புத்தக மதிப்புரை- பத்திரிக்கைகள்

 • பசுமை இலக்கியத் திசைகாட்டி

  சுற்றுச்சூழல், காட்டுயிர்கள், இயற்கை குறித்த நெடிய வரலாறு கொண்டது தமிழ் மொழி. இயற்கை சார்ந்த அவதானம்-அக்கறை என்பது தனித்த ஒன்றாக இல்லாமல், தமிழ்ப் பண்பாட்டுடன் இயல்பாகவே முகிழ்ந்த ஒன்றாக இருந்தது. நாடு விடுதலை பெற்ற பிறகு உள்ளூர் மொழியில் இயற்கை குறித்து மா. கிருஷ்ணன் உள்ளிட்டோர் எழுதினார்கள் என்றாலும் அறிவியல், இயற்கை குறித்த கவனம் பரவலாகவில்லை....

  மேலும்...
 • கடக்க முடியாத தொலைவு

  சாதியைக் கடந்து திருமணம் செய்துகொள்ளும் ஒரு பெண், சாதியத் தன்னிலைகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டு எவ்வாறு தன்னைப் பலிக்கொடுக்க வேண்டியுள்ளது என்ற யதார்த்தத்தை மிக நுட்பமாகவும், ஆழமாகவும் முன்வைக்கிறது இமையத்தின் ‘செல்லாத பணம்’ நாவல்.சமூக அமைப்பின் ‘உள்ளே’, ‘வெளியே’ என்ற கருத்தாக்கத்தின் ஊடாக இந்நாவலை அணுகலாம்....

  மேலும்...
 • கலைகள் வளர்த்த காவிரி

  தமிழ்ப் புனைவெழுத்தாளர்கள், கதைகளைக் காட்டிலும் கட்டுரைகள் எழுதுவதில் பேரார்வம் காட்டிவரும் காலமிது. நாள்தோறும் மணிதோறும் வாசகர்களோடு உரையாட அவர்களுக்கு அதுவொரு வாய்ப்பு. புனைவுகள் தவிர வேறு வகைமைகளில் எழுதாத அபூர்வ விதிவிலக்குகளும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கோணங்கி. அவரும் தற்போது கட்டுரை இலக்கியத்துக்குள் காலடி...

  மேலும்...
 • கலைகள் வளர்த்த காவிரி

  தமிழ்ப் புனைவெழுத்தாளர்கள், கதைகளைக் காட்டிலும் கட்டுரைகள் எழுதுவதில் பேரார்வம் காட்டிவரும் காலமிது. நாள்தோறும் மணிதோறும் வாசகர்களோடு உரையாட அவர்களுக்கு அதுவொரு வாய்ப்பு. புனைவுகள் தவிர வேறு வகைமைகளில் எழுதாத அபூர்வ விதிவிலக்குகளும் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் கோணங்கி. அவரும் தற்போது கட்டுரை இலக்கியத்துக்குள் காலடி...

  மேலும்...
 • பெருங்கூட்டத்தில் தனிமை கொண்டு திரியும் கதைகள்

  சட்டென்று வசீகரித்துவிடுகின்றன ஜீ.முருகனின் சிறுகதைகள். முதலில் அவற்றின் மொழிநடை. முரண்டுபண்ணாமல் உடன் நடக்கும் செல்லக் குழந்தைபோல் அவருக்கு ஒத்துழைக்கிறது மொழி. அடுத்தது, சிறுகதையின் நீளம். அநேகமாக எல்லாக் கதைகளுமே சிக்கனமாகவும் எதை மறைக்க வேண்டும், எதை வெளிப்படுத்த வேண்டும் என்ற தெளிவுடனும் எழுதப்பட்டுள்ளன. ஆழமான சிறுகதைகளுக்கும் நீளமான...

  மேலும்...
 • மனசாட்சியை தட்டி எழுப்பும் நூல்

  “எவிடன்ஸ் கதிர்” என்ற பெயரைக் கேள்விப்படாமல் இருக்க முடியாது. தலித் மக்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகள், சாதியப் பாகுபாடுகள் ஆகியவற்றிற்கெதிராகக் களப்பணியில் ஈடுபட்டு வருபவர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்டரீதியாக நீதியை பெற்றுத்தர இடைவிடாது பாடுபட்டு வருபவர். கடந்த 20 ஆண்டு காலமாக தான் தலையிட்ட பிரச்சனைகள், எதிர் கொண்ட சவால்கள்,...

  மேலும்...
 • வெயிலின் பாடல்

  கவிதை, கட்டுரை, விமர்சனம் எனத் தொடர்ந்து இயங்கிவரும் தமிழச்சியின் இந்தக் கவிதைத் தொகுப்பு அழகியலாய் நகைக்கிறது; தார்மிகமாய்ச் சீறுகிறது; சில இடங்களில் சிணுங்குகிறது; பிற இடங்களில் ஆவேசம் கொள்கிறது; மரபு – தொன்மங்களுக்குள் ஆழ்ந்து, இக்கணத்துப் பிரக்ஞைத் தெறிப்புக்கு அந்த ஆவேசத்தைக் கொண்டுவந்து சேர்த்துவிடுகிறது. காதலில் கரையவும் செய்கிறது....

  மேலும்...
 • ஈழம் அமையும்

  தொன்மையும், பெருமையும் மிக்க தமிழினத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் 2009ஆம் ஆண்டில் இலங்கை முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த படுகொலையைப் போன்ற அவல நிகழ்ச்சி நடைபெற்றதில்லை. என்றென்றும் தமிழர்களால் நினைத்து நினைத்து நெஞ்சம் குமுறச் செய்யும் இந்நிகழ்ச்சியை நெக்குருக வைக்கும் ஆவண ஆதாரங்களுடன் பதிவு செய்திருக்கிறார் நண்பர் கா. அய்யநாதன் அவர்கள்.சிறந்த...

  மேலும்...