கனவே கலையாதே - க்ளிக் மதுரை முரளி
கவிதை, சிறுகதை, வானொலி நாடகங்கள் என பல தளங்களில் செயல்பட்டு வரும் "கிளிக்" மதுரை முரளி அவர்கள் "கனவே கலையாதே...!" என்ற ஒரு சிறுகதைத் தொகுப்பை கொண்டுவந்துள்ளார். இந்த சிறுகதை தொகுப்பு மொத்தம் 10 சிறுகதைகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு சிறுகதையும் சற்று அதிக பக்கங்களில் வந்திருந்தாலும் ஒவ்வொன்றும் அதனதன் அளவில் நன்றாகவே வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தரமான தாளில் எழுத்துப் பிழை இல்லாமல் 195 பக்கங்களுடன் மணிமேகலை பிரசுரம் வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு சிறுகதையும் சமூகத்தில் நடந்த, நடந்து கொண்டிருக்கின்ற அவலங்களை நிகழ்வுகளை படம் பிடித்து காட்டுகிறது. சமூகத்தில் நாம் கேட்ட நிகழ்வுகள் என்றாலும் கதைகளை அலுப்போ, சலிப்போ இல்லாமல் நகர்த்திச் சென்றுள்ளார் ஆசிரியர் "கிளிக்" மதுரை அவர்கள்.
முதல் சிறுகதை "கனவே கலையாதே...!". இச்சிறுகதை ராணி இதழில் அக்டோபர் 2003 அன்று வெளிவந்துள்ளது. இந்த ஒரு சிறுகதை மட்டும் எந்த பத்திரிகையில் வெளிவந்தது என்று குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர். மற்ற கதைகளில் அது போன்று குறிப்பிடவில்லை.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பிறகு தங்களது பணிச்சூழல் மற்றும் வாழ்க்கைப் போராட்டத்தில் தனது பெற்றோர்களை பார்க்கின்ற பார்வை நிச்சயமாக மாறுபடும். இது ஒவ்வொரு பிள்ளைக்கும் வாழ்வில் போராட வேண்டிய ஒரு கட்டாயச். சூழல். ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்கு மாறி செல்கின்றனர். ஆனால் அந்த கால ஓட்டத்தில் அவர்கள் இழப்பது தன் தாய் தந்தையரையும் அவர்களின் பாசத்தையும். இந்த நேரத்தில் அந்தப் பெற்றோர்கள் தனது குழந்தைகளின் மரியாதையையும் தனது பேரன் /பேத்தியின் பாசத்தையும் இழக்கின்றனர்.
இந்தக் கதையிலும் மகள் ஒருத்தி தன் தாய் தந்தையை தனது குழந்தைக்கும் வேலை பார்க்கும் சூழலை உருவாக்குகிறாள். எப்போதுமே பெற்றோர்கள் முதியவர்கள் ஆகும் போது தான் அவர்களுக்கிடையில் ஒரு அன்னியோன்யம் உருவாகிறது. மேலும் கணவன் மனைவி பந்தம் முக்கியமானது என அப்போதுதான் உணருகின்றனர். இந்த கதையில் சந்திரன் என்பவர் தனது மனைவி கண்மணிக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்ட பிறகு கணவன் மனைவி இருவரும் சேர்ந்து என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுகிறார். இதைப் போல ஒவ்வொரு பெற்றோர்களும் செய்ய ஆரம்பித்தால் இதற்காகவாவது தங்களது தாய் தந்தை விட்டு செல்லக்கூடாது என்ற எண்ணமும் பயமும் பிள்ளைகளுக்கு உண்டாகும்.
இரண்டாவது சிறுகதை தேன் நிலவுகள். ஏமாற்றுபவர்கள் எந்த சூழ்நிலையிலும் எங்கேயும் ஏமாற்றுவார்கள் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இந்த சிறுகதையைச் சொல்லலாம். எனவே தம்பதியினர் தேன் நிலவுக்கு சென்றாலும் கூட தங்களுடைய சுற்றுப்புறத்தை முழுவதுமாக ஆராய்ந்து யாரையும் நம்பாமல் தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என்பதை சுட்டி காட்டுகிறது.
இந்த சிறுகதையும் நாம் பல தடவை தினசரி நாளிதழ்களில் படித்திருப்போம் அல்லது நண்பர்கள் மூலம் கேட்டிருப்போம். பணத்துக்காக கணவன், மனைவியைக் கொல்வதோ அல்லது மனைவியை கணவன் கொல்வதோ ஆண்டாண்டு காலம் நடந்து கொண்டிருக்கின்ற ஒரு சம்பவம் என்று சொல்லலாம். இந்த கதையும் காப்பீட்டுத் தொகைக்காக தனது கணவரை புதிய நட்புடன் சேர்ந்து கொலை செய்து விபத்தாக மாற்றிய ஒரு பணக்கார பெண்ணின் உண்மை முகத்தை சுட்டிக்காட்டி உள்ளார். எத்தனை வருடங்கள் ஆனாலும் கூட ஏதோ ஒரு வழியில் உண்மை வெளிப்படும்; சத்தியம் வெற்றி பெறும் என்று சுட்டிக்காட்டுகிறது இந்தச் சிறுகதை.
