வாழ்க்கைத்தடம் - ப.முருகேசன்
கலை வடிவமும் கருத்துச்செறிவும் கவனம் ஈர்க்கும் நயமிகு சொல்லாட்சியுமாகக் கட்டமைப்பைக் கொண்டது கவிதை என்பதாகும். அவ்வடிவ மொழியழகுக் கவிதையுடன் கூடிய கடித இலக்கியமாகப் படைக்கப்பட்டதுதான் இந்த “வாழ்க்கைத்தடம்” எனும் நூல் வடிவம் ஆகும். இது புதுச்சேரி, தேசிய நல்லாசிரியர், கலைமாமணி, ப.முருகேசன் அவர்களின் எழுத்தாக்கத்தில் உருவானது.
இன்றைய நவீன கால வளர்ச்சியின் காரணமாகக் காணாமல் போன பலவற்றில் கடிதமும் ஒன்று ஆகும். பழையன கழிதலும் புதியன புகுதலுமாக, இன்றைய வாழ்வில் தொடர்புகள், செய்திகள், தரவுகள், தகவல்கள் எனப் பல்வேறு பரிமாற்றங்கள், மின்னணு ஆற்றலின் வழியில் விரைவாகவும் விரிவாகவும், உலகப்பந்தைத் தாண்டியும் நிகழ்கின்றன.
ஒரு காலத்தில் கடித இலக்கியம் என்பது ஒரு புரட்சியாக இருந்தது. மடல் எனப்படும் கடிதத்தை, உள்ளத்து உணர்வுகளைப் பரிமாறப்படும் இடம், உறவுகளைப் பலப்படுத்தும் விதம் என்பதையெல்லாம் தாண்டி மனிதர்களின் வாழ்வியல், வரலாறு, பண்பாடு, கலாச்சாரம், படிப்பினை என்று பலவற்றையும் காட்சிப்படுத்தும் ஊடகம் போலவும் இலக்கியத்தில் இடம் பிடித்துள்ளது என்பதை மறுக்க இயலாது. அத்துணை உள்ளடக்கம் பெற்றவை, பிற்காலத்தில் வரலாற்று சிறப்புமிக்க கடிதங்களாகி இன்றும் நிலைத்திருப்பதே அதற்குச் சாட்சியாகும்.
அக்காலத்தில், கடிதத் தொடக்கத்தில் முதலில் எழுதப்படும் விளிச்சொல்லே பெறுநரின் கண்களில் நீரைப் பெருக்கும். “அன்புள்ள அம்மாவிற்கு”, “நெஞ்சில் நிறைந்த காதலிக்கு”, “அன்புள்ள அத்தான்” என எத்தனையோ சொற்கள் உள்ளத்தை உணர்த்துவதாகத் தொடங்கும். “வணக்கம்! இங்கு நான் நலம். அங்கு நீங்கள் நலமா?” எனத் தொடரும். எத்தனையோ செய்திகளைப் பகிர்ந்த பின்னும், “இனி, மற்றவை தங்களின் பதில் மடல் கண்டு”, என இன்னும் தொடரத் தூண்டும். இறுதியில், “என்றும் அன்புடன்”, “உன் நினைவில் உருகும்”, “அன்பு வாழ்த்துகளுடன்” என்று தீரா அன்பை உணர்த்தும் பல்வித வார்த்தைகளுடன் பெயரிடப்பட்டு முடியும். இந்நூலாசிரியரும் அத்தகைய அன்பை முதலாகக் கொண்டு, தன் அன்பு மகள் அல்லிக்காக, இந்நூலைப் படைத்து உள்ளார்.
புதுச்சேரியின் முக்கிய ஆளுமையான, பன்முக ஆற்றல் உடைய இந்நூல் ஆசிரியர், தேசிய நல்லாசிரியர், கலைமாமணி, ப.முருகேசன் அவர்களின் தற்போதைய அகவை 75 ஆகும். இத்தனை ஆண்டுக்கால வாழ்வில், பிறப்பு முதல், சில நினைவுகள், சில தருணங்கள், காதல், திருமணம், சில திருப்புமுனைகள், சில அனுபவங்கள் எனத் தெரிவு செய்த சிலவற்றை மட்டும் “வாழ்க்கைத்தடம்” ஆக்கி இலக்கியப் பரப்பிற்குள் கொண்டு வந்துள்ளார் நம் ஆசிரியர். இவர் எழுதிய மடல், உறவுகளில் தொடங்கி, பிறந்து வளர்ந்த, வாழ்ந்த, வாழும் என இந்தப் புதுச்சேரி மண்ணின் சில இடங்கள், சில மனிதர்கள், சில சூழல்கள் எனத் தன் மகளிடம் விவரிக்க விரும்பியவற்றைக் கூறியுள்ளது.
