A few words about item

நச்சுக் கோப்பை

கலைஞர் கருணாநிதி அவர்கள் எழுதிய முதல் நாடகம் பழனியப்பன். இது மூடநம்பிக்கைகள் எதிர்ப்பு, மறுமணம், குடியின் தீமை ஆகியவற்றை கொண்டு எழுதப்பட்ட நூல். இந்நாடகம் சாந்தா என்னும் பெயரிலும் பின்னர் நச்சு கோப்பை என்னும் பெயரில் தமிழகம் முழுவதும் அரங்கேற்றம் செய்யப்பட்டது. நாடகத்தில் கதை மாந்தர்களாக சாந்தா, தந்தையாக மணியப்ப முதலியார், அண்ணனாக பழனியப்பன், காதலனாக ஏகாம்பரம், கணவனாக அழகப்பன் மற்றும் ஐயர், ஐயரின் சிஷ்யன் ஆகியோர்.

இந்நாடகத்தின் கதைச்சுருக்கம், மணியப்ப முதலியார் என்பவருக்கு பழனியப்பன் என்ற மகனும் சாந்தா என்ற மகளும் உள்ளனர். பழனியப்பன் முற்போக்கு எண்ணம் கொண்டவனாக விளங்குகிறான். சாந்தா எதிர் வீட்டிலிருக்கும் ஏகாம்பரம் என்பவனை காதலிக்கிறாள். ஏகாம்பரம் ஏழை என்பதால் திருமணம் செய்து வைக்க மறுக்கும் முதலியார் சாந்தாவின் விருப்பமின்றி அழகப்பன் என்பவனுக்கு திருமணம் செய்து வைக்கிறார். இந்நிலையில் தனது காதலியை மறக்க ராணுவத்திற்கு வேலைக்குச் செல்கிறான் ஏகம்பரம். அழகப்பனும் குடித்தே இறந்து விடுகிறான்.

ராணுவத்திலிருந்து ஏகாம்பரம் திரும்பி ஊருக்கு வருகிறான். அவனுக்கு பழனியப்பன் மீண்டும் தன் தங்கை சாந்தாவை மணமுடிக்க விரும்புகிறான். ஆனால் பிற்போக்கு எண்ணம் கொண்டவரான மணியப்ப முதலியார் மறுக்கிறார். தகப்பன், பிள்ளை இருவருக்கும் தகராறு வருகிறது. மணியப்ப முதலியார் ஏற்பாடு செய்தவன் பழனியப்பனை கொலை செய்துவிடுகிறான். இறுதியில் சாந்தாவும் ஏகாம்பரமும் இணைகின்றனர்.

இந்நாடகத்தில் கலைஞர் தனது கொள்கைகளை மிக அதிகளவில் கையாண்டுள்ளார்.

Total Number of visitors: 1

No of users in online: 1