A few words about item

ஹிரோஷிமாவில் மணி ஒலிக்கிறது - எஸ்.ராமகிருஷ்ணன்

எழுத்தாளர் ராமகிருஷ்ணன் அவர்கள் தனது ஜப்பான் பயணத்தை "ஹிரோஷிமாவில் மணி ஒலிக்கிறது" என்ற பெயரில் ஒரு புத்தகமாக எழுதியுள்ளார். இது ஒரு பயண கட்டுரை. முதல் பதிப்பு டிசம்பர் 2014. "பூவுலகின் நண்பர்கள்" வெளியீடு.

ஜப்பானில் எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் கண்ட முதல் அம்சம் அமைதியின்றும் பொது இடங்களில் யாரும் உரத்த பேசிக் கொள்வதில்லை ஆர்வாரம் இல்லை அமைதியாக நிழல்கள் நடந்து செல்வது போல கடந்து போகிறார்கள் சாலைகள் வீடு பணியிடம் எங்கும் பேரமுதி நிலவுகிறது எதிலும் பதற்றம் இல்லை நெருக்கடியான ரயில் பயணத்திலும் கூட புத்தகம் படித்த படியோ இசை கேட்டப்படியே தான் வருகிறார்கள் பொது இடங்களில் சுத்தமாக வைத்துக் கொள்வது அடுத்தவரை இடிக்காமல் தள்ளாமல் நடப்பது வரிசையாக அமைதியாக காத்து நிற்பது இனிமையாக பேசுவது பரஸ்பரம் மரியாதை என அவர்களின் வாழ்க்கை முறையில் இருந்து கற்றுக் கொள்ள எவ்வளவோ இருக்கிறது என்று ஜப்பானியர்கள் பற்றி கூறுகிறார்.

அதே நேரத்தில் ஜப்பானின் இன்றைய வாழ்க்கை முறை பல விஷயங்களில் அமெரிக்காவில் பின்பற்றுகிறது என்றாலும் தனிமங்களின் ஒழுக்கம் மற்றும் பண்பாட்டு விஷயங்களில் அது தனது மரபு கைவிடவில்லை என்றும் கூறுகிறார். மேலும் இப்போது காணும் ஜப்பான் அமைதியின் வடிவமாக இருந்தாலும் போருக்கு முந்திய ஜப்பான் வன்முறையின் உச்சபட்ச அடையாளமாக இருந்தது என்றும் சீனாவை ஆக்கிரமித்துக் கொண்ட பிறகு அங்குள்ள பெண்களை பாலில் வன்புணர்ச்சி உள்ளாக்கியதோடு பச்சைக் குழந்தைகளை ஆகாயத்தில் தூக்கிப் போட்டு கீழே துப்பாக்கிக் கத்தியை நீட்டினார்கள் என்றும் அதேபோல் போர்னியோ தீவைக் கைப்பற்றிய ஜப்பான் அங்குள்ள நூற்றுக்கணக்கான பழங்குடி மக்களைக் கொன்று குவித்தது என்றும் கூறுகிறார். மேலும் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் ஜப்பான் தனக்கு நிலைமையை சாதகமாக்கி கொண்டு தன்னுடைய எல்லைகளை விரிவாக்கும் முயற்சியில் மலேசியா சிங்கப்பூர் தாய்லாந்து மற்றும் பர்மாவை ஆக்கிரமித்தது என்றும் கூறுகிறார்.

அந்த சமயத்தில் சாயம் (தாய்லாந்து) முதல் பர்மா வரை ஒரு ரயில் பாதை போடுவதற்கு ஜப்பான் அரசு முடிவு செய்த பொழுது அதற்கு போர் கைதிகளாக இருந்த ஆங்கிலேய மற்றும் ஆஸ்திரேலிய படைவீரர்களைப் பயன்படுத்தினர், மேலும் பல்லாயிரம் தமிழர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் என்றும் இந்த ரயில் பாதை போடும் போது தமிழர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை "சயான் மரண ரயில்"(ஆசிரியர் : சண்முகம்) என்ற நாவல் விவரிக்கிறது என்றும் கூறுகிறார்.

இரண்டாம் உலக யுத்தத்தில் ஜப்பானின் அரசராக இருந்த "ஹிரோஹிட்டோ" போரை விரும்பவில்லை என்றும் ஜெனரல் டோஜோ ஜப்பான் ஜெயித்து விடும் என்ற நம்ப வைத்து தானே முடிவு செய்து அமெரிக்காவின் பெர்ல் துறைமுகத்தைத் தாக்கி அமெரிக்காவை வம்பு சண்டைக்கு இழுத்தார் என்றும் எழுதியுள்ளார்.

அதே நேரத்தில் ஹிட்லரின் படை அணு ஆயுதம் தயாரிப்பதாக நம்பிய அமெரிக்கா தானும் அணுகுண்டினை உருவாக்க "மன்ஹாட்டன்" திட்டம் (Manhattan Project)என முதல் அணுகுண்டை உருவாக்கும் பணியை மேற்கொண்டது.ஹிட்லர் இறந்தபின் ஜெர்மனி சரண் அடைந்த பிறகு போரை நிறுத்த மறுத்த ஜப்பான் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பல் ஒன்றின் மீது குண்டு வீசியது. யுத்தம் மேலும் தொடர்ந்தால் நிலை விபரீதம் ஆகிவிடும் என நினைத்த அமெரிக்கா அணுகுண்டு வீசுவது தவிர வேறு வழி என முடிவுக்கு வந்த அமெரிக்க அதிபர் ட்ரூமன் ஜப்பான் மீது அணுகுண்டை வீசுமாறு ஆணையிட்டார். ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டின் பெயர் "லிட்டில் பாய்".நாள்: ஆகஸ்ட் 6 காலை 8:15.