இதுவரை, பல்வேறு விதமாக, 15 நூல்களைப் படைத்த இந்நூலாசிரியரின் இந்தக் கவிக்கடித நூலின் உள்ளடக்கம் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
அதற்குமுன், தோரணவாயிலாக அட்டையின் அழகைக் காண்போம். அட்டையின் முகப்புப் படத்தில், வானில் எழுகதிர்திசை நோக்கி நடக்கும் ஒருவர், அவரின் பாதத் தடங்கள் என நம் நூலாசிரியரைக் குறிப்பதாகக் காட்சி, மேல் வானத்தில் நிலவுமகளாக ஆசிரியரின் மகள் அல்லியைக் காட்டும் காட்சி! ஒரே நேரத்தில் சூரியனும் சந்திரனும்!
அடுத்து, தன்னம்பிக்கை வளர்க்கும் இந்நூலிற்காக, பதிப்புரையையே பாராட்டுரையாகத் தந்துள்ளார்கள் சென்னை, கவிதா பப்ளிகேஷன், திருமிகு சேது. சொக்கலிங்கம் அவர்கள். என்னுரையில், நூலாசிரியர் நம் வாழ்வின் நிதர்சனங்களை இப்படிச் சொல்கிறார். “ஒருவரின் அனுபவம் / மற்றவர்க்கு எடுத்துக்காட்டு”. இதை மறுக்க இயலுமா?
பொதுவாக, முரண்கள் நிறைந்தது வாழ்க்கை. என்றாலும், எவரவர் வாழ்க்கை என்னென்ன ஆகும் என்பதெல்லாம் இயற்கையின் கையில்தான். அந்த முரண்களின் முன்னும் பின்னுமானச் சூழல்கள் யாவையும் வாழ்க்கையில் திறமையாகக் கையாள்வதின் மூலமாக, நல்லனுபவமாகவோ, சவால்களாகவோ, படிப்பினையாகவோ மாறுகின்றன. அவற்றையும் ஆசிரியர், தான் பெற்ற மகளிடம், இக்கடிதத்தில் விவரிக்கிறார். சில முரண்களை இங்கு உணர்வோம்!
இந்த “வாழ்க்கைத்தடம்” என்பது இரண்டு பாகங்களாக உள்ளது. முதல் பாகம்-1 எழுதும் போது, ஆசிரியருக்கும் அவரின் மகள் அல்லிக்கும் வசிப்பிட இடைவெளித் தூரம் கிட்டத்தட்ட 1000 மைல்கள் இருக்கலாம். பாகம்-2 என்பது கடல் கடந்து அயலகத்தில் பல்லாயிரம் மைல்கள் தாண்டி அன்பு மகள் வாழ்கின்ற நிலையில் எழுதப்பட்டுள்ளது. முதல் பாகம் 81 பக்கங்கள் எனில் இரண்டாம் பாகம் 147 பக்கங்களில் அடங்கியுள்ளது. முகம் பார்த்துப் பேச முடியாத தொலைபேசியும் நினைக்கையிலே பார்த்து, பேசி மகிழும் திறன்பேசி, கணினி எனத் தொலைத் தொடர்புகளுமாக, இவ்விரண்டுப் பகுதிகளின் நிலையில் உள்ள முரணைக் காணலாம். இந்த முரணுக்கிடையில் நெருங்கி நிலைத்து வைப்பது அன்பு ஒன்றே அன்றோ?
நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் தன் மகள், தன் எழுத்தை, பேச்சை, ரசிப்பவளும் ருசிப்பவளும் ஆக இருக்கிறாள் என்று உவகை அடைகிறார். அல்லிமகளின் இளவல் அருண்குமார் பற்றி கூறும் போது “என் எழுத்தை / இயங்குச் சித்திர எழிலோவியமாய் / வடிவம் மாற்றும் வில்லாளனாய் / ஆங்கில நாவல் எழுத்தாளனாய்” என்று குறிப்பிட்டு, பின், “இனி என் எழுத்தும் சாகா வரம் பெறும்” என்று நெகிழ்ந்துள்ளார். இதைவிட ஒரு எழுத்தாளருக்குப் பரிசாய் ஒரு வாழ்வு அமையுமா?
