரணமாக பசியினை உதட்டு ஓரத்தில் புன்னகை என்னும் ஆடையினால் மறைத்து வைத்திருக்கிறார்கள் என்பதனை நினைவு கூற இவ்வரிகள் முந்தி வந்து முகம் முழுக்க வலியோடு சின்ன சின்ன புன்னகைகளை தருகிறது...
பசித் தீயை
நினைவுகள்
ஊற்றி அணைக்கிறேன்...
நினைவுகள்
ஊற்றி அணைக்கிறேன்...
மேலே சொன்ன வரிகளைப் போல சிலரின் நினைவுகள் முற்பொழுதும் நம்மை தின்று கொண்டே இருப்பதனால் பசி என்னும் தீயையும் தின்று செரிக்கிறது...
நினைவுகள் பசியை விட பெரும் கொடிய நோய். இதை மறப்பதற்காக மனிதன் படுகின்ற பாட்டை கவிதைகளாக எழுதித் தீர்க்க இன்றுவரை முயன்று முயன்று தோல்வினையே தழுவுகிறான் என்பதை இவரின் இவ்வரிகள் ஆழ்ந்த வாசகனுக்கு மீண்டும் மீண்டும் உணர வைக்கிறது.
இருட்டு
எனக்கொரு
போதை...