சந்திப்போம் சிந்திப்போம் - மானா பாஸ்கரன்
தொல்பொருள் அறிஞர், கூத்துக் கலைஞர், சிற்பி, திரைப்பட ஆளுமைகள், மருத்துவர், அரசியல்வாதி, கவிஞர் மற்றும் எழுத்தாளர் என பல்வேறு ஆளுமைகளுடன் மானா பாஸ்கரன் அவர்கள் நடத்திய நேர்காணல் "சந்திப்போம் சிந்திப்போம்" எனும் பெயரில் புத்தகமாக வெளிவந்துள்ளது.
புத்தகத்திற்குள் செல்லும் முன் சில நெருடலான நிகழ்வுகளை சொல்ல வேண்டும். இந்த புத்தகத்தை பாரம்பரிய நிறுவனமான பழனியப்பா பிரதர்ஸ்(முதல் பதிப்பு 2017) வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தில் முன்னுரை ஏதும் இல்லை. மேலும் புத்தகங்களில் ஆங்காங்கே எழுத்துப் பிழைகள் இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் ஏதோ அவசரத்திற்காக புத்தகம் வெளிவர வேண்டும் என்ற எண்ணத்தில் அச்சடித்திருப்பதாக தோன்றுகிறது. காரணம் கவிஞர் வாலி மற்றும் நாகேஷ் ஆகியோருடன் சந்திப்பு நடந்ததாக தெரியவில்லை. ஏனெனில் இரண்டுமே அவர்கள் எழுதிய வாழ்க்கை வரலாறு புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை எடுத்து நேர்காணல் செய்தது போல் காட்டப்பட்டுள்ளது. அதேபோல் டாக்டர் மனோரமா அவர்களிடம் நடந்த நேர்காணலிலும் கேள்வி பதில் மாறி உள்ளது. இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை. இது எழுத்தாளருக்கு தெரிந்து நடந்ததா? இல்லை தெரியாமல் நடந்ததா? என்றும் தெரியவில்லை. மிகச் சிறந்த பத்திரிக்கையாளரான மானா பாஸ்கரன் அவர்கள் எப்படி இதை கவனிக்காமல் விட்டு விட்டார் என்று தெரியவில்லை.
சரி இப்போது புத்தகத்திற்கு வருவோம். பேட்டி எடுக்கப்பட்டவர்கள் எல்லோரும் அந்தந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள்; மிகச் சிறந்த ஆளுமைகள். இந்த புத்தகத்தில் மானா பாஸ்கரன் அவர்கள் தொல்பொருள் ஆய்வாளர் டாக்டர் நாகசாமி, கூத்துப்பட்டறை நா.முத்துசாமி, 'பாலம்' கலியாண சுந்தரம், சிற்பி கணபதி ஸ்தபதி, பொறியாளர் சி.எஸ். குப்புராஜ், கவிஞர் வாலி, நடிகர் நாகேஷ், மருத்துவர் மனோரமா, வார்த்தை சித்தர் வலம்புரி ஜான், உவமை கவிஞர் சுரதா மற்றும் எழுத்தாளர் வள்ளி கண்ணன் ஆகியோரிடம் மிகச்சிறந்த நேர்காணலை நடத்தியுள்ளார்.
தொல்பொருள் ஆய்வாளர் டாக்டர் நாகசாமி, "ஆரியர்கள் எந்த நாட்டில் இருந்து வந்தவர்கள் என்று திட்டவட்டமாக தெரியவில்லை என்றும் ஆனால் பாடப் புத்தகங்களில் ஆரியர்கள் இங்கிருந்து வந்தவர்கள் என்ற சொல்லப்பட்டிருப்பதை மாற்றியமைக்க வேண்டும்" என்றும் குறிப்பிடுகிறார். பல சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் டாக்டர் நாகசாமி அவர்கள். அவர் இந்த கருத்தைச் சொல்லி இருப்பது அவரின் பக்க சார்பை குறிப்பிடுகிறது. அதே நேரத்தில் "மகாபாரதம் மற்றும் ராமாயணம் போன்றவை முற்றிலும் உண்மை வரலாறு என்றோ அல்லது முழுவதும் புராணம் என்றோ சொல்லிவிட முடியாது" என்று குறிப்பிடுகிறார். அது மட்டுமில்லாமல் தமிழகத்தை ஆண்ட மிகச்சிறந்த மன்னன் தஞ்சை இராஜராஜன் என்றும் அவனுடைய கட்டிட அறிவு, நிலச் சீர்திருத்தம், நிர்வாக ஆற்றல், அணைகள், நீர்ப்பாசனம் மற்றும் வருவாய்த்துறை என்ற சில முக்கிய நிகழ்வுகளை குறிப்பிட்டு மிகச் சிறந்த மன்னன் இராஜராஜனே என்று குறிப்பிடுகிறார். அதே நேரத்தில் "2020-ல் இந்திய பொருளாதாரம் எப்படி இருக்கும்"? என்ற கேள்விக்கு "2015-க்குள் இந்தியா பொருளாதாரத்தில் நிச்சயம் தன்னிறைவு பெறும்" என்று குறிப்பிட்டுள்ளார். தன்னிறைவு பெற்றதா என்பதை வாசகர்கள் முடிவுக்கு விட்டு விடுகிறேன்.