விவரம் புரியாத வயதில் மகள் துயிலுற, அன்று சொன்ன கதைகள் அத்தனையும் கற்பனை என்று பாகம் ஒன்றில் உண்மையை ஒத்துக்கொண்டவர், விவரம் புரிந்த மகளுக்கு இன்று சொல்வது மெய் என்று உறுதியுடன் வாழ்க்கை பற்றிய ஒரு அறிமுகத் தத்துவத்தை, நிதர்சனத்தைக் கூறுகிறார்.
வயதை அறியா வயதில் அன்னையிடமிருந்து அவர் அறிந்த பிறப்புச் சூழல் பாகம் ஒன்றில் தொடங்குகிறது. இது புதுச்சேரியின் முதலியார் பேட்டையில் இருந்து விரிகிறது. அடுத்தது சாரம். இதில், திண்ணைப் பள்ளியில் தொடங்கி புதுவை மண்ணின் பல்வேறு பகுதிகளில் கல்வி வாழ்வைத் தொடர்ந்தவர், வசித்த ஊர்களாக, குயவர்பாளையம், மீண்டும் முதலியார்பேட்டை, வண்ணாங்குளம், பொய்யாக்குளம் என்று நீள்கிறது பட்டியல்.
சிசுவாக இருந்தவருக்கு, பெற்றோரின் சார்பாக ‘முருகேசன்’ என்று தனக்குப் பெயரிட்டவர் மருத்துவமனையில் இருந்த ஒரு கிருத்துவ செவிலியப் பாதிரி என்பதை ஆசிரியர் குறிப்பிட்டு மகிழ்ந்துள்ளார்.
கணக்கு வாய்ப்பாட்டை, சரியாகச் சொன்னதற்காக ஆல்பர்ட் ஆசிரியரிடமிருந்து பெற்ற மிட்டாய்ப் பரிசை அபகரித்த சேகர் எனும் சக மாணவரை, இன்றும் பார்க்கையில் வணக்கம் சொல்லி வழியே போகிறாராம். இன்று ஆயிரம் சாக்லெட் வாங்கும் வசதி இருப்பினும் ஆல்பர்ட் வாத்தியார் அளித்த பரிசு கிடைக்குமா? அதனை உணர்ந்ததாலோ என்னவோ, திறமை உடைய மற்றவர்களை, இவர் பாராட்டும் விதத்தில் குறை வைப்பது இல்லை. பரிசு குறித்து இது போன்ற நிகழ்வு வேறொன்று நடந்தது. அதனை “வானத்துக்கு வேலி” பெற்ற “கம்பன் புகழ் பரிசு” சொல்லும். நூலின் 2ஆம் பாகத்தில் ஆசிரியர் இதனை விளக்குகிறார்.
15-07-1974 அன்று பணியில் இணைந்ததைப் பற்றிய கவிதை வரிகளில் “பொறுப்பு உணரா பருவத்தில் கிட்டியது ஆசிரியர் பணி” என்று கூறியவரின் வாழ்க்கை 30 ஆண்டுகளில் அடுத்தடுத்து மாநில, தேசிய நல்லாசிரியர், எழுத்தாளர், நாடக ஆசிரியர் என உருவேற்றி உள்ளது. இந்த முரணில் முன்னிற்பவை அர்ப்பணிப்பு உணர்வு, கால நேரம் பார்க்காது மாணவர்களிடம் ஒழுக்கநெறிச் சிந்தனையை வளர்த்தல், கற்பித்தல், அன்புடன் அரவணைப்பு, பள்ளிக்கும் மாணவர்களுக்கும் இடையில் பாலமாக இருத்தல், பொதுத் தொண்டில் நாட்டம் என எல்லாம் குறிப்பிடத்தக்கவை.
மேலும், அவர்தம் ஆசிரியப்பணி அனுபவத்தில், அவருடைய மாணவர்களிடமும் அவர் பாடம் கற்றுள்ளார். அதையும் சேர்த்துப் பகிர்ந்துள்ளார். அப்பனுக்குச் சுப்பன் சொன்னதைப் போல நடந்ததும் உள்ளது. ஒரு மாணவனின் தந்தை, நம் நூலாசிரியருக்கு ஞானம் பிறக்க வைத்து “போதிமரம்” ஆகிய நிகழ்வும் நடந்து உள்ளது. இதுபோன்ற, விவரங்களும் நூலில் உள்ளன.