குண்டு வெடித்த போது ஆயிரம் சூரியன்கள் ஒன்றாக வெடித்தது போல இருந்தது என்றும் ஹிரோஷிமா நகரம் அழிந்த பிறகும் ஜப்பான் சரண் அடைய மறுத்ததால் மற்றொரு குண்டு நாகசாகி மீது வீசப்பட்டது என்றும் கூறுகிறார். நாகசாகியை தாக்கிய அணுகுண்டு "ஃபாட்மான்"(குண்டு மனிதன்).

ஜப்பான் அமெரிக்காவின் சரண் அடைந்ததற்கு அணுகுண்டு வீச்சு மட்டும் காரணம் இல்லை. மறுபக்கம் ரஷ்யா ஜப்பானை நோக்கி எல்லை வழியாகப் படையோடு முன்னேறிக் கொண்டிருந்தது. ஆகவே எங்கே கம்யூனிஸ்டுகள் ஜப்பானை கைப்பற்றி விடுவார்களோ என்ற பயத்தில் ஜப்பான் உடனடியாக அமெரிக்காவிடம் சரணடைந்தது என்று கூறுகிறார் ஆசிரியர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள்.  மேலும் அணுகுண்டு வீச்சினால் ஏற்பட்ட வெப்பத்தின் அளவு, இறப்பு, அதனால் ஏற்பட்ட மக்களின் நரக வேதனை, ஜப்பானின் பிறகு நடந்த மாற்றங்கள் என விரிவாக எழுதியுள்ளார்.

ஹிரோஷிமாவின் மீது குண்டு போடுவதற்கு திடீரென  ஒரு நாளில் ஏற்பட்டதல்ல என்றும் அது நீண்ட நாள் திட்டம், அதை தந்திரமாக நிறைவேற்றி விட்டது அமெரிக்கா என்றும் சுட்டிக் காட்டியுள்ளார். அணுகுண்டு வீச்சினால் கறுப்பு மழை பொழிந்ததாக உயிர் தப்பிய ட்சுடோமு யாமகுச்சி என்பவர் பதிவு செய்ததை குறிப்பிட்டதோடு அவர் ஒருவர் தான் இந்த இரண்டு அணுகுண்டு வீச்சிலும் தப்பி பிழைத்தவர் என்றும் கூறுகிறார்.

அணு ஆயுத வீச்சிற்கு உண்டான போதும் ஜப்பான் அணு உலைகளை தடை செய்யவில்லை. நிறைய அணு உலைகள் அங்கே உள்ளன. அவற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறார்கள். ஜப்பான் வரலாற்றில் இருந்து பாடம் கற்கவே இல்லையோ என்றும் தோன்றுகிறது என தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.

ஜப்பானின் புகழ்பெற்ற "சாமுராய்"களின் வளர்ச்சி, அவர்களுடைய வாழ்க்கை முறை, அரசர்களின் ஆட்சியில் அவர்களுடைய ஆதிக்கம் மற்றும் அவர்களை பற்றி எடுக்கப்பட்ட திரைப்படங்கள் என சாமுராய்களின் ஒரு பக்கத்தை சுட்டிக்காட்டி உள்ளார்.

அதே நேரத்தில் இந்த புத்தகத்தில் ஜப்பானியர்களுக்கும் தமிழர்களுக்கும் உள்ள ஒற்றுமைகளாக நான் கண்ட, புரிந்து கொண்ட சில விஷயங்கள் சில.

1. ஜப்பானியர்கள் இயற்கையை வழிகாட்டும் சமயமாக கொண்டிருப்பது (தமிழர்கள் பொங்கலை இயற்கையின் அம்சமாக கொண்டாடுவது போல).

2. கோவிலுக்கு செல்லும் பொழுது ஜப்பானியர்கள் தங்கள் கஷ்டங்களை போக்கிக் கொள்ள காணிக்கை செலுத்துவது பெயர் எழுதி போடுவது மரங்கள் கயிறு கட்டி தொங்க விடுவது போன்ற பழக்கங்கள்.

3. "புராகுமின்"(Burakumin) ஜப்பானில் உள்ள தீண்டத்தகாத, தாழ்த்தப்பட்ட சமூகம். இவர்கள் தனிக் குடியிருப்புகளில் வாழ்ந்தனர். மெய்ஜி பேரரசர் காலத்தில் இந்த தீண்டாமைக் கொடுமையை அகற்றினாலும் இன்றும் ஜப்பானியர்கள் திருமண உறவு வைத்துக் கொள்வதில் தயக்கம்.

இப்புத்தகத்தில் உள்ள மிகப்பெரும் குறை பக்கத்துக்கு பக்கம் எழுத்துப் பிழைகள்.

Total Number of visitors: 232

No of users in online: 141