நட்சத்திரங்களோடு ஒரு பகல் பொழுது - க.ஜெய் விநாயக ராஜா
குறுகிய வடிவமும் பொருள் அடக்கமும் சேர்ந்து குன்றாய்த் தெரியும் கவிநயப் படைப்பே துளிப்பாவின் அங்கங்கள் ஆவன. சட்டென அகத்தில் ஈர்ப்பைப் பெறுவன துளிப்பாக்கள் என்றால் மிகையில்லை. அத்தகைய 30 துளிப்பாக்கள் தமிழில் முதலில் உயிர்த்து, 4 மொழிபெயர்ப்பாளர்களால் வெவ்வேறு உருக்களாக வந்துள்ளன. இதோ, புதுச்சேரியிலிருந்து, “நட்சத்திரங்களோடு ஒரு பகல் பொழுது” எனக் காட்சிகளோடு படைத்துள்ளார் நூலாசிரியர் க.ஜெய் விநாயக ராஜா அவர்கள்.
“வளர்வோம்! வளர்ப்போம்!” என்று, புத்தக ஆக்கத்தினை அழகுற வடிவமைத்துள்ளது படைப்பு பதிப்பகம். மேலும், விரிவானச் செய்தியை விரைந்துத் தந்து வாழ்க்கையின் நுணுக்கங்களைச் சிந்திக்க வைக்கும் இந்த நூலை ஐந்து மொழி ஆவணமென பதிப்புரையில், இலக்கியத் தடம் பதித்து வரும் இந்நூலாசிரியரைப் பாராட்டியுள்ளது.
இந்நூல் ஆசிரியர் இதற்கு முன் எழுதிய நூல்களைப் பற்றியும் பங்கேற்ற தொகுப்பு நூல்கள் பற்றிய விவரங்களையும் தன் அணிந்துரையில் முன்மொழிந்துள்ளார் பாவலர், எழுத்தாளர் புதுவை சீனு.தமிழ்மணி அவர்கள். தொடர்ந்து, புதுச்சேரியின் வரலாற்று ஆண்டுக் காலத்தைப் பற்றிய விவரங்களையும் அளித்துள்ளார்.
புதுச்சேரி, காரைக்கால் (தமிழகம் - தமிழ்), மாகே (கேரளம் - மலையாளம்), ஏனாம் (ஆந்திரா – தெலுங்கு) என நான்கு இடங்களில் உள்ள நிலப்பரப்புகள், ஒரு யூனியன் பிரதேசமாகி, புதுச்சேரியென அரசு நிர்வாகத்திற்காக இணைக்கப்பட்டப் பகுதியாகும் என்பது அனைவரும் அறிந்தது ஆகும்.
அத்தகைய, இந்தப் புதுச்சேரி மண்ணை, பிரெஞ்சுகாரர்கள் 243 ஆண்டுகள் ஆண்டுள்ளனர். அத்துடன் ஆங்கிலேயர்களும் சிறிது காலம் ஆண்டுள்ளனர் என்ற விபரத்தையும் குறிப்பிட்டுள்ளார் புதுவை சீனு.தமிழ்மணி அவர்கள்.
தொடர்ந்து, தமிழில் முதன்முதலாக ஐந்து மொழிகளில் வெளிவரும் இந்நூலின் சுவையை எடுத்துக்காட்ட பலத்துளிப்பாக்களைக் குறிப்பிட்டு, அவற்றின் பொருட்சுவையை உணரும் வகையில், அவற்றைப் பற்றி எழுதி வாழ்த்தி உள்ளார்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பா. ரவிக்குமார் அவர்கள், தன் “மௌனமாய் மலர்ந்த பிரபஞ்சம்” எனும் அவரின் அணிந்துரையில், தமிழில் எழுதியுள்ள இந்நூல் ஆசிரியரின் கவிதைகளை நான்கு மொழிகளில் மொழிபெயர்ப்பது என்பது சாதனை என்று குறிப்பிட்டுள்ளார். மொழியாக்கப் பணியைப் பற்றிக் கூறுகையில், பொதுவாக, மொழிபெயர்ப்பு செய்கையில், கவிதையின் கவித்துவம் காணாமல் போவதற்குச் சாத்தியம் உண்டு என்பதையும் கூறியுள்ளார். வளரும் மொழிபெயர்ப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு கூறு என்பதை நாம் மறுக்க இயலாது. அதன் முக்கியத்துவத்தை இங்கே உணர்த்தியுள்ளார் பேராசிரியர்.
