பொலி எருமை
பொலி எருமை - பாரத் தமிழ்

பொலி எருமை - பாரத் தமிழ்

தன் எதிரே தோன்றும் மனிதர்களைக் கொண்டு தான் நம் வாழ்வியல் கட்டமைக்கப்படுகிறது. சமூதாயக் கோட்பாட்டில் நல்லவை, கெட்டவைகளை தெரிந்தோ தெரியாமலோ நாம் நம் சுற்றத்திடமிருந்துதான் கற்றுக் கொள்கிறோம். அப்படித் தான் கண்ட மனிதர்களை படைப்பாக்குவதிலும் அவர்களை இலக்கியத்தில் இறந்தும் வாழ்தலெனும் பெரும்பேற்றை ஒவ்வொரு கதாபாத்திரங்களின் வாழ்க்கையை நயம்பட எழுதுவதிலும் எழுத்தாளர் பாரத் தமிழ் அவர்களின் படைப்பு வெகுவாக ஈர்க்கப்படுகிறது. பொலி எருமை எனும் தொகுப்பின் கீழுள்ள உயிர்மெய்களை படித்ததில் வியப்பெனக்கு.

நான் எப்போதும் பகிர்தலைப்போல உண்மைகள் உரக்கப் பேச வேண்டும். புனைவுகளையும், கற்பனைகளையும் தாண்டி அவை படிப்போர் மனதில் ஆழப் பதிதல் வேண்டும். பாத்திரப் படைப்பைப் போன்ற சமூக நியாயங்களையும் யாரும் பேசாதவற்றை பேச வேண்டும். தொடாத இடங்களை தொட்டுக் காட்டுதல் அவசியம்.

அவ்வகையில் பொலி எருமை தன் கதை மாந்தர்களினுடோ அறத்தையும், நிகழ்தலையும், உண்மை பார்வையினுடே வாட்டார வழக்காற்றி வாசிப்பாளின் மனதில் படர்கிறது. அறுக்க முடியாத பாசியாய் தீராத வடுவாய் அவளோடு ஒத்த வயதுடைய ஒருத்தி கடைசியா கன்னத்தோட கன்னம் ஒரசி.

1.மனோர்அத்தை: சிறுவயதிலே கணவனை இழந்த பதுமையின் கதை அழகோவியம் வாழ்வில் அதைப்பற்றி பொருட்படுத்தாத பாங்கு பிழைப்புக்கு சாராயம் அதைக் காய்ச்சும் விதமும் போலீஸ்காரனுக்கு வாரம் ஒருமுறை மாமூல் சாராய போதை மட்டுமல்ல சமூதாய போதையும் அவள் சந்தித்ததுண்டு.

சாராயம் விற்பவள் எலக்காரம்தானே. சீண்டுனவங்களுக்கு சாராயத்துல விஷம் வச்சி சொர்க்கத்த காட்டின மவராசி; ஆட்டக்காரி. பொழப்புக்கு ஆகமாட்டான்னு விட்டுப்போன வுறவுதான் சரளா. அவுளுக்கு ஊர்த்திருவிழாவுக்கு ஆட்டக்காரியா வந்தவ திருவிழா முடிஞ்சும் போகாம இவக்கிட்ட என் பொழப்புக்கு இந்தப் கைபுள்ள சரிவராதுன்னு ஆத்தாக்காரி வுட்டுட்டு போயிட்டா. எவ்வளவு கஷ்டத்திலும் பொட்டப்புள்ளய கைவிடல. பெத்ததுக்கு அப்புறம் சொத்துக்கு பங்காளிங்க கொள்ளி ஆம்புளதா வைப்பாங்கன்னு சொல்ல நா வச்சா எங்காத்தா கட்ட வேவாதான்னு கொடுவா  எடுத்துட்டா. வம்பாடு பட்டு வளத்தது வீண்போவல. எல்லோரும் துணைக்கு ஊருசனம் வாய்பேசல அவளோடு ஒத்த வயதுடைய ஒருத்தி கடைசியா கன்னத்தோட கன்னம் ஒரசி முத்தமிட்டு எங்குலசாமியோ ன்னு கத்துனவ யாருன்னு விசாரிச்சதுல வெளியூர் ஆட்டக்காரின்னாங்க ஊரு மக்கா...

2.ஒரு நாள் டி.எஸ்.பி: வட்டாரவழக்குகள் அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தபட வேண்டியவை. இந்தக் கதையில் கிழவிகளின் வட்டார வழக்கும் அதில் கடைசியாக வரும் வரிகளாக "அத்திய சொல்லு மொதல்ல. கருப்பா இருந்தாவே இந்த ஊர்ல்ல கீற கண்டவனுக்குப் பொறந்தவனுங்க சும்மா வுட்றதில்ல அதுக்கே தண்ணி கிண்ணி ஊத்தாம தலைவிரி கோலமா நாறினி கெடக்குதுங்க பொண்ணுங்கொ வெள்ளத் தோலுன்னா, பொட்ட நாய் பின்னாடி சுத்துற ஆம்பள நாய் கணக்கா சுத்துவானுங்களே எம்பட்டைங்கோ" "உங்க ஊட்டு ஆம்பளைங்களுக்காக இப்படித் துடிக்கிறீங்களே கேக்க நாதியத்த எஸ்ஸி பொண்ணுங்கள ஒருத்தன் விடாம தூக்கினு போயி தெனம் நாசம் பண்றப்ப யாரு மயிரப் புடுங்கினு இருந்தீங்க?".

