யூமா வாசுகி நேர்காணல்கள்- வையத்து வாழ்வீர்காள்
மனித சமூகத்தின் இன்றைய இருப்பும், அது கண்டுள்ள நாகரீக வளர்ச்சியும் மனித சிந்தனை வளத்தின் மூலமே நடந்துள்ளது. சிந்திக்க அவனுக்கு உதவிய பெருங்கருவியான கேள்வியும் அதன்பால் விளைந்த பதிலும் மனிதனை அடுத்தடுத்த நகர்விற்கு கொண்டு சென்றது. கேட்கப்படுவது ஒரே கேள்வியாயினும், பலவகை பதில்களை கொடுப்பதும், சொல்வது ஒரு பதிலாயினும் அதை வெவ்வேறு வகையில் எடுத்துக்கொள்ளும் பக்குவமும் மனித சிந்தனைக்கு உண்டு. ஒரு மழைத் துளி சேரும் இடத்தை சேர்ந்து மாறும் வண்ணம், கேள்வியும் பதிலும் உருமாறும். அதைக் கொண்டு ஒரு உரையாடல் நிகழ்த்தியும் அதற்கு எதிர்வினையாற்றியும் சமூக மாற்றமும் அதன் வளர்ச்சியும் நடந்துகொன்டே இருக்கிறது. அதுவும் கற்றவரிடத்தில் கேட்கப்படும் கேள்வியும், அனுபவம் உற்றவரிடத்தில் கேட்கப்படும் கேள்வியும் ஞானம் தருபவை, நன்மை பயப்பவை, மற்றும் ஏட்டில் நிலைப்பவை. அப்படி கற்றவரும் அனுபவம் உற்றவருமான யூமாவின் இந்த நேர்காணல் தொகுப்பு ஞானத்தின் ஊற்றுக்கண்.
பிரஞையற்று திரியும் அகத்திற்கு, இலக்கியமும் கலையும் தரும் ஒளி தன் அகத்தை நிர்வாணப்படுத்தி சுயத்தை உணர்த்தவும், இசைபட வாழ்தலை ஒரு அழகிய உரையாடலாக மாற்றி அதன் நீட்சியின் வழியே இவ்வாழ்வின் கசடுகளை களைய நாம் படும் பிரயத்தனைங்களை, இலக்கியமும் கலையும் எளிதாக்குகிறது. இவ்வகையிலும் கலை (ஓவியம்) மற்றும் இலக்கியம் தெரிந்த யூமாவின் பதில்கள் அத்தனை ஆழமாக உள்ளது.
தேடி திரிந்தும் கிடைக்கா வேதனை படிந்த இவ்வாழ்வில், ஒரு மனிதனால் எல்லாவற்றையும் தேடியே பெற்றுவிட முடிவதில்லை, தன் சுயத்திற்கு ஏற்ற ஒரு பாதையை அவன் தேடுகிறான். அத்தேடலில், வாசிப்பு ஒருவரின் சுயத்தை கற்றுணர பெரும் பங்காற்றுகிறது. அப்படி ஒரு படைப்பானது தம்முள் இருக்கும் காரிருளை சற்றேனும் தம் சுடர்க்கொண்டு வெளிச்சத்தை கொடுத்து பாதையை காட்டுகிறது. அப்படி இப்படைப்பும் கேள்வி பதிலின் வழியே ஒரு சிறு பயணத்தை நம்முள் நிகழ்த்தி விடுகிறது.
கேட்கப்படும் கேள்வியின் ஆழம் பொறுத்தே ஒரு பதில் அமையும். ஆனால் யூமாவோ வாசகனை மனதில் கொண்டு பல இடங்களில் கேள்வியின் கனத்தை மீறி காத்திரமான பதிலைத் தருகிறார். அப்பதில்களில் நாட்டம் இல்லாமல் போகலாம், முரண் கொள்ளலாம், ஆனாலும் அம்முரண் நம்மை வேறு வழியே சிந்திக்க வைத்திருக்கும். உடன்படுவோருக்கோ தேடிக் கிடைத்த ஞானம் போன்றது யூமாவின் பதில்கள்.