உறவுகள் என்பது தங்கத்தை போல. நாம் எப்போதுமே போற்றி பாதுகாத்து வைக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் இன்று உறவுகள் எப்போதுமே தங்களை துண்டித்துக் கொண்டே செல்கின்றன. அது சகோதரன் சகோதரியாகவோ அல்லது மாமன் மச்சானோ அக்கா தங்கையோ. இன்றைய சமூகக் கட்டமைப்பில் ஒவ்வொருத்தருக்கும் ஏராளமான பிரச்சனைகள். தங்கள் ஆதங்கத்தை தனது சோகத்தை தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்த உறவினர்களோ சொந்தங்களோ தேவை. உண்மையான உறவுகள் அடுத்தவர்களை வாழ வைக்க தான் செய்யும். அப்படிப்பட்ட ஒரு சிறுகதை உறவின் உரிமை. எல்லோரும் படிக்க வேண்டிய ஒன்று. தவறுதலாக நாம் புரிந்து கொண்ட நிகழ்வுகள் எப்போதுமே உண்டு. அந்த தவறை உணர்ந்து நாம் வாழ வேண்டும்; அடுத்தவர்களுடன் இணக்கமாக செல்ல வேண்டும். அதனை வலியுறுத்துகிறது இந்தச் சிறுகதை.
"ஓடும் மேகங்களே", "சந்திப்போம் பிரிவோம்", "இரு.. மனம் திருமணம்" இந்த மூன்றும் கணவன் மனைவி உறவுச் சிக்கலை, தம்பதியர்களின் திருமண பந்தத்தை பேசுகிறது. ஒவ்வொருவரும் தன்னளவில் தான் செய்வது சரி என்று நினைக்கின்றனர். கணவன் மனைவி உறவானது அவ்வாறு நினைப்பதை விட அடுத்தவர் நிலையில் இருந்து பார்ப்பதில் தான் அன்பு மலர்கிறது. அதே நேரத்தில் இந்த உறவுச் சிக்கலில் பெரியவர்கள் எப்போதுமே தனது குழந்தைகள் வாழ வேண்டும் என்று முடிவு எடுத்து செயல்பட வேண்டும். அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அவ்வாறு உறுதுணையாக வாழ்வில் சிலருக்கு அமைவது பெரும்பேறு. இந்த மூன்று சிறுகதைகளிலும் இளஞ்சோடிகள் என்ன ஆனார்கள் என்பதை சுட்டி காட்டுகிறார்.
"சின்ன பூ.. சிறைப்பூ" என்ற சிறுகதை சிறுவர் சீர்த்திருத்த பள்ளியை பற்றி குறிப்பிடுகிறது. சிறுவர்கள் தவறு செய்தாலும் அவர்களை கண்காணித்து அவர்களுக்கு நல்லொழுக்கம் போதிக்க வேண்டும். அந்த போதனையில் சேவியர் போன்ற ஆட்கள் நிறைய ஈடுபட வேண்டும். "ஒரே ஒரு நிமிஷம் யோசி" என்ற வாசகம் கதைக்கு மட்டும் அல்ல, வாழ்க்கைக்கும் பொருந்தும்.
"சத்தியம் சாத்தியமா" என்ற சிறுகதை கல்லூரி காலங்களில் செய்த ஒரு தவறு ஒரு மனிதனை எவ்வாறு உறுத்துகிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. நல்ல மனம் எப்போதுமே தவறு கண்டு பயப்படும்; தவறை ஒத்துக் கொள்ளும். இறுதியில் கதை சுபமாக முடிகிறது.
"புது நிலவு" என்ற சிறுகதை, தன் தாய் இறந்த பிறகும் தன் தந்தைக்கு ஒரு துணை தேவை என்று ஒரு மகனின் எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. ஆண் இல்லாத பொழுது பெண்ணுக்கும் ஒரு துணை தேவை தானே? என்ற ஒரு எண்ணத்தை இந்தச் சிறுகதை தூண்டுகிறது.
எல்லா சிறுகதைகளும் நேர்மறையான சிந்தனைகளைக் கொடுக்கிறது. அதே போல் சில சிறுகதைகள் கதையின் இறுதியில் ஒரு திருப்பத்தை உண்டு பண்ணுகிறது. அந்த வகையில் சிறந்த சிறுகதைத் தொகுப்பான "கனவே கலையாதே" இன்று இந்த புத்தகம் நல்லெண்ணத்தை நமக்கு கொடுக்கிறது.
"கிளிக்" மதுரை முரளி அவர்களின் திறமைக்கு மற்றொரு உதாரணம் இந்த புத்தகத்தின் அட்டைப்பட ஓவியமும் இவரே. மேலும் பல சிறுகதைத் தொகுப்புகளும், கவிதைகளும், நாடகங்களும் வெளிவர வாழ்த்துகள்.