3.இறமாறங்கெட்டவ: எனக்கு மகளிர் மட்டும் படம் பார்த்த மாதிரியான ஃபீல். அதுக்கும் மேல எதோ ஒரு வருத்தமும் இதுல மகவு பண்ண வேணும். ஆண்களுக்கு சுடுகாடு நிச்சயமாயிடுதுன்னும் பொண்ணுவோ போர இடத்துல பொதஞ்சி போறாங்கன்னு சொல்ற வலி இன்னமும் பொறந்த வீடா புகுந்த வீடான்ற கேள்விக்கு பதிலில்ல. கடைசியில அந்த ஒப்பாரி என்ன என்னமோ செய்யுது.

4.பிசுபிசுத்த குற்றவுணர்வு: இதை நான் டாஃபி புத்தகத்தின் சொல்லியிருந்தேன். எல்லாம் முடிந்த பின்பும் இன்னும் சிலர் ஜாதியை மட்டும் தூக்கி பிடிக்கின்றனர்; தான் அந்த ஜாதியால்தான் எல்லாம் இழந்தோம் என்று அறியாமல்.

5.முதல் ஷிஃப்ட்: இங்க இன்னும் நிறைய விழிப்புணர்வு தேவப்படுது. சட்டத்த காக்குறவங்களே குற்றம் செஞ்சா நாட்ட எப்படி நம்புவது.

6.நறுமுகை: பெரும்பாலும் ஆண்கள் ஈர்க்கப்படுவது பெண்களின் அழகியல் தோற்றமேயென்றி உள்பார்க்கும் நோக்கமென்பது அரிது. அப்படியாக மாறிப்போயிருந்தவனிடம் வாசிப்பும் வாழ்வியலும் தொலைந்ததே அவளின் மனப்போக்கானது. அதுபோலவே இங்கேயும் ஆங்கில நூல்களின் சில குறிப்பாக அமைந்தது.

The rainbow -DH Lawrence
The thing around your neck-Chimamanda Ngozi adichie
The color purple
In search of our mothers gardens
Uncle's tom cabin
The second sex
Maybe you should talk to someone -Lori Gottlieb

7.மரணம் பழகு: இதுவரை மரணம் பற்றிய பயமுண்டு. இறந்த நண்பனின் முகம் இரவில் கனவில் வெளிப்படும் போதெல்லாம் மரணபயம் தொற்றிக்கொள்ளும். இதுவரையிலும் ஒரு உயிர் பிரியும் வேதனையை கொள்ளுத்தாத்தாவின் மரணம் நினைவுப்படுத்திக் கொண்டுதானிருக்கிறது. ஒரு நோயாளி தன் மரண பயத்தை தானே வெளிக்கொள்ளும் கதை ஒரு வித அழுத்தத்தை தந்தாலும் தான் சுயம் தேர்ந்தது.

8.பைபிள் ஜோசியம்: அந்த வரிகளில் தான் எத்துனை நம்பிக்கை. அந்த பூஷ் குட்டியின் அன்பும் அதன் இல்லாமல் போனதும் ஒருவித மன பாதிப்பைத் தான் தந்தது. அது இருந்திருக்கலாம். ஒட்டர்களிடம் தப்பித்து பிழைக்கும் அந்த வாயில்லா ஜீவனின் பாடுகள் எத்தனை? நானும் ஒருவகையில் பாண்டியனைப் போலும்.

9.பொலி எருமை: புத்தகத்தின் தலைப்பான இந்தக் கதை சற்றே வடார்காடு மண்ணின் வழக்கம் என்பதை அறிவேன். பெரும்பாலும் பலி கொடுப்பதில் நம்பிக்கையற்றவன் நான். எல்லா ஜீவன்களையும் கடவுள் காக்கும் என்றால் அந்த பலி கொடுத்த கண்டியையும் காக்கும் கடமையை தெய்வம் இழந்தது. இங்குதான் தொ.பா அவர்களுடைய தெய்வம் என்போர் தலைப்பு ஞாபகம் வருகிறது.

எல்லா திருவிழாக்களும் தன் சாதிய பெருமை பேசும் பாகுபாடாகவே நான் உணர்கிறேன். கடைசியில் புத்தனை இவர்கள் இன்னும் அறிந்திருக்கவில்லை எனவும் இவர்களின் வசையையும் நிலையில்லா புத்தன் சகித்துக் கொள்வான் என்றே இந்த பொலியை சற்றே கவலையடந்தவனாய் முடிக்கின்றேன்.

10.பூரதம்: எங்களிடமுள்ள மன்னிப்பை எங்கள் அனுமதியின்று ஏன் தந்தாய் ஏசுவே?

11.மகேஷ் பாப்பா: இங்கே தீண்டாமையின் உச்சத்தை அனுபவித்தவன் கீழ் ஜாதியில் பிறந்தவர்களென்று மேல்தட்டு மக்களின் அடக்குமுறைகளையும் ஒடுக்கு முறைகளையும் வறுமையில் ஐந்தாயிரம் ரூபாயிக்கு அடகு வைக்கப்பட்டவனுடைய குடும்பத்தை மீட்டெடுத்த போராளிகளையும் அவர்களின் வாழ்வையும் அவர்கள் வளர்வதினால் முதலாளித்துவத்தின் கடுங்கோவத்தையும் நேர்த்தியான பார்வையில் மகேஷ் பாப்பா.