உதாரணமாக ஒரு இடத்தில் "இலக்கியம் காலத்தின் கண்ணாடி" (பக்கம் 46) என்ற இடத்தில் யூமா அழைத்து சென்ற இடத்தில் இருந்து சற்று என்னால் பயணிக்க முடிந்தது. "இலக்கியம் காலத்தின் கண்ணாடியாக இருந்து சமூக நடப்புகளாக ......" என்று அழைத்து வந்து நிறுத்தினார். நான் ஏனோ இலக்கியம் ஏன் ஒரு கண் கண்ணாடியாக இருக்கக் கூடாது என்று யோசித்தேன். உண்மையில் எனக்கு இலக்கியம் நிலைக்கண்ணாடியாக மட்டும் இல்லாமல் ஒரு கண் கண்ணாடியாகவும் இருப்பதை உணர்ந்தேன். பலநேரங்களில் நம் பார்வையில் உள்ள பிழையை திருத்துகிறது, சிலநேரங்களில் பிழையை நீக்கி அதன் அழகைத் தெளிவாகக் காண்பித்து காதலுற வைக்கிறது. ஒரு முழு மனப்பிறழ்விலிருந்து மீட்டெடுக்கும் தன்மை உண்டெனில் அதை நான் ஏன் என் பார்வையை சரிசெய்யும் கண் கண்ணாடியாகவும் பார்க்கக்கூடாது என்ற சிந்தனையைத் தூண்டியது.
இப்படி அவரின் பதில்கள் பல்வேறு இடத்தில் பல்வேறு வகையில் கட்டித்தழுவ வைத்தாலும், அவர் பதிலினூடே என்னை நானே மீட்டுருவாக்கம் செய்வதை நன்கு உணர முடிந்தது.
பெரும்பாலும் கேள்விக்கான பதில் இருவகையில் வரும்; ஒன்று பிடித்த பதில், மற்றொன்று தேவையான பதில். பிடித்த பதில் மிக இலகுவாக விலை போகும். ஆனால் தேவையான பதில்களோ வீண்போகும். நாம் பெரும்பாலும் உண்மைக்கு அருகில் நிற்கச் சலனப்படுவோம். ஏனெனில், அது சில அசௌகரியங்களைத் தரும், ஆனால் பொய்யோ அப்படியல்ல விலையில்லா விளம்பரம் போன்றது; குதூகலத்தை தரவல்லது, அதனாலேயே நமக்குத் தேவையைத் தராமல் பிடித்ததைத் தந்து விடுகிறார்கள். ஆனால் யூமாவோ தேவையைத் தருகிறார் அதுவும் நமக்கு பிடித்தவாறு. எல்லாப்பதில்களும் உண்மைக்கு மிக அருகில் இருந்தே வருகிறது, உண்மை சுட்டாலும் பரவாயில்லை; அவன் தேவையை அவன் உணர்ந்தால் போதும் என்ற நிலையிலானது.
ஒரு இடத்தில் "கவிதை எழுத மனநிலை?" என்ற கேள்விக்கு யூமாவின் பதில் அத்தனை நிதர்சனமானவை, நான் கட்டித்தழுவிய இடங்களில் இதுவும் ஒன்று., பெரும்பாலும் நான் எனக்கு பிடித்த பதிலையே கேட்டுள்ளேன். "வைகைறை விடியல், மார்கழிக்குளிர், அந்திமாலை, தேநீர்க்கோப்பை, சிறுபுள்ளின் பனித்துளி, பாதிபுகைத்த சிகிரெட் துண்டு" போன்ற எண்ணற்ற பதில்களை நான் கேட்டிருக்கிறேன், அது எழுத எத்தனிக்கும் ஒருவனை ஒருவகையான கையறுநிலைக்குத் தள்ளுகிறது, இவை நல்ல கவிதை பிறக்க ஒரு சூழல் என்றாலும், யூமா சொன்ன பதில் இது. "அது வரையறுத்தளுக்கு அப்பாற்பட்டது, மிக நெருக்கடியான ஒரு சூழலில்கூட, நிற்பதற்குக்கூட இடமற்ற ஒரு பேருந்து கூட்டத்தில் பிதுங்கிப்பயணம் செய்யும் பொழுது என் கவிதை வெளியில் மிகச் சுதந்திரமாக பயணம் செய்திருக்கிறேன்". போக்குவரத்து நெருக்கடி மிக்க ஒரு சாலையில் ஓரத்தில் ஒரு கல்லில் அமர்ந்து அழுதபடியே என் சிலக்கவிதைகளை நான் எழுதியிருக்கிறேன்."
