சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்
சாக்ரடீஸின் சிவப்பு நூலகம் - ராமகிருஷ்ணன்

சாக்ரடீஸின் சிவப்பு நூலகம் - ராமகிருஷ்ணன்

சிறுவர்களிடையே புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும், நூலகத்திற்கு சென்று புத்தகங்களை தேர்வு செய்யவும், இந்த புத்தகம் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்.

விடுமுறைநாட்களில் வீடியோ கேம் விளையாடும்” நந்து” என்ற சிறுவனை அவனது அம்மா நூலகத்திற்கு அழைத்து செல்கிறார். அங்கு அவன் ரகசிய நூலகம் ஒன்றை கண்டுபிடித்து அவன் நண்பருடன் சென்று வருவதாக கனவு காண்கிறான்.

அந்த கனவினை ”சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்” என்ற பெயரில் புத்தகமாக வெளியிடுகிறான் என்பது கதையின் சுருக்கம்.

நந்து நூலகத்திற்கு செல்லும் அங்கு அவன் சந்திக்கு விலங்குளும் அவர்களுக்குள் நிகழும் விவாதங்களும் சிறுவர்கள் ரசிக்கும் வகையில் மாயாஜாலம் நிறைந்ததாகவும் அதனை விவரித்துள்ள விதம் நாமும் அவனுடன் பயணிப்பது போன்ற அனுபவத்ததை ஏற்படுத்துகிறது.

இதுவரை நூலகத்திற்கு செல்லதாவர்கள் கூட இந்த புத்தகத்தை படிக்கும்போது நூலகத்திற்கு சென்று வந்த அனுபவத்தை ஏற்படுத்தும் வகையில் கதையின் போக்கு அமைந்துள்ளது.

சிறுவர்களுக்கு புத்தகங்களை படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தவும், எந்த வகையான புத்தகத்தை எப்படி தேர்வு செய்வது என்பவை குறித்து எளிமையாக கதையின் வாயிலாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.



சரிங்க, இப்பொழுது இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சில சிறந்த வரிகளை நமக்கு எழும் கேள்விகளின் பதில்களாக பின்வருமாறு பார்போம்.
புத்தகம் என்றால் என்ன? 
”புத்தகம் என்பது சொற்களால் நெய்யப்பட்ட மாயக்கம்பளம் அதில் ஏறி எங்கெங்கோ போகலாம்.”

புத்தகம் படிக்கும் பழங்கத்தை எவ்வாறு ஏற்படுத்துவது?
”சாப்பிடுறது மாதிரி தண்ணீர்  குடிக்கிறது மாதிரி இதுவும் அடிப்படையான விஷயமாக ஆகணும்”.

புத்தகங்களை எவ்வாறு தேர்வு செய்வது?
”சில புத்தகங்கள் உங்களை சரியாக வழிகாட்டும், சில தவறுகள் செய்யத்தூண்டும். ஆகவே
புத்தகங்களைக் கவனமாகக் கையாளுங்கள்.” ”மற்றவர்களுக்குச் சொல்வதற்காக ஒருபோதும்
எதையும், படிக்காதே. உனக்காகப் படி, உன்னைத் தெரிந்து கொள்வதற்காகப்படி.

புத்தகம் மனிதனுக்கு துணையாகுமா?
”அடுத்த மனிதனை நேசிக்கமுடியாத ஒருவனுக்கு புத்தகம் தேவையற்றது.” ”மனிதர்கள்
உருவாக்கியதில் மிக அரியது புத்தகமே” ”எல்லா புத்தகங்களுக்கும் உயிர் இருக்கு.தன்னை
அறிந்து கொள்வதற்கு மனிதனுக்குப் புத்தகங்களைத் தவிர வேறு துணையேயில்லை.”

புத்தகங்களை எவ்வாறு பாதுகாப்பது?

நாம ஒவ்வொருவரும் நூறு புத்தகங்களை வாங்கி வீட்ல வச்சுப் பராமரிக்கணும். அப்போதான்
அறிவுள்ள சமூகமாக நாம மாற முடியும்.

படித்தவன் எவ்வாறு இருப்பான்?
”படித்தவன் பேசிக்கொண்டேதானிருப்பான். பேச்சுதான் என் இனத்தின் வரலாற்றைத் தொடரச்
செய்யும் செயல். நான் தனியாள் இல்லை என்பதை உலகிற்கு எடுத்துச் சொல்லும் வழி. படிப்பு
மட்டும்தான் என் அடையாளம். நீர்த்துளி இடைவிடாமல் விழுந்து விழுந்து கருங்கல்லில் ஆழமான
துளையை உண்டாக்கிவிட முடியும், பேச்சு அப்படியானது.”

இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சிறுவர்கள் ரசிக்கும் குட்டிக்கதைகள்:
1. ”தேன் கதை”-தவறுகள் சிறியதாக இருக்கும்போதே தீர்வு காண வேண்டும்.
2. ”கழுதை புலியைக் கொன்ற கதை”-யாரையும் உருவத்தை வைத்து கேலி செய்யக் கூடாது.

மேலும் சிறுவர்கள் கெட்ட வார்த்தைகளை பேசக்கூடாது என்றும், வீட்டில் நூலகம் அமைப்பது குறித்தும், புத்தகம் எழுவது குறித்தும் தெரிவித்துள்ளார்.

மொத்ததில் 55 பக்கங்களில் புத்தகம், நூலகம் குறித்த ஒரு தகவல் களஞ்சியமாகவும், புத்தகம் படிக்கும், நேசிக்கும், பாதுகாக்கும், எழுதும் ஆர்வத்தை சிறுவர்களிடையே ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ள ”சாக்ரடீஸின் சிவப்பு நூலகத்திற்கு உங்கள் வீட்டு சிறுவர்களுடன் நீங்களும் செல்ல முயற்சியுங்கள்.”