தொல்பொருள் ஆய்வாளரிடம் டைனோசர் முட்டைகளைப் பற்றி கேட்கலாம். ஆனால் மானா பாஸ்கரன் அவர்கள் அவரிடம் பவளப் பாறைகள் பற்றி கேள்வி எழுப்பி உள்ளார். இந்தக் கேள்வி நாகசாமி அவர்களுக்கு உரித்தானதா என்று எனக்குத் தெரியவில்லை.
கூத்துப் பட்டறை நா.முத்துச்சாமி அவர்கள் தனது நேர்காணலில், "கிராமங்களும் அங்குள்ள திரௌபதை(திரௌபதி அல்லது திரௌபதை ?) அம்மன் கோவில்களும் இன்னும் கால காலத்திற்கு நமது பண்பாட்டு சின்னங்களாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்" என்று கூறி இந்த யுகத்திற்கும் கூத்துக் கலை அவசியம் என்று குறிப்பிடுகிறார்.
இந்தியாவின் ஆகச்சிறந்த சிற்பி கணபதி ஸ்தபதி அவர்கள், "இந்தியாவில் அனைத்து சிற்பங்களும் தமிழ் சிற்பக் கலையிலிருந்து உருவானதே" என்றும் "இந்தியாவில் உருப்படியான வரலாறுகள் எழுதப்படவில்லை. எல்லாம் மறுக்கப்பட்ட மறைக்கப்பட்ட வரலாறுகள் தான். குமரிக்கண்டம், லெமூரியா கண்டம் இருந்ததையும், அது பிரளயத்தில் சிதைந்து போனதையும் வரலாற்று ஆசிரியர்கள் மூடி மறைத்து விட்டார்கள்" என்றும் ஆதங்கப்படுகிறார். அதே நேரத்தில் தனது நேர்காணலில் புதியதாக இதுவரை யாரும் கூறாத ஒன்றை கணபதி ஸ்தபதி அவர்கள் குறிப்பிடுகிறார். அதாவது, "சமஸ்கிருதம் தமிழனின் மொழி. தமிழனுக்குச் சொந்தமான மொழி. காலப்போக்கில் அது தமிழர்களுக்கு சம்பந்தமில்லாததாக மாறிவிட்டதே ஒழிய ஆதியில் சமஸ்கிருதத்தைப் பேசியவன் தமிழன் தான். சிற்பிகளுக்கெல்லாம் ஞான குருவாக விளங்கும் மயன் தான் தெற்கிலிருந்து வடக்குக்கு சமஸ்கிருதத்தைக் கொண்டு போனான்" என்ற ஒரு கருத்தை சுட்டிக்காட்டுகிறார். இது தமிழறிஞர் தேவநேய பாவாணர் கருத்துக்கு முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. இது உண்மையா? ஏன் இதைப் பற்றி வேறு யாரும் மேற்கொண்டு ஆராய வில்லை? என்று தெரியவில்லை.
பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சி.எஸ்.முத்துராஜ் அவர்கள், "கடல் நீரை பயன்படுத்தும் திட்டம் அவசியமற்ற திட்டம்" என்றும் "புதிய வீராணம் திட்டம், மழை நீர் சேகரிப்பு திட்டம் போன்றவை அவ்வளவாக பயனுள்ள திட்டங்கள் என்று சொல்ல முடியாது" என்றும் குறிப்பிடுகிறார். ஆனால் அதற்கு சரியான விளக்கம் கூறவில்லை. பொதுவாக சாதாரண மக்கள் மழைநீர் சேகரிப்பு திட்டம் மிகச் சிறந்த திட்டம் என்று நினைக்கிறார்கள் ஆனால் இவரின் கூற்று சாதாரண மக்களிடம் எந்த அளவிற்கு எடுபடும் என்றும் தெரியவில்லை. ஆனாலும் இவைகளை தான் எந்த அரசும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இது சரியா அல்லது தவறா என்று அரசும் மிகச் சிறந்த நீரியல் நிபுணர்களும் தான் முடிவு செய்ய வேண்டியது.
சுரதா அவர்கள் யாரைப் பார்த்தாலும் என்ன ஜாதி என்று கேட்பார் என்றும் உலகத்தில் இரண்டே இரண்டு அறிவாளிகள் தான்; ஒன்று தந்தை பெரியார் இரண்டாவது நான் என்று கூறியதை குறிப்பிட்டு உவமை கவிஞர் சுரதா அவர்களுடைய நேர்காணலில் மானா பாஸ்கரன் கேட்டுள்ளார்.
சிற்பி கணபதி ஸ்தாபதியின் பேட்டி மொத்தத்தில் ஏழே கேள்வியுடன் முடிந்துள்ளது. அவரிடம் இன்னும் அதிகமான கேள்விகளையோ அல்லது சில விளக்கங்களையோ கேட்டிருக்கலாம் என்று தோன்றுகிறது.
மிகச் சிறந்த ஆளுமைகள். ஆனால் இந்தப் புத்தகத்தை பதிப்பாளர் சரியான திசையில் கொண்டு செல்லவில்லை என்றே தோன்றுகிறது.