எத்தனை ஆத்மார்த்தமான பதில்கள் இவை, ஒரு படைப்பு நிகழ, சிந்தனை கருவுற ஒரு பொறி போதுமல்லவா ?, ஒருவேலை இந்த பதிலில் அழகில்லாமல் போகலாம், ஆனால் அத்தனை ஆழமானவை அவை. இப்படியான பதில்கள் நம்மை பல இடங்களில் ஆற்றுப்படுத்துகிறது.
இதில் மேலும் என்னை ஆச்சர்யப்படுத்திய ஒன்று அவரின் நிலைப்பாடு, வெவ்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்ட பேட்டிகளே இந்தத் தொகுப்பு என்பதால் வாழ்வையும் அது தரும் பாடத்தையும் வைத்து ஒருவன் தன் வாழ்வில் அளப்பரிய மாற்றங்களை கண்டிருப்பான். அது படைப்பு ரீதியாகவும், சித்தாந்த ரீதியாகவும், பார்வை ரீதியாகவும், மாற்றங்களை தந்திருக்கும். ஆனால் யூமாவின் பதில்கள் அத்தனை மாற்றத்தை கண்டுவிடவில்லை, ஒரே மையப்புள்ளியை நோக்கித்தான் சுற்றுகிறது, சிறுவிலகள் தென்பட்டாலும் அவை அந்த மையப்புள்ளியை நோக்கியே நகர்கிறது.
மேலே சொன்ன பதில் 2006-இல் சொன்ன பதில். அதே கேள்வி 2019-இல் கேட்கும் பொழுதும் அதே சாரம்சம் உள்ள பதிலையேத் தருகிறார். அகத்தெளிவுப் பெற்று தன்னை ஒரு இடத்தில் அமர்த்திக்கொண்டு அங்கிருந்தபடியே இவ்வுலக வாழ்வியல் அனுபவங்களைத் தன் முழு பிரஞையோடு வாழ்ந்துகொண்டும், எழுதிக்கொண்டும், உரையாடிக்கொண்டும் இருக்கிறார். அவர் அடைந்த தத்துவ மோட்ச நிலையில் இருந்து இனிவரும் காலங்களிலும் பெரிதும் மாற வாய்ப்பில்லை என்றே அவரின் பதில்கள் காட்டுகிறது.
இலக்கிய வாசலில் உழன்று கொண்டிருக்கும் என்னைப்போன்ற ஆட்களுக்கு, சமூக ஊடகங்களே போக்கிடமாக இருந்தது, அங்கிருந்து மெல்ல மெல்ல முன்னேறி வாசிப்பின் மீது இருந்த ஆசையால் பலரை கண்டடைந்தேன். அப்படி யூமா வாசுகி என்ற பெயரை முதலில் அறிமுகம் செய்தது இப்புத்தகம், ஒருநூறு புத்தகம் எழுதி, வெவ்வேறு தடங்களில் கால்பதித்து, தனக்கென ஒரு இடத்தை உருவாக்கிய ஒரு நபரை இந்த உலகிற்கு வந்த ஏழு ஆண்டுகளுக்கு பிறகே தெரிந்து கொண்டேன் என்பதில் உள்ளபடியே எனக்கு வருத்தம் உண்டு.
