A few words about item

ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் - எஸ்.ராமகிருஷ்ணன்

இது குழந்தைகளுக்கான மிகச் சிறந்த புத்தகம். வாசிக்கும் திறனை மேம்படுத்த கூடிய அற்புதமான புத்தகம்.

குழந்தைகளின் கற்பனை சக்தியை அதிகரிக்க நினைக்கும் பெற்றோர்கள் தேர்வு செய்ய வேண்டிய முதல் புத்தகம் ஆயிரத்தொரு அரேபிய இரவுகள்.

வெகுஜனங்களின் இரசனைக்கு ஏற்ப இவை இயற்றப்பெற்ற இருந்தாலும் இந்தக் கதைகளில் மறைந்துள்ள நீதிகள் பெரியவர்களுக்கும் உதவக்கூடிய முறையில் எழுதப்பட்டுள்ளன.

இல்வாழ்க்கையில் மாத்திரமின்றி சமுதாயத்திலும் நாம் பழகக்கூடிய ஒவ்வொரு நபரிடமும் பரஸ்பரம் உண்மையும் அன்பும் நேர்மையும் நம்பிக்கையும் கொள்வது முக்கியம் என்பதே இந்த ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் கதையின் சாராம்சம்.

ஷாமர்காண் என்ற நாட்டின் மன்னனாக பொறுப்பேற்கும் ஷாஜமான் என்பவரிடமிருந்து இந்தக் கதை தொடங்குகிறது.

மனைவியின் நம்பிக்கை துரோகத்தால் மனம் வெறுத்துப் போகும் ஷாஜமான் நாட்டில் உள்ள இளம் பெண்களைத் திருமணம் செய்து கொல்கிறான். அதை தடுக்கும் வகையில் அவனிடம் அமைச்சராக பணிபுரியும் ஒருவரின் மகள் முன் வருகிறாள் அவள் மன்னரை மனமுவந்து திருமணம் செய்து கொண்டு அவருடைய கொலைவெறியை தணிக்கும் வகையில் ஒவ்வொரு இரவும் அவனுக்கு கதை கூறுகிறாள். அந்த கதைகளில் இப்பொழுது நாம் வாசிக்கும் இந்த ஆயிரத்தொரு அரேபிய இரவுகள் புத்தகம்.

Total Number of visitors: 16

No of users in online: 7