யாதும் ஊரே யாவரும் கேளிர் - க்ளிக் மதுரை முரளி
*யாதும் ஊரே யாவரும் கேளிர்!* நூலை முழுவதும் வாசித்தேன். மிக அருமையான சிறுகதை தொகுப்பு அது.
யாதும் ஊரே யாவரும் கேளிர்! என்ற முதல் கதையின் அதே கருவில் நான் ஒரு கதை எழுதி அது தேவியில் பிரசுரம் கண்டது. கரு மட்டும் தான் ஒன்று. ஆனால், அவரவர்கள் கோணத்தில் கதை விரிந்திருக்கிறது. கதை அருமை. இந்த காலக்கட்டத்திற்கு மிகவும் தேவைப்படும் கதை.
காங்டாக் காதல் மிக அருமையான த்ரில்லர். விறுவிறுப்பாக கதை நகர்ந்தது. இடையிடையே, காங்டாக்கின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளைப் பற்றி கூறியது சிறப்பு.
மெய்யழகி கதை மிக மிகச் சிறப்பு. காலத்திற்கு தேவையான, நம் பண்பாட்டை கட்டிக் காக்கும் கதை. அருமை.
விதி...மதி கதையும் மிக நன்றாய் இருந்தது. குழந்தைகளுக்கான கதையில் பெரியவர்களுக்கும் மெஸேஜ் வைத்தது மிக அருமை.
வாக்கு, வழக்கு ஒரு நல்லக்கதை, வித்தியாசமான க்ளைமேக்ஸ். கலிகாலக் கொடுமைகள், கூடுதல் சுமை போன்ற கருத்துக்கள் மிக அருமை.
கோ...ட் (கோலிவுட்) கதையின் உள்ளடக்கமும், கதைப் போக்கும் ரசிக்கும்படி இருந்தன. முடிவு மனதிற்கு நிறைவைத் தந்தது.
விஸ்வரூபம் கதையில் சங்கர் கணேஷின் பாத்திரப்படைப்பு அற்புதம். ஒவ்வொரு பாத்திரத்தையும் செதுக்கி, செதுக்கி வடித்திருப்பது கதையை படிக்கையில் உணர முடிந்தது.
அன்பு ஆட்டோ, கதை நன்றாக இருந்தது. அதில் ஆட்டோ, ஜீவரேகாவை வீட்டில் இறக்கி விட்டு போக, அங்கு ஒரு எதிர்பாராத திருப்பம் வைத்து, படிப்பவர்களின் எதிர்பார்ப்பை தூண்டி விட்ட விதம் சூப்பர்.
புது ரத்தம் கதை நல்லாயிருந்தது. இப்படிப்பட்ட கதைகள் நமது சமூகத்திற்குத் தேவை.
இப்பவே, இப்பவே கதையில் விமலாவின் பாத்திரப்படைப்பு அருமை.
அனைத்து கதைகளும், மிக நன்றாகவே இருந்தன. இன்னும் இது போன்ற பல நல்ல கதைகளை படைக்க, ஆண்டவன் துணை நிற்கட்டும். வாழ்த்துகளும், பாராட்டுக்களும், அன்பும். இந்த கதைகளை வாசிக்கும் அனுபவத்தை ஏற்படுத்தி தந்தமைக்கு பெரு மகிழ்ச்சியும், மனமார்ந்த நன்றியும்.