A few words about item

வாடிவாசல் - சி.சு.செல்லப்பா

குறிஞ்சி நிலத்தின் சாயல்; மருத நிலத்தின் மொழி வாசம் கலந்து, ஆறாம் அறிவிற்கும், ஐந்தாம் அறிவிற்கும் உள்ள பாகுபாடுகளை மிக அற்புதமாக விளங்க வைக்கும் வீர விளையாட்டு.

உண்மை உணர்வுகளை தெளிவான சிந்தனையுடன் எழுதப்பட்ட குறும்பட சிறுகதை. இது மானுடனுக்கும், மாக்களுக்கும் உள்ள பிணைப்பு மற்றும் நேசத்தின் வெளிப்பாடு மற்றும் இயற்கை நெறி.

ஏறு தழுவுதல் மிக நேர்த்தியான சொல். மண் செழிக்க ஏறு கட்டி விளைந்த தானியங்களை தழுவிக் கொள்ளும் பாட்டாளி அதற்கு துணை புரிந்த கால்நடைகளுக்கு செலுத்தும் அன்பின் வெளிப்பாடு. தன் பெருமை காட்ட, தனித்துவம், பாசம் மற்றும் பணிவுடன் வளர்த்து, ஒரு திருநாளில் தன் காளையின் திறமையை மற்றவர்களுக்கு முன்னால் விளையாட்டாக (வீர)நடை பெறச் செய்வது தான் "ஏறு தழுவுதல்" (மஞ்சுவிரட்டு, காளையை அடக்குதல் என பன்முக சொற்களால் கூறப்படுகிறது).

பாட்டாளிகள், ஜமீன்களின் பணிவு, பாசம், நேர்மை, வீரம் மற்றும் தனித்துவம் இதை வெளிப்படுத்தும் விளையாட்டு. இதை மண்வாசனை கலந்த சொல் குவியலால் பிரதிபலிக்கும் ஒரு புதினம் என்றும் கொள்ளலாம் "வாடி வாசலை".

"இவன்தந்தை என்நோற்றான் கொல்" என்னும் குறளுக்கு ஏற்ப "பிச்சி" கதாபாத்திரம் உறுதிப்படுத்துகிறது.

அறிஞர் அண்ணாவின் "வலம்புரி" சங்கின் உறவின் வெளிப்பாட்டை உயிர்ப்பித்துள்ள பாத்திரமாக "மருது".

எதற்கும் ஒரு நெறி கலந்த துணை தேவை என்பதை சிதில் அடையாத பழங்கால கல் தூணாய் "பாட்டய்யா".

மக்கள் ஆட்சியின் ஆளுமை, கட்டுப்பாடு, மற்றும் நேர்மை ஆகியவற்றை நிலைநாட்டும் "பண்ணையார்".

இவ்வளவு நெறியுடன் செயல்படும் வீர விளையாட்டில், களவு என்னும் காதல் இன்மையால் இதை ஒரு பகலாகவே(வெளிச்சம்) நினைக்கத் தோன்றுகிறது, இரவு பகலை ரசிக்கும் என் போன்ற வாசகர்களுக்கு.

ஜமீன்தாரின் தற்பெருமை நிலைக்க தன் மனம் மற்றும் செழுமை சேர்த்து வளர்த்த காளையை பலி கொடுப்பது.. சிறிதளவும் நியாயம் அல்ல. இங்கு தான் விலங்கு வதை சட்டம் கையாளப்பட வேண்டும்.

Total Number of visitors: 126

No of users in online: 108