எட்டாம் வகுப்பு வரை குடும்ப இருப்பு புரியாதவர்தான், வறுமை நெருப்பால் பழுக்கத் தீட்டப்பட்டதன் விளைவாக, ஆசிரியப் பணியில், சவராயலுநாயகர் அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு “வயிற்றுப் பசி நீங்க தினமும் காலையில் ரொட்டி வழங்கினால் நன்று!” என ஆலோசனை வைக்க சூழல் உந்தியுள்ளது.
இவர், ஆடை கலாச்சாரத்தைப் பற்றிக் கூறும் போது அக்காலத்தில் ஆசிரியர் என்பவர் தலைப்பாகை, சட்டை மேல் கோட்டு, வேட்டி என்று இருந்திருக்கிறார்கள். நம் நூல் ஆசிரியர், பள்ளி ஆசிரியராய் இருந்த ஆரம்ப காலத்தில் கிராப்பு, கிருதா மீசை, பூப்போட்ட சட்டை, பெல் பாட்டம் போட்ட பேண்ட், அகல பெல்ட் என்று எழுபதுகளின் தமிழ்த் திரையரங்கம் தந்த நாகரிக உச்சத்தில் இருந்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆசிரியரின் பள்ளிப் பருவத்தில் இருந்தத் தன் தோற்றத்தை, இப்படிக் கூறுகிறார். “எண்ணெய் தடவி / அழுந்த சீவிய தலை / அழுக்குத் துவைத்தச் சட்டை / நெற்றி நிறைய பட்டை” என்று இருந்த நிலையில் முரணாக அவரின் பக்தி நிலை மாறியதைப் பற்றி, பொய்யாக்குளத்தில் அவர் வசித்தபோது விவரிக்கும் பகுதியில், சொல்கிறார்.
வாழ்வின் வழியில் இளம் பருவம் முதல் இப்போதைய அகவை வரை, மகளிடம் சொல்கையிலே அவர் வெளிப்படுத்துவன யாவும் ஒரு ஆவணப் பதிவாகும். அவரின் வாழ்வில் தொடர்ந்த புதுச்சேரியின் பல்வேறு ஊர்களை, சூழலை, இயற்கை அழகை, அனுபவித்த மகிழ்வை, வாழ்வியல் முறையை, அவர் ஆங்காங்கே எழுத்து வழியில் வாசிப்பவரை இட்டுச் சென்று காண்பிக்கிறார். உதாரணமாக, முதலியார்பேட்டைக்கு அவருடன் போவோம்.
புதுச்சேரியில், ஒருகாலத்தில், மூன்று பஞ்சாலைகளுடைய இயந்திரங்களின் இயக்கத்தால் எத்தனையோ குடும்பங்களின் உயிர்ச்சக்கர அச்சிற்கு உயவு கிடைத்தது. அந்த இயந்திரங்களோடு உழைத்த உயிர் இயந்திரங்களாய், தொழிலாளர்கள் இருந்தனர். அவர்களால், அப்போது தூங்கா நகரமாக, இருந்த ஒரு இடம் முதலியார்பேட்டை ஆகும்.
காலத்தின் கோலமாய், வரலாற்றில் வடுவாகிவிட்ட அந்த ஆலைகளின் பணிநேர அறிவிப்புச் சங்கொலி எப்போது ஓய்ந்ததோ, அப்போதே பெரும்பாலோரின் வாழ்வாதாரப் பற்று-வரவுக்கு இறுதிச் சங்கு ஒலித்துவிட்டது எனலாம். அங்குப் பணிபுரிந்து, இன்றும் இருப்போரில், சக்கரமே இல்லா வண்டியாகத் தேங்கியும் பலர்; பிழைத்துக் கொண்டும் பலர் உள்ளனர் எனலாம்.