மேலும், நான்கு மொழி வாசகர்களும் தமிழ் மொழியின் அழகையும் சுவைக்கலாம் என்பதுடன் கவிதைக்குத் தேவை, வடிவம், கவித்துவ கருத்து மட்டும் அன்றி, அதனை உணர்த்தி இலயிக்க ஒரு இதயமும் வேண்டும் என்றும் நிதர்சனத்தைக் காட்டியுள்ளார். பல துளிப்பாக்களை உதாரணமாகக் காட்டியவர், தமிழ் மொழியில் உள்ள ஒரு துளிப்பாவுடன் அதனை மொழிபெயர்த்த ஆங்கில மொழிப் பாவையும் சேர்த்து குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உன்னத உள்ளம் கொண்ட ஒரு தமிழ்க் கவிஞனைப் பன்னாட்டு அரங்கில் மொழிபெயர்ப்பாளர்கள் கொண்டு சென்று உள்ளார்கள் என்றும் கூறி வாழ்த்தி உள்ளார்.
பாவலர், எழுத்தாளர் புதுவை யுகபாரதி அவர்கள், சிந்தனை மிக்க துடிப்பாக்கம் படைத்துள்ள நல்லிளைஞரான நூல் ஆசிரியர், மேலும் நல்ல படைப்புகளைப் படைக்க வாழ்த்தி உள்ளார். குறிப்பாக, வாசகர்களுக்கான ஆவலுக்கு, புத்தர் எனும் அமைதியின் குறியீடாக உள்ள ஒரு துளிப்பாவினைப் பற்றியும் எடுத்துக்காட்டி உள்ளார்.
புதுச்சேரி அரசு, தலைமைச் செயலகத்தின் சட்ட மொழிபெயர்ப்பாளர், கவிதைக் காதலன், கலைமாமணி முனைவர் சுந்தர முருகன் அவர்கள் தன் வாழ்த்துரையில், சமூகப் படிநிலைகளைச் சமமாக்கிட, இந்நூலாசிரியர் இன்னும் கவிதைகளை எழுதவேண்டுமென ஊக்குவித்துத் தன் வாழ்த்துரையைத் தொடங்கியுள்ளார்.
அடுத்து, ஹைக்கூ எனும் துளிப்பாவின் தோன்றுதலையும் தொடரும் அதன் பாதைகளையும் விவரித்தவர், நூலாசிரியரின் படைப்பும் வாசகர்களை ஈர்க்கும் விதமாக அமைந்து உள்ளது என்பதற்கான, காரணங்களையும் சுட்டி வாழ்த்தியுள்ளார். மேலும், நூலாசிரியரின் எல்லாக் கவிதைகளும் உலகத்தைச் சலவை செய்யட்டும் என்ற எதிர்பார்ப்பையும் வாழ்த்துரையில் வெளிப்படுத்தியுள்ளார்.
ஜென் என்பது இயல்பாயிருந்து இலக்கின்றி வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை அப்படியே ஏற்றுக் கொள்வதாகும் என என்னுரையைத் தொடங்கி உள்ளார் நூலாசிரியர் க.ஜெய் விநாயக ராஜா அவர்கள். ஹைக்கூவின் அயலக இலக்கிய ஆளுமைகளில் தொடங்கி, நம் மண்ணின் மைந்தர்கள் வரையில், இந்தத் தளத்தில் தொடர்ந்து இயங்கிய, இயங்கிக் கொண்டிருக்கும் முன்னோடிகளையும் குறிப்பிட்டு நூலாக்கத்திற்குக் காரணமான அனைவருக்கும் நன்றி செலுத்தியுள்ளார் ஆசிரியர்.
இந்நூலின் முன்னுரையாக, இந்தியாவின் நில வரையறை அமைப்பில் வித்தியாசமான ஒன்றான, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நான்கு இடங்களைப் பற்றிய வரலாற்றையும், பழமையும் பெருமையும் கொண்ட முக்கியமான இடங்கள் சிலவற்றின் படங்களையும் சேர்த்து வாசகர்களுக்கு அறிமுகப் படலமாக படைத்துள்ளார் நூலாசிரியர்.
மேலும், இந்த நூலின் தமிழ்ப்பாக்களை, மொழிபெயர்த்த ஆளுமைகளின் இலக்கிய அடையாளங்களை, தமிழிலும் அவரவர் மொழி பெயர்த்த மொழியிலும் என இரண்டு வகையாக நூலில் பதிந்துள்ளார்.
30 ஹைக்கூ - சென்ரியுக்கள் கொண்ட இந்நூல், அணிந்துரை, வாழ்த்துரை, புவியிடத்து வரலாற்று விபரங்கள், மொழிபெயர்ப்பாளர்களின் விவரங்கள், என்னுரை, முன்னுரை என வாசகர்களுக்கு ஒரு முழுமையான கட்டமைப்பு கொண்டதாக, வாசிப்பின் மூலம் தரும் வகையில் ஆக்கியுள்ளார் நூல் ஆசிரியர்.
