சொற்களுக்குள் நெளியும் உயிர் - பொன் விக்ரம்
இந்நூலில் கவிதைகள் சொற்களுக்கும் நெளியும் உயிராக உருவகம் கொள்கிறது. சலசலத்து ஓடும் நதியின் மீது மழை தடம் பதித்துப் பெய்வதாகவும்.....மேகப்பெருவெளிகள் ஓவியங்களாகத்தோன்றுகிறபோது அதன் கலைதல் காற்றின் விளையாட்டாகவுமென்று நூல் முழுமைக்கும் கற்பனைகள் வரிசைப்படுகிறது.பெண்ணை பெண்ணுக்குள் தேடு...ஆடைக்குள் தேடாதே என்று கண்டிக்கிறது.நிர்வாணத்தை முடிவு செய்வது அவமானங்களே ஆடைகள் அல்ல என்றும் மதக் குறிகள் துருத்திக் கொண்டிருப்பதாகவும்...மன்னிப்பு நிம்மதியின் சன்னதியாகவும்...மதத்தின் கிளைகளில் தலைகீழாய் மனிதம் தொங்கிக் கொண்டிருப்பதாகவும்....நிறைய வரிசைப்படுகிறது நூல் முழுவதும்.
நீதிமன்றத்தில் எத்தனை ஆயிரம் பொய்கள்....எப்படி சுமக்கிறதோ கீதை....அரும்பு மொட்டு காய் கனி எதுவும் கணக்கில்லை ஆறாம் அறிவின் காமத்திற்கு...என்று வசீகரிக்கிறது.
கெளரா இலக்கிய விருது பெற்று வெளிவந்துள்ள இந்நூலின் ஆசிரியர் பொன் விக்ரம் அவர்களுக்கு வாழ்த்துகள்.