A few words about item

வில்லோடு வா நிலவே - வைரமுத்து

சரித்திர நாவலான இப்புத்தகத்தை கவிதை நூல் போல் எழுதியிருப்பது சிறப்பாக உள்ளது. சேர மன்னன் வரலாற்றின் சில முக்கிய நிகழ்வுகளை இப்புத்தகத்தின் மூலம் தெரிந்து கொள்வதில் இந்நூல் முக்கிய இடம் பெறுகிறது. மன்னன் சேரலாதனுக்கும் பெண் புலவர் நச்செள்ளைக்கும் இடையேயான காதல் கதையைப் படிக்கும் போது சரித்தி நாவலா? அல்லது காதல் கவிதையா? என்றே வியப்பாக இருக்கிறது.

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனக்கே உரித்தான அழகிய தமிழில் இப்புத்தகத்தை எழுதியுள்ளார். இக்கதையில் காதல், காமம், வீரம், அரசியல், போர்க்களம், நால்வர்ண பாகுபாடு, சூழ்ச்சி, நட்பு, பாசம் போன்ற பல நிகழ்வுகளும், உணர்ச்சிகளும் இடம் பெறுகிறது.

நால்வர்ண பாகுபாடு என்னவெல்லாம் செய்கிறது என்பதை தெளிவாக விளக்கியுள்ளார் இந்நூலின் ஆசிரியர். மன்னனாக முடிசூட்டப்பட்ட சேரலாதன், நால்வர்ண பாகுபாடு தன் வாழ்வில் நுழைவதைக் கண்டு வெறுத்து ராஜவாழ்க்கையே வேண்டாம் என்று துறந்துவிட்டதாகக் கூறப்பட்டிருப்பது வியப்பை அளிக்கிறது

அரசபதவிக்காக பேராசை கொள்ளும் அரசர்கள் மத்தியில், அக்காலத்திலேயே மன்னன் சேரலாதன் நாடு துறந்து, காடு புகும் செயல் அருமை!.

Total Number of visitors: 252

No of users in online: 239