யூமாவின் பதில்களே இதற்கு ஒரு சான்று, "நாம் நமது மிகப்பெரிய இலக்கியச் சாதனையாளர்களை மிக அலட்சியமாக நலிவிற்குள் தள்ளியிருக்கிறோம்" என்கிறார், சற்று திருத்த முனைகிறேன் , நலிவுக்கு மட்டும் அல்ல, இங்கே பலருக்கு போதிய வெளிச்சமும் அங்கீகாரமும் கூட நம் சமூகம் தந்துவிடவில்லை" என்பதே நிதர்சனம் . ஒரு இடத்தில் மலையாளிகளை இப்படி விவரிக்கிறார், "ஆயினும் நவீன இலக்கியம் குறித்த அக்கறையும், விழிப்புணர்வும் அவர்களிடம் தீவிரமாக இருக்கின்றன". என் வகையில், கொல்கத்தாவாசிகளைப் பார்த்த வகையில் அவர்களும் அங்ஙனமே இருந்தனர், ஆனால் நம் சமூகம் ஏனோ இன்னும் இந்த அறிவு சுரங்கத்தை முற்றிலும் பயணப்படுத்தாமலே இருக்கின்றது.
ஆதியும் அந்தமும் நடுவும் அற்ற பலக்கேள்விகளின் பதிலை, போக்கிடம் இல்லாமல் உழலும் மனதின் கனத்தை இறக்கிவைக்க ஓர் இடமும் தரும் இன்பம் எத்தகையதோ அத்தகையது இத்தொகுப்பு.
இத்தொகுப்பின் வழியே ஏற்படும் உரையாடல் நம் சமூகத்தை ஒரு இடத்தில் சென்று நிறுத்துகிறது, அங்கிருந்து அவரவர் சிந்தித்து நகர்கையில் ஒவ்வொரு உயிரும் ஒருவகையான அடைவை எட்டுகிறது. இத்தொகுப்பை படித்தவர்கள் அது தரும் படிப்பினையை தத்தம் வாழ்க்கையில் எடுத்துக்கொள்வார்கள், முரண்படுவோர் தம் திசையில் பயணித்து ஏதோ ஒரு இடத்தை அடைவர், எப்படியும் இத்தொகுப்பு ஒரு சிறுநகர்வையேனும் கொடுத்துவிடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
ஓவியம், இலக்கியம், வாழ்தல் போன்ற எல்லா வடிவத்தையும் அதன் சுடர் சற்றும் குன்றாமல் தன் தேர்ந்த பதில்கள் மூலம் நமக்குத் தந்துள்ளார் யூமா, அதை அப்படியே ஒரு பொக்கிஷமாக்கி புத்தகமாக வடித்துத் தந்துள்ளது தேநீர் பதிப்பகம்.
"ஒரு படைப்பின் சாரம் என்பது அதன் ஜீவனில் இருக்கின்றது" என்ற புதுமைப்பித்தன் வரிகளில் இருந்து சற்றும் விலகாமல் இருக்கிறது இத்தொகுப்பு, ஒவ்வொரு பக்கத்திலும் ஜீவன் இருக்கிறது அதை மட்டுமே அது பேச யத்தனிக்கிறது. வடிவமைப்பும் அத்தனைக் கச்சிதமாக அமைந்துவிட்டது, முகப்பில் இளம் யூமாவின் படமும், பின்னட்டையில் சமகால படமும் வைத்து காலத்தின் கோலத்தில் உடல்ரீதியில் அவர் பல மாற்றங்களை பெற்றிருந்தாலும் கலையளவில் அப்படியே எழுத்துவடிவில் உள்ளார் என்பது போன்று அமைத்துள்ளது.
வையத்து வாழ்வீர்காள், இப்பனுவல் தந்த வாசிப்பனுபவத்தை என் வரிகளின் வழியே கடத்த முனைந்தேன், ஒருவாறு அது உங்களை அடைந்தால், இப்படைப்பு தரும் களிப்பைப் பெற்று மகிழ்க.