பெயரில் நிறைகிறது முகம் - கிருங்கை சேதுபதி
"சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது, சோதிமிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை" என்ற எட்டையபுரக் கவிஞனின் வரிகளை இத்தொகுப்புக்குச் சூட்டி அழகுப்பார்க்கிறது வாசித்தலுக்குப் பிறகான என் ஆழ்மனதின் மவுனரேகைகள்.
"தூரிகைக்கு வர்ணங்கள் பேதமில்லை" என்கிற கவிஞரின் வரிகளுக்கேற்ப "பெயரில் நிறைகிறது முகம்" என்கிற இக்கவிதை தொகுப்பு முழுவதிலும் கவிதைகளுக்கும் அதில் வரும் இனிய கருத்துகளுக்கும் கற்பனைகளுக்குமான முகங்கள் பேதமில்லை என்றே அடித்துச் சொல்லுமளவிற்கு நெஞ்சில் நிறைகிறது.
தொகுப்பின் தலைப்புகளை ஆறுமுகமாக பிரித்து ஒவ்வொரு தலைப்பிற்குள்ளும் ஒவ்வொரு விதமான கவிதைகளை எளிய சொற்களால் நன்செய் நிலத்தில் விதைகளை பயிர் செய்வதைப் போல விதைத்திருக்கிறார்.
முகம் என்கிற பொழுதே அகத்திற்குள் ஓர் வடிவத்தினை எண்ணங்கள் நினைவு ரேகைகளில் கோர்க்கத் துவங்குகின்றன.
அத்தகைய தன்மையினை ஒத்த கவிதைகள் இங்கே பல்வேறு முகங்களை தன் எழுத்துக்களால் வரைந்து வரைந்து அதற்கு வண்ணம் தீட்டி மகிழ்ந்திருக்கிறார் ஆசிரியர்.
ஆழ்ந்த வாசகன் என்கிற முறையில் எனக்கு பின் வரும் வாசகர்களுக்கு இங்கு தாமரை போல் மகிழ்ந்திருக்கும் சில முகங்களை காட்டி நானும் உங்களின் மனதினோரத்தில் புன்னகையாய் பூக்க ஆசைப்படுகிறேன்.
"அன்புடன்"
ஒவ்வொரு கவிஞனுக்குள்ளும் இத்தகைய தன்மையினையொத்த உணர்வுகள் உள்ளுக்குள்ளே புதைந்து கிடைக்கின்றன. அவைகள், சில நேரங்களில் முறையிடல் மற்றும் வசவுகளை அவரின் மீதான உச்ச அன்பால் நேரடியாக சொல்ல விரும்பாத பொழுது அவைகள் கவிதைகளாகப் பிறக்கின்றன. உதாரணமாக கண்ணதாசனின் பல கவிதைகளையும் பாடல்களையும் அறிந்திருப்போம்.
"அதுவரை" என்கிற கவிதையில்,
கவிதைகளை ரசிக்கும் இதயத்திடம் தான் கவிக்கும் கவிஞனுக்கும் மோட்சம் கிட்டுகிறது. பாரதிக்கும் இத்தகைய ஆசைகளே அதிகம். அவன் வழி வரும் கவிஞருக்குள்ளும் இத்தகைய ஆசைகள் பூப்பதில் என்ன ஆச்சர்யம்.
"முடிந்தாக வேண்டிய பயணம்" என்கிற கவியில்,
வாழ்க்கையின் எதார்த்தங்களையும் அதற்குள் மறைந்திருக்கும் ரகசியங்களையும் நம்பிக்கை என்கிற பெயரில் தனித்தனியாக கடந்து போகவேண்டிய ஓர் ஆதி அச்சத்தின் தொணியில் துணைத்தேடும் ஏக்கத்தோடு நம்மை கவிதைக்குள் இழுத்து வழியொன்றை சமைக்கச் சொல்கிறது.
இக்கவிதையின் அடர்த்தியினை விவரிக்க வார்த்தைகள் இல்லாமல் பித்துநிலையின் உச்சியில் நெருக்கமானவர்களின் நினைவுகளை ஒருகையில் பிடித்தபடி அங்குமிங்கும் மனம் குரங்காய் ஆடுகிறது... இங்கு வைத்தியம் செய்யும் மருந்துகளே பித்த நரம்புகளுக்கு உணவாகி உயிராகி உணர்விலே கலந்து சிரித்துக்கொண்டே கழுத்தை நெரித்து காதோரம் சொல்கிறது மருந்தும் நானே மரணவாசலின் தூதுவனும் நானேயென்று... இத்தகைய தாக்கத்தை காகிதங்களில் எழுத்தாக கடத்திய விதம் கண்டு வியப்புக்குள்ளாகிறதென்மனம்.
