பந்தயம் - அமுதா ஆர்த்தி
பந்தயம் ஒரு புத்தகம் மட்டும் அல்ல. அது நம் கண் முன்னால் நடந்து கொண்டிருக்கிற வாழ்க்கைகளை அமைதியா கையில எடுத்துக் காட்டுற ஒரு முயற்சி.
இந்தச் சிறுகதைத் தொகுப்பில் மொத்தம் 12 கதைகள். சிறுகதைகள் என்றாலும், வாசிக்கும்போது அவை சின்னதா தெரியவில்லை. ஒவ்வொரு கதையும் வாசகனுக்குள்ள ஒரு நெடுங்கதை மாதிரி விரிந்து தாக்கத்தை உருவாக்குகிறது.
அமுதா ஆர்த்தி அவர்களின் எழுத்து ஆரவாரமில்லாதது. ஆனால் அதற்குள் ஒரு கனமான மௌனம், ஒரு தீவிரமான உணர்வு ஒளிந்திருக்கிறது.
இந்தத் தொகுப்பில் வரும் கதைகள் நம் அன்றாட வாழ்க்கையிலிருந்து எடுக்கப்பட்டவை. குடும்பப் பொறுப்பு வலுக்கட்டாயமாக திணிக்கப்படும்போது வரும் வலி, இயற்கையாக ஏற்பட்ட பொறுப்பை எதிர்ப்பு இல்லாமல் சுமக்கும் மனநிலை, பாலியல் மீறல்களால் உள்ளுக்குள்ள உடைந்து போகும் மனங்கள், துணை இல்லாமல் இருப்பதின் வலி, துணை இருந்தும் தனிமையாக வாழ வேண்டிய அவலம் இந்த எல்லாவற்றையும் எழுத்தாளர் மிக நுணுக்கமாக ஆனால் நேர்மையோடு பேசுகிறார்.
இந்தக் கதைகளில் பெரிய ஹீரோக்களும் இல்லை. பெரிய வசனங்களும் இல்லை. ஆனால் வெள்ளந்தியான மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களோட அன்பு, அன்புக்கான ஏக்கம், சின்ன சின்ன ஆசைகள், கைக்கு கிட்டின மாதிரி தோன்றி அடுத்த நிமிஷமே வழுக்கிப் போயிடும் வெறுமை இவையெல்லாம் வாசகனுக்குள்ள ஆழமா இறங்குகிறது.
பந்தயம் புத்தகத்தின் ஒரு முக்கியமான பலம்.
அதன் காட்சிப்படிம மொழி, வாசிக்கின்ற போதே கதைகள் கண் முன்னாடி ஒரு திரைப்பட காட்சியோட மாதிரி உருவெடுத்து நிற்கிறது.
புத்தகம் படித்து முடித்த பிறகும், கதைகள் முடிந்து போகவில்லை.
இந்தப் புத்தகம் வாசிப்பதற்காக மட்டுமல்ல. உணர்வதற்காக. நமக்குள்ள ஒளிந்திருக்கிற பல மௌனங்களை மெதுவாக தொட்டு எழுப்புவதற்காக.
இன்றைய தமிழ் இலக்கியத்தில் இப்படியான படைப்புகளை நாம் இன்னும் அதிகம் பேச வேண்டும். அதற்கான ஒரு நல்ல காரணம் தான் பந்தயம்.
அமைதியா வாசிக்கப்படும்…ஆனால் நீண்ட நாட்கள் மனசுக்குள்ள பேசிக்கிட்டே இருக்கும் ஒரு முக்கியமான சிறுகதைத் தொகுப்பு.