திண்டுக்கல் ஓவியர் தமிழ்ப் பித்தன் அவர்களின் பங்கும் பாராட்டத் தக்கதாகும். அவரின் படைப்புகளை, வெறும் கோட்டோவியம் என்று மட்டும் சொல்லிக் கடந்துவிட இயலாது. ஏனெனில், துளிப்பாவிற்கு இணையாகப் பேசுகின்ற, செய்தியை உணர்த்துகின்ற வடிவமைப்பு இந்தக் கோடுகளில் கோலேச்சியுள்ளது. உதாரணமாக, நான் உணர்ந்தவற்றில் சிலவற்றைப் பகிர்கிறேன்.
சாதாரணமாக நம் நகரப்பகுதி வாழ்வியலில் காணப்படும் வசதிதான் மின்னேணி என்றாலும் அதை உபயோகிக்கும்போது ஏற்படும் அனுபவத்தைத் துளிப்பாவின் மூலம் வெளிப்படுத்தும் நூலாசிரியரின் கோணம் குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இந்தத் துளிப்பாவிற்கான ஓவியத்தில், முழங்காலில் தொடங்கி நீளும் பாதமாகவும் வரையபட்ட ஓவியத்தின், இடைப்பட்ட தூரமானது படிகளாகவும் வரையப்பட்டுள்ளது. பாதத்தில் உள்ள விரல்களில் இருந்து பாதைகள் விரிவதாகக் காட்டப்பட்டுள்ளது. கவிதைக்கேற்ப விரையும் வேகத்தில் ஓவியமும் விரைகிறது அல்லவா?
அடுத்து, ஒரு வாழ்வியல் பற்றியதைப் பார்ப்போம்.
“ஆடும் வரை ஆட்டம்” என்பதைப் போல அணையாத ஒளிவிளக்கான அந்த இரவுக் கலைஞனின் கலைக்குப் பின் வறுமை வாழ்க்கையில் ஆட்டம்போடுகிறது. அந்தக் கொடிய காட்சியைக் கண்ணில் காட்டுகிறது இந்தத் துளிப்பா.
அத்துடன் ஓவியமும் அந்த உணர்வின் சாட்சியாக நிற்பதைக் காணலாம். பல மணி நேரத்திற்கு விரிவான ஒப்பனை செய்து, இயல், இசை, நாடகம் என்று இணைந்த கலை வடிவமாக, முகபாவனை, கையசைவுகள் கொண்ட கதகளி என்னும் பாரம்பரிய கலைஞனின் முக வடிவம், அவன் அருகில் வறுமையின் பிடியில் ஆடைக்கும் வசதி இல்லாது சிரமப்படும் ஏழ்மையின் வடிவமாகக் கூனிக் குறுகிய ஒரு மனிதனின் வடிவம் ஓவியமாக உள்ளது. இந்நூல் 4 மொழிகளில் மொழிபெயர்க்கப்படவில்லை. ஐந்தாவதாக ஓவிய மொழியிலும் மொழிபெயர்ப்பாகி உள்ளது என்பதற்கு இதுவே சாட்சியாகும்.
இன்னொன்று, இறுதியாக, இனிதாக, ஒரு உதாரணம்,
அறத்துப்பாலில் அன்புடைமையைக் கொண்டாடியவர் வள்ளுவர். போலவே, “அன்பே கடவுள்” என்பதை ஏற்றுக் கொள்ளதோர் உலகில் யாருமிலர். அதைக் கூறும் துளிப்பாதான் இது என்பதிலும் மாற்றுக் கருத்து இராது. ஆனால், இதற்காகான ஓவியமாக, இரண்டு கைகள், அதில் விரல்கள், அந்த விரல்களில் ஒன்றான ஆள்காட்டி விரலின் நுனியில், பேனாவின் எழுது முனை, நகத்துடன் ஒட்டி இருப்பதாகக் காட்டிய கலைவடிவம் சிறப்பாக உள்ளது. எனவே, ஓவியருக்குச் சிறப்பு வாழ்த்துகள்! இது அறம் கூறும் அறுமொழி நூல்!
இந்நூலாசிரியர், க.ஜெய் விநாயக ராஜா மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் அனைவரையும் வாழ்த்தி மகிழ்கிறோம். இன்னும் புதுமைகள் சேர்க்கும் இலக்கியப் பயணம், இனிதே நீளட்டும் என்று இந்நூலாசிரியருக்கு வாழ்த்துப் பூச்செண்டுகளை வார்த்தைகளால் வழங்கி வாழ்த்துவோம்.

“அவசர உலகில்
அரைநிமிடச் சிறைவாசம்
மின்ஏணி”

“கலைந்த ஒப்பனை
அணையாத ஒளிவிளக்கு
இரவுக் கலைஞன்”

“கைகளில்
ஒளிந்திருக்கும் கடவுள்
அன்பு கூடிய அறம்”