"இடைவேளை"
பொருட்களின் மௌனமான செயல்களை விவரிக்கும் அழகான கவிதை இது.
இத்தகைய குறுங்கவிதைகளில் கற்பனையின் வளமும் கவிஞரின் ஆழ்ந்த இலக்கிய அறிவும் தீப்பொறிகள் போல ஆங்காங்கே கங்குகளாய் மின்னிக்கொண்டிருக்கின்றன.
எடுத்துச்சொல்ல இன்னுமெத்தனையோ கவிதைகள் இருப்பினும் அதையெல்லாம் வாசகர்கள் வாங்கி வாசிக்க வேண்டுமென... இத்தோடு நானும், எனக்குள் "பெயரால் நிறையும் முகத்தோடு" நினைவென்னும் நெஞ்சாலையின் ஓர் ஓரத்தில் தேநீர் அருந்த எடுத்த குவளையோடு கரைந்து கானலாய் கசிந்துக்கொண்டிருக்கிறேன்.
சிறப்புமிக்க இக்கவிதைத் தொகுப்பின் ஆசிரியருக்கும் கவிதைகளுக்கும் வணக்கமும் என் வாழ்த்தும்.

தெய்வத்துக்கென்று
பறித்த மலரைச்
செடிக்கே வைக்கின்றேன்.
வைவதற்கென்று நீ
எடுத்த சொல்லையே
வாழ்த்தாய் இசைக்கின்றேன்.
உன்
பொய்களில் விலக்கிய
செய்திகள் தொகுத்தே
புகழ்ந்து பேசுகிறேன்.
இதைவிடச்
செய்வதற்கொன்று
இல்லை என்பதால்
கவிதை வடிக்கிறேன்.

எங்கோ ஓர் இடத்தில்
என் கவிதையை ரசிக்கும்
இதயம் வசிக்கிறது
அங்கேதான் -
என் உயிரின்
ரகசியமும் இருக்கிறது.
எங்கோ ஓர் இடத்தில்
இருக்கிறதென் ஆவிமூலம்
அங்கே போய்ச் சேரத்தான்
இத்தனை பிரயாசை,
அங்கிங்கெனாதபடி
எங்கும் நிறைந்திருக்கும்
கவிதைக்குள் சங்கமித்தால்
காணாது போய்விடுவேன்.
என் கவிதையை ரசிக்கும்
இதயம் வசிக்கிறது
அங்கேதான் -
என் உயிரின்
ரகசியமும் இருக்கிறது.
எங்கோ ஓர் இடத்தில்
இருக்கிறதென் ஆவிமூலம்
அங்கே போய்ச் சேரத்தான்
இத்தனை பிரயாசை,
அங்கிங்கெனாதபடி
எங்கும் நிறைந்திருக்கும்
கவிதைக்குள் சங்கமித்தால்
காணாது போய்விடுவேன்.
கவிதைகளை ரசிக்கும் இதயத்திடம் தான் கவிக்கும் கவிஞனுக்கும் மோட்சம் கிட்டுகிறது. பாரதிக்கும் இத்தகைய ஆசைகளே அதிகம். அவன் வழி வரும் கவிஞருக்குள்ளும் இத்தகைய ஆசைகள் பூப்பதில் என்ன ஆச்சர்யம்.
"முடிந்தாக வேண்டிய பயணம்" என்கிற கவியில்,
வெகுதொலைவில் இருக்கிறது
என் வீடு.
வழிதவறிப் போய்க் கொண்டிருக்கிறேன்
நான்.
திசைகாட்டும் கருவி
என்னிடம் இல்லை.
ஒளிகாட்டும் விளக்கில்லா
இருள்.
“என்னைப் போல் யாரும்
இருக்கிறீர்களா?
எனது குரலை எதிரொலிக்கும்
பதில் குரலைத் தேடி
வழிசமைத்துப் போகிறேன்.