இப்படித் தொடங்கும் சூழல்,
என்று தொடருகையிலும்,
இவரின் காதல், திருமணம், மனைவி குமுதம் அவர்கள், அவரின் அன்புப் பிணைப்பு, இல் வாழ்வு, பணிச்சூழல், சுவாரசியம், தேடுதல், தொடருழைப்பு, சாதனைகள் என்று எத்தனையோ சுவாரசியங்கள் இந்நூலில் உள்ளன. மேலும், சுனாமி, பெருந்தொற்று நோயான கொரோனாவினால் நேர்ந்த சூழலைப் பற்றியும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
கவிநயம் பற்றிக் கூறவும் பலவுண்டு. ஆயினும், திகட்டாதினிக்க, துளிகளாய் கொஞ்சம் வரிகள் இதோ!
சொற்சுவைக்கு மதிப்பு விஞ்சிய சுகமே என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதனை, அவரின் படைப்பு உறுதிபடுத்தும்.
தமிழை ஏத்தும் சொற்சுவைக்கு எடுத்துக்காட்டுகள் சில இங்கே:
காதல், நம் நூலாசிரியரைத் துரத்திய நாட்களின் கவி வரிகள்:
“கண்ணுக்குக் கைக்குடை வைத்து…” நாயகனாய் நூலாசிரியர் ப.முருகேசன் அவர்களின் எதிர்பார்ப்பு!
“கையில் குடை பிடித்து / தூரத்தில் அவள் வருகை…” நாயகியாகத் திருமதி குமுதம் அவர்களின் வருகை!
இவ்வாறு, காதல் பக்கங்களை கவிநய வடிவத்தில் காட்டுகிறார் ஆசிரியர்.
அடுத்து, தமிழ் இலக்கணம் பற்றி ஒன்று:
பொய்யாக்குளம் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை. இதன் விவரங்களுடன், நம் ஆசிரியரின் 23ஆம் வயதில் இங்கு நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றிக் கூறுகிறார்.
அடுத்து, 'அரிநமோத்துச் சிந்தம்’ என்றொரு சொல் இந்நூலில் உள்ளது. இது என்ன என்று யோசிக்க வைத்தது.
தமிழ்ச்சுவைக்கு இன்னொன்று, நாணேற்றி விரைந்ததும் பின், விசை குறைந்து தயங்கியதையும் கூறும் காரணமும் என்ன?
நம் நூலாசிரியர், அக்காரணத்தை விளக்குகிறார்.
மொத்தத்தில் நம் நூலாசிரியரின் அகவை 75 ஆனாலும், அவருள் குழந்தைமை கூடிய சிறுவன் ஒருவன், வாலிபன், காதலன், கணவன், தந்தை, சமூகச் சிந்தனையாளன், கலைஞன் என்று பன்முகங்களைக் காணலாம். அவற்றை, இந்தப் படைப்பு, தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது. அதன் மூலம் வாழ்விற்குத் தேவையான நம்பிக்கையை விளக்காக்குகிறது.
தான் பெற்ற மகளுக்கு, ஒரு வாழ்க்கைத் தேனீயாக, ஆவணத் தேன்கூண்டை அளித்துள்ளார் தேசிய நல்லாசிரியர், கலைமாமணி ப. முருகேசன் அவர்கள். இந்த வற்றா அன்பு அனுபவக் கூண்டு, சிக்குவதற்கு இல்லை! வாழும் எவருக்கும் சிறகடித்துப் பறக்க வழி சொல்லும் கூண்டு!
நிறைவாக, இந்நூலானது, வறுமையில் செம்மை, முயற்சி திருவினையாக்கும், தடம் மாறினாலும் திருந்தினால் பெருமை அடையலாம் என்பது போன்ற வாழ்க்கையின் நன்னெறியையும் புதுச்சேரியிலுள்ள பல்வேறு ஊர்களைப் பற்றிய தகவல்களுடன் புதுச்சேரி மக்களுடைய அக்கால வாழ்வியலும் சார்ந்து, ஒரு சிறப்பு நூலாக அமைந்துள்ளது.

ஜவானா ஆலை… புது ஆலை… கெப்ளே ஆலை
மூன்று ஆலைகளும்…
புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரம்!
காலம் மாறியது… சூழல் மாறியது…
சுதேசி மில்… ரோடியர் மில்… பாரதி மில்
ஆலைகள் மூன்றும்…
பெயர் மாற்றம் பெற்றன!
மாதத்தில் பத்தாம் தேதி…
மூன்று பஞ்சாலைகளிலும்…
சம்பள பட்டுவாடா!
முதலியார் பேட்டை…
திருவிழா கோலம் பூணும்!
