பௌர்ணமிப் பூக்கள் - மயில்
காதலும் வீரமும் தமிழர்களின் அடையாளங்கள். காதல் எங்கே உள்ளதோ அங்கே கவிதையும் இருக்கும். கவிதை சங்க காலத்தில் இருந்து இன்று வரை உருமாறிக் கொண்டு வந்தாலும் கவிதையைப் படைப்பவர்களும் கவிதையை ஆராதிப்பவர்களும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். கவிஞர்களின் முதல் தேர்வாக காதலே உள்ளது. எனவே அவர்களின் முதல் படைப்பு காதலைப் பற்றியும் தன் காதலியைப் பற்றியும் தான்.
ஆண்கள் தன் தன் காதலையும் தன் காதலியையும் பற்றிப் பாடிக் கொண்டிருக்க பெண்கள் தன் கண்ணில் படும் காட்சிகளை மட்டும் பாடாமல் தனக்கு அல்லது பெண்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை அல்லது பெண்களுக்கு மட்டுமே நடக்கின்ற கொடுமைகளை, அவஸ்தைகளை, வலிகளை எழுதுகிறார்கள். ஒருவர் கேட்டு பார்த்து எழுதுவதைவிட தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உணர்ந்து பெண்கள் எழுதும் போது அதன் வீரியம் மிகப் பெரியது. தன் வலியை வேதனையை ஒரு பெண் வெளிப்படுத்தும் போது அது எப்படி இருக்கும் என்பதை அவரின் 'பெண் என்னும் பெரும் யாக்கை' என்ற கவிதையின் மூலம் உணரலாம்.
பெண் எனும் பெரும் யாக்கை எனும் இக்கவிதை பெண்ணின் வலியை, வேதனையைப் பற்றி மட்டும் கூறாமல் அவர்களை இச்சமூகம் எப்படி வழி நடத்துகிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். உலகம் தொழில்நுட்பத்தில் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது; அதன் மூலம் உலகம் சுருங்கி கொண்டிருக்கின்றது. ஆனாலும் கிராமமோ நகரமோ இன்னும் பெண்கள் மட்டும் அடைபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நான் தேவதைதான்
ஆனால் சிறகுகள்
வெட்டப்பட்ட தேவதை...
நான் துள்ளித் திரியும் மான் தான்
கால்கள் உடைக்கப்பட்ட மான்...
நான் கற்க இங்கு ஏராளம் தான்
ஆனால், அளவுகோல்
என்னிடம் இல்லை...
----------------------------------------

நான் எதுவாக இருந்தாலும்
என் கனவுகள் உங்கள்
கைகளில் இருந்தன...
இக்கவிதை இச்சமுகம் பெண்ணை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அது மட்டும் இல்லாமல் இக்கவிதையே கவிஞர் மயில் அவர்களை ஒரு கவிஞராய் அடையாளப்படுத்துகிறது.
அன்னையே தெய்வம் என்ற கவிதை தாயைப் பற்றி புகழ்ந்தாலும் கவிஞர் மயில் அவர்கள் கொடுத்துள்ள இந்த வர்ணனைகள் மிக அழகாக உள்ளது.
பூக்களின் மொழி என்ற கவிதையைப் படித்துக் கொண்டிருக்கும் பொழுது பிரபஞ்சன் அவர்களின் "எவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது?!’’ என்ற வரியை எனக்கு நினைவுபடுத்தியது. கவிஞரின் இந்த பூக்களின் மொழியை போல மனிதர்களும் வசவு இல்லாமல் வாசனையை கொடுத்தால் உலகமே மனிதநேயமாக இருக்கும்.
படைப்பவள் பெண். ஆக்குபவளாக அவர்கள் இருப்பதால் ஒன்றை அழிக்கவோ அழிக்க முயற்சிக்கவோ வருத்தப்படுவார்கள். இதற்கு உதாரணமாக இந்தக் கவிதையை குறிப்பிடலாம்.

ஒட்டடை அடித்து
கூட்டிப் பெருக்கி முடித்தவுடன்
மனம் வலித்தது
சிலந்தியின் வீட்டை
சேர்த்து அழித்ததற்காக...
விவரம் அறியாத வயதில் நாம் செய்த ஏதோ ஒன்று இப்போது நமக்கு பயத்தையோ அல்லது மகிழ்ச்சியையோ கொடுக்கும். அப்படி அறியா வயதில் செய்த ஒன்று இப்போது ஒருவனை அல்லது ஒருத்தியை என்ன பாடுபடுத்துகிறது என்பதை நகைச்சுவை/மிரட்டல் கலந்த கவிதையாக வெளிப்படுத்துகிறார்.
கவிதைகளில் ஆங்காங்கே பல வரிகள் அட... போட வைக்கின்றன. உதாரணமாக,
வெண்ணிற இரவும்
கருநிறப் பகலும் வேண்டும்;
வெண்பஞ்சு மேகம் போன்ற அவள் கைகள்;
ஓட்டை இல்லாத
ஒட்டடை இல்லாத
வானத்தையும் பூமியையும்
இணைத்து ஒரு வீடு...
பூமியே புதிதாய்த் தோன்றும்
மழை பெய்த காலை...
வானிடம் கேள்வி
மழை பொழியாமல் இருந்தால்...?
பதில் மானிடனை மட்டுமே
நான் பார்ப்பதில்லை...
கவிஞர், பெண்ணின் வேதனைகளை மட்டும் பாடவில்லை; ஆண்களின் விடலைப் பருவ காதலைச் சுட்டிக்காட்டுகிறார்; மழையைப் பற்றி எழுதி ஆனந்தக் கூத்தாடுகிறார்; திருப்பூர் நகரத்தின் நிலையை விவரிக்கிறார்; குழந்தைகளைப் பூக்களாய் உருவப்படுத்துகிறார்; பேனாவையும் புத்தகத்தையும் பாடுகிறார்.
எல்லாவற்றையும் நான் சொன்னால் இந்த கவிதைப் புத்தகத்தை நீங்களும் படித்தது போலவே இருக்கும். எனவே நீங்களும் வாங்கிப் படியுங்கள் கவிஞர் மயிலின் 'பௌர்ணமிப் பூக்கள்' எனும் இக்கவிதைப் புத்தகத்தை.
கவிதைக்களம் பெரியது. கவிஞர் மயில் அவர்களே, அந்த கவிதைக் களத்தில் நீங்கள் தோகை விரித்து விளையாட வாழ்த்துகள்.

என் அழகின்
முதல் கண்ணாடி
அவள் கண்கள்...
----------------------------------------
----------------------------------------
என் முதல் சிம்மாசனம்
அவளின் இடை...

கட்டிக்கத் தான் நெருங்கினேன்
நீயோ கரைகிறாய்
ஒட்டிக்கத்தான் உரசினேன்
நீயோ ஒதுங்குகிறாய்
கொட்டடிச்சு சொல்லிடுவேன்
பள்ளிப் பருவத்தில் நீ
கொடுத்த முத்தத்தை...