விடிவதற்குள் எப்படியும்
வீட்டைய முடியும் என்ற
நம்பிக்கையில்
நடக்கிறேன்.
உங்களைப்போலவே.
என் வீடு.
வழிதவறிப் போய்க் கொண்டிருக்கிறேன்
நான்.
திசைகாட்டும் கருவி
என்னிடம் இல்லை.
ஒளிகாட்டும் விளக்கில்லா
இருள்.
“என்னைப் போல் யாரும்
இருக்கிறீர்களா?
எனது குரலை எதிரொலிக்கும்
பதில் குரலைத் தேடி
வழிசமைத்துப் போகிறேன்.
விடிவதற்குள் எப்படியும்
வீட்டைய முடியும் என்ற
நம்பிக்கையில்
நடக்கிறேன்.
உங்களைப்போலவே.
வாழ்க்கையின் எதார்த்தங்களையும் அதற்குள் மறைந்திருக்கும் ரகசியங்களையும் நம்பிக்கை என்கிற பெயரில் தனித்தனியாக கடந்து போகவேண்டிய ஓர் ஆதி அச்சத்தின் தொணியில் துணைத்தேடும் ஏக்கத்தோடு நம்மை கவிதைக்குள் இழுத்து வழியொன்றை சமைக்கச் சொல்கிறது.
சம்பந்தமே இல்லாமல்
சம்பந்தமேயில்லாமல்
தோன்றும் நினைவுகளின்
சங்கடம் அறிவீர்களா?
இழுத்துப் பிடித்து
வெளிவந்தாலும்
கழுத்தை நெரிக்கும்
அதன் மூர்க்கம்
அறிந்திருந்தால்
சிரிக்க மாட்டீர்கள்.
தடுக்க முடியாமல்
அடுத்தடுத்து வந்து
துன்புறுத்தும் அவை
மாயைகள் இல்லை;
மனசாட்சி தவற விட்ட
நோயின் கூறுகள்.
சர்க்கரையைக் கட்டுப்படுத்த
மாத்திரை கொடுக்கும்
வைத்தியர்களே,
இதற்கொரு மருந்து தருவீர்களா?
சம்பந்தமேயில்லாமல்
தோன்றும் நினைவுகளின்
சங்கடம் அறிவீர்களா?
இழுத்துப் பிடித்து
வெளிவந்தாலும்
கழுத்தை நெரிக்கும்
அதன் மூர்க்கம்
அறிந்திருந்தால்
சிரிக்க மாட்டீர்கள்.
தடுக்க முடியாமல்
அடுத்தடுத்து வந்து
துன்புறுத்தும் அவை
மாயைகள் இல்லை;
மனசாட்சி தவற விட்ட
நோயின் கூறுகள்.
சர்க்கரையைக் கட்டுப்படுத்த
மாத்திரை கொடுக்கும்
வைத்தியர்களே,
இதற்கொரு மருந்து தருவீர்களா?
இக்கவிதையின் அடர்த்தியினை விவரிக்க வார்த்தைகள் இல்லாமல் பித்துநிலையின் உச்சியில் நெருக்கமானவர்களின் நினைவுகளை ஒருகையில் பிடித்தபடி அங்குமிங்கும் மனம் குரங்காய் ஆடுகிறது... இங்கு வைத்தியம் செய்யும் மருந்துகளே பித்த நரம்புகளுக்கு உணவாகி உயிராகி உணர்விலே கலந்து சிரித்துக்கொண்டே கழுத்தை நெரித்து காதோரம் சொல்கிறது மருந்தும் நானே மரணவாசலின் தூதுவனும் நானேயென்று... இத்தகைய தாக்கத்தை காகிதங்களில் எழுத்தாக கடத்திய விதம் கண்டு வியப்புக்குள்ளாகிறதென்மனம்.
"இடைவேளை"
கழற்றி வைத்த கண்ணாடி
படித்துக் கொண்டிருக்கிறது
விரித்து வைத்த புத்தகத்தை.
○
எழுத வைத்த தாளில்
படுத்தபடி
யோசித்துக் கொண்டிருக்கிறது
பேனா.
○
குறைந்த அளவில்
சுழன்று கொண்டிருக்கிற
தொங்குமின் விசிறியின்
காற்றைச்
சுகமாய்
அனுபவித்துக் கொண்டிருக்கிறது
இருக்கை.