ஆயிரக்கணக்கான குடும்பங்களின்…
பசி தீர்க்கும் திருநாள்!
மூன்று ஆலைகளும்…
புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரம்!
காலம் மாறியது… சூழல் மாறியது…
சுதேசி மில்… ரோடியர் மில்… பாரதி மில்
ஆலைகள் மூன்றும்…
பெயர் மாற்றம் பெற்றன!
மாதத்தில் பத்தாம் தேதி…
மூன்று பஞ்சாலைகளிலும்…
சம்பள பட்டுவாடா!
முதலியார் பேட்டை…
திருவிழா கோலம் பூணும்!
ஆயிரக்கணக்கான குடும்பங்களின்…
பசி தீர்க்கும் திருநாள்!
இப்படித் தொடங்கும் சூழல்,
புதுச்சேரியின் பொருளாதாரமென…
பேசப்பட்ட பஞ்சாலைகள்…
மூடுவிழா கண்டுவிட்டன!
ஆயிரமாயிர குடும்பங்கள்…
வறுமையில் வாட்டம்!
பேசப்பட்ட பஞ்சாலைகள்…
மூடுவிழா கண்டுவிட்டன!
ஆயிரமாயிர குடும்பங்கள்…
வறுமையில் வாட்டம்!
என்று தொடருகையிலும்,
கைப்பொருள் தன்னை
வீதியில் வீசி எறிந்து…
வேடிக்கை பார்த்து விட்டோம்!
எனும்போதும், மனம் வெம்பும்!வீதியில் வீசி எறிந்து…
வேடிக்கை பார்த்து விட்டோம்!
இவரின் காதல், திருமணம், மனைவி குமுதம் அவர்கள், அவரின் அன்புப் பிணைப்பு, இல் வாழ்வு, பணிச்சூழல், சுவாரசியம், தேடுதல், தொடருழைப்பு, சாதனைகள் என்று எத்தனையோ சுவாரசியங்கள் இந்நூலில் உள்ளன. மேலும், சுனாமி, பெருந்தொற்று நோயான கொரோனாவினால் நேர்ந்த சூழலைப் பற்றியும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
கவிநயம் பற்றிக் கூறவும் பலவுண்டு. ஆயினும், திகட்டாதினிக்க, துளிகளாய் கொஞ்சம் வரிகள் இதோ!
சொல்லாத சொல்லுக்கு
விலை ஏதுமில்லை
சுவை கொண்ட சொல்லுக்கோ
விஞ்சிய சுகமே மதிப்பு
விலை ஏதுமில்லை
சுவை கொண்ட சொல்லுக்கோ
விஞ்சிய சுகமே மதிப்பு
சொற்சுவைக்கு மதிப்பு விஞ்சிய சுகமே என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதனை, அவரின் படைப்பு உறுதிபடுத்தும்.
தமிழை ஏத்தும் சொற்சுவைக்கு எடுத்துக்காட்டுகள் சில இங்கே:
காதல், நம் நூலாசிரியரைத் துரத்திய நாட்களின் கவி வரிகள்:
“கண்ணுக்குக் கைக்குடை வைத்து…” நாயகனாய் நூலாசிரியர் ப.முருகேசன் அவர்களின் எதிர்பார்ப்பு!
“கையில் குடை பிடித்து / தூரத்தில் அவள் வருகை…” நாயகியாகத் திருமதி குமுதம் அவர்களின் வருகை!
இவ்வாறு, காதல் பக்கங்களை கவிநய வடிவத்தில் காட்டுகிறார் ஆசிரியர்.
அடுத்து, தமிழ் இலக்கணம் பற்றி ஒன்று:
பொய்யாக்குளம் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை. இதன் விவரங்களுடன், நம் ஆசிரியரின் 23ஆம் வயதில் இங்கு நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றிக் கூறுகிறார்.
அடுத்து, 'அரிநமோத்துச் சிந்தம்’ என்றொரு சொல் இந்நூலில் உள்ளது. இது என்ன என்று யோசிக்க வைத்தது.
தமிழ்ச்சுவைக்கு இன்னொன்று, நாணேற்றி விரைந்ததும் பின், விசை குறைந்து தயங்கியதையும் கூறும் காரணமும் என்ன?
அன்று “வில்” நீங்கி
விசை பெற்ற அன்பெனவே
விரைந்து எழுத முனைந்த
பேனா முனை
இன்று நின்று தயங்குகின்றது